
மாறிய ஆட்டம்
அப்போது போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் நடுவர்கள் வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தனர். இதனை அடுத்து வெறும் சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து நியூசிலாந்து அணியினர் வீசினார்கள். இதனை பயன்படுத்திக் கொண்ட பாகிஸ்தான் வீரர்கள் சிக்சர் பவுண்டரி என அடிக்க ஆட்டம் அப்படியே பாகிஸ்தான் பக்கம் சென்றது.

நிர்பந்தம்
எனினும் போதிய வெளிச்சம் இல்லை என்று போட்டியை நடுவர்கள் முடித்து விட்டனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டி வில்லியர்ஸ் கிரிக்கெட் விதிகளில் இந்தக் குறை நீண்ட நாட்களாகவே இருக்கிறது. பந்து வீசும் அணி போதிய வெளிச்சம் இல்லாத நேரத்தில் சுழற்பந்துவீச்சை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நடுவர்கள் கூறுகிறார்கள். இதனை மாற்ற வேண்டும் என நான் நினைக்கிறேன். இதன் காரணமாக வெறும் சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து ஆட்டத்தை முடிக்க நிர்பந்தம் செய்யப்படுகிறார்கள்.

ஒரு தரப்புக்கு சாதகம்
வேகப்பந்து வீச்சாளர்களை அறிமுகம் செய்யும் முறையை கொண்டு வர வேண்டும். வேகப்பந்துவீச்சை பயன்படுத்தி பந்து வீசும் அணி போட்டியை அதற்கு முன்பே முடித்து விடும். பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றி பெற ஐந்து ரன்கள் தான் இருக்கும் என்று வைத்துக் கொள்வோம். அப்போதாவது பந்து வீசும் அணி வேக பந்துவீச்சார்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.இல்லை என்றால் இது ஒரு தரப்புக்கு சாதகமாக மாறிவிடுகிறது என்று டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

ரசிகர்கள் வரவேற்பு
டிவில்லியர்ஸ் இனி இந்த கருத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மைதானத்தில் மின்விளக்குகள் உள்ள நிலையில் ஏன் போட்டி வெளிச்சம் இல்லை என்று முன்கூட்டியே நிறுத்தப்படுகிறது ?ஏன் வேகப்பந்துவீச்சாளர்களை ஆட்டத்தின் கடைசி நேரத்தில் பயன்படுத்த முடிவதில்லை? இதற்கு ஐசிசி உடனடியாக தீர்வு காண வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











