Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"ஸ்டோன், பேப்பர், சிஸ்ஸர்" குழந்தைகளாக மாறிய கிறிஸ் லின் - அலெக்ஸ் ஹேல்ஸ்.. டி10 லீக்கில் ருசிகரம்!

அபிதாபி: டி10 லீக் தொடரில் முக்கியமான போட்டியின் போது அலெக்ஸ் ஹேல்ஸ் - கிறிஸ் லின் இருவரும் குழந்தைகள் போல் மைதானத்திலேயே ஸ்டோன், பேப்பர், சிஸ்ஸர்ஸ் விளையாடிய சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி10 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. டி10 லீக் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுக்கு மோரிஸ்வில்லி சாம்ப் ஆர்மி, நியூ யார் ஸ்ட்ரைக்கரிஸ், டீம் அபுதாபு, டெக்கான் கிளாசியேட்டர்ஸ் அணிகள் முன்னேறின.

டி10 லீக் தொடர்

டி10 லீக் தொடர்

இன்று ஒரே நாளில் குவாலிஃபயர் 1, எலிமினேட்டர் மற்றும் குவாலிஃப்யர் 2 ஆகிய போட்டிகள் நடந்தன. இதில் குவாலிஃபயர் 1 போட்டியில் நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி வெற்றிபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியை எதிர்த்து டீம் அபுதாபி அணி விளையாடியது.

94 ரன்கள் குவிப்பு

94 ரன்கள் குவிப்பு

இதில் முதலில் பேட்டிங் செய்த டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 94 ரன்கள் குவித்தது. அதிகபட்சமான ஒடியன் ஸ்மித் 15 பந்துகளில் 34 ரன்கள் விளாசினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிக்கோலஸ் பூரன் 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட நவீன் உல் ஹக் 2 ஓவர்கள் வீசி 10 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

குழந்தைகளை போல் வீரர்கள்

குழந்தைகளை போல் வீரர்கள்

இதனைத் தொடர்ந்து 95 ரன்கள் என்ற இலக்குடன் டீம் அபுதாபி அணி களமிறங்கியது. இந்த அணிக்கு தொடக்க வீரர்களாக கேப்டன் கிறிஸ் லின் - அலெக்ஸ் ஹேல்ஸ் களமிறங்கினர். அப்போது யார் முதலில் பந்துவீச்சாளரை சந்திப்பது என்று முடிவு செய்ய, இருவரும் களத்திலேயே ஸ்டோன், பேப்பர், சிஸ்ஸர் என்று விளையாடினர். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாருக்கு வெற்றி?

யாருக்கு வெற்றி?

முழுக்க முழுக்க பொழுதுபோக்குக்காக நடத்தப்பட்டு வரும் டி10 லீக் போட்டியில் வீரர்களும் பொழுதுபோக்காக குழந்தைகள் போல் ஸ்டோன், பேப்பர், சிஸ்ஸர் விளையாடியுள்ளனர். இருப்பினும் ஹேல்ஸ் 1 ரன்னிலும், லின் 13 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியாக டீம் அபுதாபி அணி 10 ஓவர்களில் 89 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Story first published: Saturday, December 3, 2022, 23:54 [IST]
Other articles published on Dec 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+