ஆஸி. ஒரு நாள் தொடர்-சச்சினுக்கு ஓய்வு-முரளி விஜய், வினய்குமார் சேர்ப்பு

சச்சின் தவிர ஹர்பஜன் சிங், ஜாகிர்கான் ஆகியோருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த் தலைமையிலான தேசிய தேர்வாளர் குழுக் கூட்டம் பெங்களூரில் நேற்று நடந்தது. இதில் ஒரு நாள் தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டது.
இதில் வீரேந்தர் ஷேவாக், கம்பீர், இஷாந்த் சர்மா ஆகியோரும் காயம் காரணமாக சேர்க்கப்படவில்லை.
டெல்லி பேட்ஸ்மேன் ஷிகார் தவன் சேர்க்கப்பட்டுள்ளார். டெஸ்ட் தொடரில் நீக்கப்பட்ட யுவராஜ் சிங் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அதேபோல ரோஹித் சர்மாவும் இடம் பெற்றுள்ளார்.
பெங்களூர் டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடி சதம் போட்ட தமிழக வீரர் முரளி விஜய், கர்நாடக வேகப் பந்து வீச்சாளர் வினய் குமார் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.
அணி விவரம்:
டோணி (கேப்டன்), முரளி விஜய், ஷிகார் தவன், விராத் கோலி, சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, யுவராஜ் சிங், செளரப் திவாரி, ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, பிரவீன் குமார், ஆசிஷ் நேஹ்ரா, முனாப் படேல், வினய் குமார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:42 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications