தடையிலிருந்து தப்ப பிக்ஸிங்கில் ஈடுபட்டவர்களை போட்டுக் கொடுக்க ஆமிர் முடிவு

தன் தலை மீது தொங்கும் வாழ்நாள் தடை என்ற பேராபத்திலிருந்து தப்பிப்பதற்காக இந்த முடிவுக்கு ஆமிர் வந்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து டெய்லி டெலிகிராப் இதழ் வெளியிட்டுள்ள செய்தியில்,
ஸ்பாட் பிக்ஸிங் மற்றும் மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் தொடர்பாக போலீஸ் மற்றும் ஐசிசி விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க ஆமீர் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்த சூதாட்டம் தொடர்பான அனைத்து தகவல்களையும், அதில் ஈடுபட்டிருப்போரையும் ஐசிசிக்குத் தெரிவிக்க ஆமிர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது என்று அந்த செய்தி தெரிவிக்கிறது.
சூதாட்டப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் சல்மான் பட், ஆமிர் மற்றும் முகம்மது ஆசிப் ஆகியோருக்கு தற்காலிக தடையை ஐசிசி விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐசிசியிடம் அனைத்துத் தகவல்களையும் போட்டுக் கொடுக்க ஆமிர் முடிவு செய்திருப்பதால் பிக்ஸிங்கில் ஈடுபட்டுள்ள பல்வேறு வீரர்கள் பீதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:41 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications