Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்ரீசாந்த்: ஸ்பாட் பிக்சிங்கில் சிக்கிய விவகாரம்..! வாழ்நாள் தண்டனை 7 ஆண்டுகளாக குறைப்பு..!!

மும்பை: கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை ரத்து செய்யப் பட்டு 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

கேரள வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த், 2005ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். இந்திய அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகளிலும் 53 ஒருநாள் போட்டிகளிலும் 10 டி20 போட்டிகளிலும் ஆடியுள்ளார். 2011ல் இந்திய அணி உலக கோப்பையை வென்றபோது அந்த அணியில் இடம்பெற்றிருந்தார்.

ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்சுக்காக ஆடிய போது ஸ்ரீசாந்த் மீது 2013ம் ஆண்டு சூதாட்டப் புகார் எழுந்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில், அவரது 2வது ஓவரில் 14 ரன்கள் விட்டுக்கொடுப்பதற்கு அவருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப் பட்டதாக புகார் எழுந்தது. அந்த புகாரை அடுத்து அவர் மீது பிசிசிஐ அதிரடி நடவடிக்கை எடுத்தது.

தடை விதிப்பு

தடை விதிப்பு

சூதாட்டப்புகாரை அடுத்து ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் ஸ்ரீசாந்த் கிரிக்கெட்டே விளையாட வில்லை. பின்னர் திரைப்படத்தில் நடித்தார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 12வது சீசனில் கலந்துகொண்ட ஸ்ரீசாந்த், அந்த நிகழ்ச்சியில் கூட தன்மீதான சூதாட்ட புகார் குறித்து வருந்தினார்.

தற்கொலை?

தற்கொலை?

வெறும் 10 லட்சத்துக்காக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது மிகுந்த மனவேதனையை தந்ததாகவும், அந்த காலம் தமது வாழ்நாளின் இருண்ட காலம் என்றும் கூறினார். ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துகொள்ளக்கூட முயன்றதாகவும் கூறியிருந்தார்.

7 ஆண்டுகளாக குறைப்பு

7 ஆண்டுகளாக குறைப்பு

இந்நிலையில், பிசிசிஐயின் குறைதீர்ப்பு அதிகாரி ஜெயின், ஸ்ரீசாந்தின் வாழ்நாள் தடையை 7 ஆண்டுகளாக குறைத்துள்ளார். இதன்மூலம் அடுத்த ஆண்டு செப்டம்பர் 13ம் தேதியுடன் ஸ்ரீசாந்தின் தடை முடிவடைகிறது. அதே தேதியில், 2013ம் ஆண்டு ஸ்ரீசாந்துக்கு தடை விதிக்கப்பட்டது.

வயது 37

வயது 37

7 ஆண்டுகளாக தடை குறைக்கப்பட்டதை அடுத்து, அடுத்த ஆண்டு செப்டம்பர் 13ம் தேதியுடன் தடை முடிகிறது. இப்போது ஸ்ரீசாந்துக்கு வயது 36. தடை முடியும் போது 37 வயதாகிவிடும். எனவே தடை முடிந்தாலும் அவர் மீண்டும் கிரிக்கெட்டில் பங்கேற்கும் வாய்ப்பு குறைவே. ஆனால் இந்த தடை விலக்கல் அவருக்கு பெரிய ஆறுதலாக இருக்கும் என்று கூறலாம்.

Story first published: Tuesday, August 20, 2019, 18:51 [IST]
Other articles published on Aug 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+