இந்தியா-பாக். மோதும் உலகக்கோப்பை அரையிறுதி: மொகாலியில் பலத்த பாதுகாப்பு
மொகாலி: வரும் புதன்கிழமை மொகாலியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் அரையிறுதிப் போட்டி நடக்கிறது. இதையொட்டி மொகாலி மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உலகக் கோப்பை அரைஇறுதிப் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதவுள்ளன. மொகாலியில் புதன்கிழமை நடைபெறவுள்ள இந்தப் போட்டி இருநாட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
போட்டியை மேலும் சூடாக்கும் வகையில், பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுக்க, அவரும் ரைட் வர்றேன் என்று கிளம்பி விட்டார்.
நேற்று வாகா-அட்டாரி எல்லையின் இரு புறத்திலும் கிரிக்கெட் ரசிகர்கள் திரண்டனர். அவர்கள் அவரவர் நாட்டு அணிக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். இந்தியர்கள் ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத், பாரத் மாதா வாழ்க என்று கோஷமிட்டனர். பாகிஸ்தானியர்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழங்கின்ர்.
இந்தியர்கள் இந்தியக் கொடியையும், பாகிஸ்தானியர்கள் அவர்களின் தேசியக் கொடியையும் அசைத்தனர்.
இந்தநிலையில், அரையிறுதி போட்டியை முன்னிட்டு மொகாலி மைதானத்தில் பலத்த பாதுகாப்பு எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போட்டி நடக்கும் சமயத்தில், மைதானம் உள்ள பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications