Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'கடவுளின்' 'கோவில்' எது தெரியுமா...?

மும்பை: கடவுள் என்று கிரிக்கெட் ரசிகர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர், பிட்ச்தான் தனது கோவில் என்று கூறியுள்ளார்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் நேற்று முதல் முறையாக செய்தியாளர்களை மும்பையில் சந்தித்தார் சச்சின்.

அப்போது நெகிழ்ச்சியுடன் பேசிய சச்சின் பிட்ச்தான் தனது கோவில் என்று வர்ணித்தார்.

பிட்ச்சை தொட்டு வணங்கி விடைபெற்ற சச்சின்

பிட்ச்சை தொட்டு வணங்கி விடைபெற்ற சச்சின்

தனது கடைசி டெஸ்ட் போட்டியை நிறைவு செய்த சச்சின் பிட்ச்சை தொட்டு

வணங்கி பின்னர் தனது இதயத்தைத் தொட்டபடி அங்கிருந்து சென்றார்.

ஏன் அப்படி செய்தார்...

ஏன் அப்படி செய்தார்...

நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது இதுகுறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு சச்சின் இப்படிப் பதிலளித்தார்...

22 யார்டு கோவில்

22 யார்டு கோவில்

இந்த 22 யார்டு இடம்தான் எனது கோவில். இந்த பிட்ச்தான் எனது கோவில். இத்தனை காலமாக இங்கு என்னை அனுமதித்த அந்த பிட்ச்சுக்கு பெரிய நன்றி சொல்லவே அப்படித் தொட்டு வணங்கினேன்.

எப்போதுமே வணங்குவேன்

எப்போதுமே வணங்குவேன்

எப்போது நான் பேட் செய்ய களத்தில் இறங்கும்போதும், விக்கெட்டை தொட்டு வணங்குவது வழக்கம்.

எல்லாவற்றையும் தந்த கிரிக்கெட்டுக்கு நன்றி

எல்லாவற்றையும் தந்த கிரிக்கெட்டுக்கு நன்றி

கிரிக்கெட்தான் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. எனவே அதற்கு நன்றி சொல்கிறேன்.

ஓய்வுக்குப் பிந்தைய முதல் காலை

ஓய்வுக்குப் பிந்தைய முதல் காலை

ஓய்வுக்குப் பிந்தைய எனது முதல் காலை வழக்கம் போலவே இருந்தது. கிரிக்கெட் எதுவும் இல்லையென்பதால் ரிலாக்ஸ்டாக எழுந்தேன்.

மெதுவாக குளித்தேன்.. நிதானமாக சாப்பிட்டேன்

மெதுவாக குளித்தேன்.. நிதானமாக சாப்பிட்டேன்

விளையாடப் போக வேண்டியதில்லை என்பதால் அவசரமாக குளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. எனவே மெதுவாக குளித்தேன்.. எனது மனைவி பரிமாறிய பிரேக்பாஸ்ட்டை நிதானமாக சாப்பிட்டேன்.

நன்றி சொல்ல நிறைய நேரம்

நன்றி சொல்ல நிறைய நேரம்

பலர் எனக்கு வாழ்த்து செய்திகளை அனுப்பியிருந்தனர். அவற்றுக்கு நன்றி சொல்ல நிறைய நேரம் செலவிட்டேன் என்றார் சச்சின்.

Story first published: Monday, November 18, 2013, 10:27 [IST]
Other articles published on Nov 18, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+