Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரெய்னாவுக்கு தண்ணி காட்டிய டோணி.. குபீரென சிரித்த யுவராஜ்சிங்

புனே: இந்தியாவில் 3 டி20 போட்டிகளில் ஆடுவதற்காக சுற்றுப் பயணம் வந்துள்ளது இலங்கை கிரிக்கெட் அணி. முதல் டி20 போட்டி இன்று மாலை புனே நகரில் தொடங்குகிறது.

இதையொட்டி, இரு அணி வீரர்களும் புனேயில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார்கள். பயிற்சி களத்தில், புகைப்பட கலைஞர் கிளிக்கிய அருமையான புகைப்படங்களின் தொகுப்பே இந்த பதிவு.

இந்திய வீரர்கள் மட்டுமின்றி, இலங்கை வீரர்கள் எந்த மாதிரி பயிற்சி எடுக்கிறார்கள் என்பதும் போட்டோக்களில் கிளிக் ஆகியுள்ளது.

தண்ணி காட்டும் கேப்டன்

தண்ணி காட்டும் கேப்டன்

தம்பி உனக்கு தண்ணி வேணுமாப்பா.. என சுரேஷ் ரெய்னாவை பார்த்து கேட்கிறார் கேப்டன் டோணி. இவருக்கு தண்ணி காட்டுறதெல்லாம் கை வந்த கலைப்பா.. என்பதை போல பார்த்துக்கொண்டுள்ளார் யுவராஜ்சிங். பயிற்சியின் நடுவே கிளிக்கிய போட்டோ இது.

கிரிக்கெட்டுன்னா இதுவா

கிரிக்கெட்டுன்னா இதுவா

கிரிக்கெட் என்றால் ஒரு பந்தை பலரும் விரட்டிச் செல்வார்களே அதுவா.. என கேட்டபடி யுவராஜ்சிங்கும், ஹர்பஜன்சிங்கும், கால்பந்து ஆடவில்லை. கிரிக்கெட் மட்டுமே ஆடி பயிற்சி பெற்றால் போர் அடிக்குமே என இப்படி ஒரு பயிற்சி அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

எவனென்று நினைத்தாய்..

எவனென்று நினைத்தாய்..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில், முதலில் தடுமாறி பேட்டிங் செய்த யுவராஜ்சிங்கை ரசிகர்கள் கேலியாக பார்த்து சிரித்தனர். ஆனால் யுவராஜ்சிங், கடைசி ஓவரில் விஸ்வரூபம் எடுத்தார். "எவனென்று நினைத்தாய், எதைக்கண்டு சிரித்தாய்.." என்று கேட்பதைப்போல இப்படி ஒரு சிரிப்பை பிராக்டீஸின்போது வெளிப்படுத்தியுள்ளார் யுவராஜ்சிங்.

நாங்களும் உதைப்போம்

நாங்களும் உதைப்போம்

இலங்கை வீரர் நிரோசன் டிக்வெல்லா கால் பந்தை உதைத்து, பயிற்சி எடுத்தபோது கிளிக்கியது. இலங்கை பயிற்சியாளரும், கால்பந்தை பெரிதாக நம்பியிருப்பார் போலும்.

உயர உயர பறந்தாலும்..

உயர உயர பறந்தாலும்..

ஃபீல்டிங் பயிற்சியின்போது, இலங்கை வீரர் நிரோசன் டிக்வெல்லா பறந்தபடி கேட்ச் பிடிக்கிறார். இதைப்பார்த்த நம்ம ஊர் ரசிகர் ஒருவர் இப்படி சொன்னாராம், "என்னதான் உயர உயர பறந்தாலும், ஊர்க்குருவியெல்லாம் பருந்தாக முடியாது" என்று.

கால்பந்து பயிற்சி

கால்பந்து பயிற்சி

இலங்கை வீரர் மிலின்டா ஸ்ரீவர்த்தனா தலையால், கால்பந்தை மோதி பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார். இவர்கள் கிரிக்கெட் ஆடுவதை விட கால்பந்து ஆடும் நேரம்தான் அதிகம்போல.

மேலும் படங்கள் :

Story first published: Tuesday, February 9, 2016, 12:53 [IST]
Other articles published on Feb 9, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+