Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜெயிச்சா போதும்னு நினைச்சேன்.. ஆனா இப்ப உசுரு முக்கியம் கோவாலு.. "டர்" ஆன வீரர்கள்!

டெல்லி: விளையாட்டுப் போட்டிகள் ரத்தாகி விட்டன.. தள்ளிப் போய் விட்டன. ஆனாலும் ஆடிய கால்களும், பாடிய வாய்களும் சும்மா இருக்க முடியுமா.. முடியாதே.. எனவே விளையாட்டு வீரர்கள் விதம் விதமாக தங்களை ஆக்டிவாக வைத்துக் கொள்ள முயன்று வருகின்றனர்.

கிரிக்கெட் ஸ்டார்கள் எல்லாம் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்தும், டிக்டாக் செய்தும், பைக் ரைடு போயும் விதம் விதமாக பொழுதைக் கழித்து வருகின்றனர். கொரோனாவைரஸ் பீதி ஒருபக்கம் இருந்தாலும் கூட தங்களை முடக்கிக் கொள்ளாமல் ஆக்டிவாக வைத்துக் கொள்வதில் வீரர்கள் சிரத்தை காட்டுகின்றனர்.

இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் எப்படியெல்லாம் செயல்பட்டுக் கொண்டுள்ளனர் என்பதை இங்கு ஒரு தொகுப்பாக பார்க்கலாம்.

விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கம்பீர்

விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கம்பீர்

முன்னாள் வீரரும், பாஜக எம்பியுமான கெளதம் கம்பீர், கொரோனாவைரஸ் விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளார். மாஸ்க் அணிவதன் மூலம் கொரோனாவைரஸ் பரவலைத் தடுக்க முடியும் என்று கூறி அவர் டிவீட் பண்ணியுள்ளார். மேலும் ஆர்எம்எல் மருத்துவமனைக்கு தருவதற்காக தன்னிடம் வழங்கப்பட்ட மாஸ்க்குகளுடன் அவர் புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார்.

உசுரு முக்கியம் கோபாலு!

உசுரு முக்கியம் கோபாலு!

தென்னாப்பிரிக்க வேகப் புயல் டேல் ஸ்டெயின் போட்டுள்ள ஒரு டிவீட்டில், போன வாரத்தில் ஒரு போட்டி ஜெயிச்சால் நல்லாருக்குமே என்று நினைத்தேன். ஆனால் தற்போது அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும், தங்களைச் சுற்றியுள்ள ஆபத்திலிருந்து மீண்டு வர வேண்டும் என்று நினைக்கிறேன் என்று ஒரே வாரத்தில் மாறிய நிலையை உணர்த்தி எழுதியுள்ளார்.

மனோஜ் திவாரியின் கூடைப்பந்தாட்டம்

மறுபக்கம் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி கூடைப் பந்தாட்டம் ஆடி தான் எப்படியெல்லாம் பொழுதைப் போக்கி வருகிறேன் என்பதை டிவீட்டில் வீடியோவாக போட்டுள்ளார். ஒரு கையால் பந்தை கூடையில் போடும் வித்தையை முயற்சித்துப் பார்த்ததாக கூறி தனக்குத் தானே பெருமைப்பட்டுள்ளார். சும்மா சொல்லக் கூடாது, கரெக்டாக கூடையில் பந்தைப் போட்டுள்ளார் திவாரி.

அன்பைப் பொழிந்த உமேஷ் யாதவ்

இன்னொரு கிரிக்கெட் வீரரான உமேஷ் யாதவ் தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளா். நெருக்கியடித்து உட்கார்ந்திருக்கும் இருவருக்கும் இடையே அவர்களது செல்ல நாயும் உட்கார்ந்திருக்கிறது. இருவரும் நாயைப் பாசத்துடன் பார்ப்பது போல போட்டுள்ளார் உமேஷ் யாதவ். சிறிது கிரிக்கெட் இல்லாத சமயத்தில் சற்றே நாய்க்கும் பரிவு காட்டப்படும் என்று புது மொழி எழுதத் தோன்றுகிறது இதைப் பார்த்தால்.

தங்கச்சி பாப்பாவுக்கு பொறந்த நாள்

ஜஸ்ப்ரீத் பும்ரா இன்னொரு போட்டோவைப் போட்டுள்ளார். அதில் அவரும் அவரது தங்கையும் உள்ளனர். அவரது தங்கைக்குப் பிறந்த நாள். இதையொட்டி முன்பு எடுத்துக் கொண்ட பழையை போட்டோவைப் போட்டு பவிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள், நீ நமது வீட்டுக்கு மகிழ்ச்சியையும், சிரிப்பையும், வெளிச்சத்தையும் கொண்டு வருகிறாய். சிறந்த ஆண்டாக அமையட்டும் என்று வாழ்த்தியுள்ளார்.

வயல் வெளியில் ஷாகிப் அல் ஹசன்

வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன் விவசாயியாக மாறி விட்டார். வயல் வெளிக்குப் போன அவர் அங்கு என்ன செய்தார் என்று தெரியவில்லை. ஆனால் மனசு நிறைய சந்தோஷத்தை அனுபவித்திருப்பது மட்டும் இந்தப் புகைப்படத்தைப் பார்த்தாலே தெரிகிறது. ஒரு விவசாயக் கூலித் தொழிலாளரின் புன்னகையைப் பார்த்து எத்தனை சந்தோஷமாக இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Friday, March 20, 2020, 11:06 [IST]
Other articles published on Mar 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+