Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணி தோத்து போச்சுன்னு கவலையா.. கண்ணு வேர்க்குதா.. கலாய்க்கலாம் வாங்க!

சிட்னி: உலக கோப்பை அரையிறுதி போட்டியில், இந்திய அணி தோல்வியுற்ற நிலையில், சிலர் விமர்சனங்களையும், பலர் தங்கள் ஆதரவையும் அணிக்கு தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்கள் பலருக்கும் இன்னும் நேற்றைய சோகம் மாறவில்லை. இடுக்கண் வருங்கால் நகுக என்ற பொய்யா மொழியார் வாக்குக்கு ஏற்ப, சிலர் நமது அணியை மனது நோகாமலும் கலாய்த்து மகிழ்ந்துள்ளனர். இவ்வாறு உருவாக்கப்பட்டு, சோகத்தை மறந்து ரசிகர்களை சிரிக்க வைக்கும் மீம்ஸ் சிலவற்றை இப்போது பார்ப்போம்.

ஃபிகர பார்த்ததும் ஃபிரண்ட கட் பண்ணிட்டியே..

ஃபிகர பார்த்ததும் ஃபிரண்ட கட் பண்ணிட்டியே..

மின்னலே திரைப்படத்தில் வரும் காட்சி இது. ஹீரோயினை பார்த்ததும், ஹீரோ பைக்கில் இருந்து குதித்து ஓடிவிட, பின்னால் உட்கார்ந்திருக்கும் நண்பன் லாரிக்கு அடியில் சிக்கிக்கொள்வார். இதில் ஹீரோயின் யார், விட்டுவிட்டு ஓடிய ஹீரோ யார் என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். கோஹ்லி செய்த தவறுக்கு அவரின் காதலியை எந்த வகையிலும், குறை சொல்வதை ஏற்க முடியாது என்பதால், இந்த படம் ரசிப்பதற்கு மட்டுமே.

இது அல்லவா காதல்

இது அல்லவா காதல்

இந்த மீம்ஸ்சில், அனுஷ்காவுக்கு ஆதரவாக நடந்த சம்பவத்தை அப்படியே, மாற்றியுள்ளார், இதை உருவாக்கியவர். எல்லோரும் அனுஷ்காவை குறை சொல்றீங்களே.. கோஹ்லி 13 பந்தில் வெறும் 1 ரன் அடிப்பதை பார்க்க இந்தியாவில் இருந்து சிட்னிவரை பல மணிநேரம் பயணித்து சென்றவர்தானே அனுஷ்கா. அப்படியானால், அவர் எந்த அளவுக்கு கோஹ்லி மீது காதல் வைத்துள்ளார் என்பதை தெரிந்துகொள்ளுங்கள் என்று அனுஷ்காவுக்கு ஆதரவு கரம் நீட்டுகிறது இந்த மீம்ஸ்.

திருந்துங்கப்பா

திருந்துங்கப்பா

இலங்கை காலிறுதியிலேயே தோற்று வெளியேறியது, தென் ஆப்பிரிக்கா இதுவரை உலக கோப்பையையே வெல்ல முடியவில்லை. ஆனால் அந்த நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு தாய் நாட்டில் எப்படி வரவேற்பு அளிக்கப்படுகிறது என்பதையும், நடப்பு சாம்பியனான இந்தியா, அரையிறுதியில் தோற்றதற்காக நமது நாட்டில் எப்படி கலவரம் செய்யப்படுகிறது என்பதையும் இந்த படம் சிம்பிளாக சொல்கிறது.

ஏழேழு தலைமுறையும் வாழும்

ஏழேழு தலைமுறையும் வாழும்

லிங்கா திரைப்படத்தில் வரும் ரஜினி கதாப்பாத்திரம், அணை கட்டுவதற்காக அனைத்து சொத்துக்களை இழப்பதை பார்த்து எக்காளமிடும், வெள்ளைக்காரரை போல, டோணியும், கிளார்க்கும் இருப்பதாக கிரியேட்டிவாக சிந்தித்துள்ளார் இந்த வலைஞர்.

டிவிய ஆன் செய்ய வைத்தவரே..

டிவிய ஆன் செய்ய வைத்தவரே..

சச்சின் அவுட் ஆனதும், டிவியை ஆப் செய்து கொண்டிருந்த இந்திய ரசிகர்கள் டோணியின் வருகைக்கு பிறகுதான், கடைசிவரை டிவி பார்க்க ஆரம்பித்துள்ளனர். கடைசி கட்டத்தில் வெற்றிபெறச் செய்ய டோணி உள்ளார் என்ற நம்பிக்கை அதற்கு காரணம்.

தோற்றால் ஓடிப்போகாதீங்க..

தோற்றால் ஓடிப்போகாதீங்க..

இந்தியா வெற்றி பெறும்போதெல்லாம், எதிரணிகளை கலாய்த்து மீம்ஸ் போட்ட நம்பவர்கள், தோற்கும்போது மட்டும், அதையும் சகஜமாக எடுக்காமல் திட்டி தீர்ப்பதை விமர்சனம் செய்கிறது இந்த மீம்ஸ்.

இரு தல..

இரு தல..

கிரிக்கெட் தல டோணியும், நடிகர் தல அஜித்தும், தோற்றாலும் ரசிகர்களை இழக்கமாட்டார்கள் என்று ஒப்பிடுகிறது இந்த மீம்ஸ். அஜித் ரசிகர் இந்த மீம்ஸ்சை உருவாக்கியிருப்பார் போலும்.

நீ, வாடா..வாடா..

நீ, வாடா..வாடா..

நம்ம வடிவேலு இல்லாமல், மீம்ஸ்கள் முடிவடையுமா என்ன.. எதிராளியிடம் சண்டைபோட ஒவ்வொரு இடமாக கூப்பிட்டு, கடைசியில் வீட்டுக்கு வா என்று சொல்லி தப்பிக்கும் வடிவேலு கதாப்பாத்திரத்தில் இந்திய அணியை சித்தரித்துள்ளார் இந்த வலைஞர்.

கலங்காதே, கரையாதே..

கலங்காதே, கரையாதே..

டோணியின் கண்ணீரை பார்த்து, அதை துடைக்க உருவாக்கப்பட்ட மீம்ஸ் இது..

Story first published: Friday, March 27, 2015, 15:17 [IST]
Other articles published on Mar 27, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+