சென்னை : கோடார்ட் தலைமையில் முதல் முறையாக மேற்கு இந்திய தீவுகள் அணி 1948 - 49 ல் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். 5 டெஸ்டுகளிலும் இந்திய அணி கேப்டன் லாலா அமர்நாத்தால் டாஸ் வெல்ல முடியவில்லை. அது மட்டும் அல்ல முதல் டெஸ்டில் டாஸ் போடப் பட உபயோகித்த தனிப்பட்ட தங்க நாணயமும் அவர் கை நழுவி போய் விட்டது.
எதிரணி கேப்டன் கோடார்ட்க்கு பரிசாக சென்று விட்டது.
டான் ப்ராட்மன் அவரது கடைசி டெஸ்டில் ஒரே ஒரு இன்னிங்ஸ் தான் பேட்டிங் ஆட சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் ரன் எடுக்கவில்லை. அவுட் 0.
மற்றும் ஒரு புகழ் பெற்ற வீரர் டாக்டர் டபுள்யூ ஜி கிரேஸ் அவரது கடைசி இன்னிங்சில் எடுத்த ரன் 1.

மூன்று சகோதரர்கள் டெஸ்டுகளில் ஆட்டங்களை சேர்ந்து துவக்கியுள்ளனர்.
1880ல் இங்கிலாந்து அணியின் க்ரேஸ் சகோதரர்கள்
1984 ல் இலங்கையின் வெட்டுமணி சகோதரர்கள்
1997 ல் ஜிம்பாப்வேயின் பிளவர் சகோதரர்கள்.
1900 ஆம் ஆண்டு முதன் முதலில் ஒரு ஓவருக்கு 6 பந்துகள் என்ற கணக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
அறிமுக டெஸ்டில் அதிக பட்ச ரன்களை குவித்தவர் இங்கிலாந்தின் டிப் பாஸ்டர். சிட்னியில் 1903 ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக. ரன்கள் 287.
.அறிமுக டெஸ்ட் மற்றும் 100 வது டெஸ்ட் இரண்டிலும் சதங்கள் குவித்த இரு வீரர்கள் கார்டான் கிரீன்னிட்ஜ் (மேற்கு இந்திய தீவுகள் அணி ) ஜாவித் மியந்தாத் ( பாகிஸ்தான்)
அறிமுக டெஸ்டில் ஒரு இன்னிங்சில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியவர் ஆஸ்திரேலிய வீரர் ஆல்பர்ட் ட்ரோட். எடுத்தது 8 விக்கெட்டுகள் இங்கிலாந்து அணிக்கு எதிராக, 1895, ல் அடிலேய்ட் டெஸ்டில்.
சுனில் கவாஸ்கர் விளையாடிய அறிமுக டெஸ்டில் அவருடன் ஆட்டத்தை துவக்கியவர் அசோக் மன்காட். கவாஸ்கர் முதல் வீரர் டெஸ்டுகளில் 10000 ரன்கள் குவித்தவர். அப்பொழுது அசோக் மன்காட் டிவியில் வர்ணனையாளராக அந்த அகமதாபாத் டெஸ்டில் பணி புரிந்தார்.
ஆலன் ஹில் ( இங்கிலாந்து ), பால் ஹிப்பர்ட், பில் வுட்புல் ( ஆஸ்திரேலிய வீரர்கள் ) மூவரும் தலா ஒரு முதல் தர ஆட்டங்களில் சதங்கள் எடுத்தனர். இவர்கள் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல்.இந்த சதங்களை எடுத்தார்கள்.
1932 ல் மெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்க அணியை வென்றது ஒரு இன்னிங்ஸ் 72 ரன்கள் வித்தியாசத்தில். ஸ்கோர்
தென் ஆப்பிரிக்கா 36 & 45
ஆஸ்திரேலியா 153.
மொத்த டெஸ்ட்டும் விளையாட எடுத்துக் கொண்ட நேரம் 5 மணி 53 நிமிடங்கள் மட்டுமே.
ஒரே ஒரு டெஸ்டில் மட்டும் மேற்கு இந்திய தீவுகள் அணியின் 11 வீரர்களும் இரட்டைப்பட ரன்கள் எடுத்தனர் , ஒரே இன்னிங்சில். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ப்ரிட்ஜ்டவுன் டெஸ்டில், 2012ல்.
2004 ஆம் வருடம் நாக்பூர் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்சில் இந்திய வீரர்கள் நால்வர் கேப்டன் ட்ராவிட், சச்சின்.டெண்டுல்கர்,
வி வி எஸ் லட்சுமணன், அணில் கும்ப்ளே ஆகியோர் எடுத்தது தலா 2 ரன்கள்.
வாசுதேவன், பெங்களூரு