ஜெ. மறைவுக்கு இந்திய, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் மவுன அஞ்சலி! கருப்பு பட்டை அணிந்து பங்கேற்பு
சென்னை: இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. போட்டி தொடங்கும்முன்பு இரு அணி வீரர்களும் ஜெயலலிதாவின் மறைவுக்காக இரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் இரு அணி வீரர்களும் தங்கள் கைகளில் கருப்புப்பட்டை அணிந்து விளையாடுகிறார்கள்.
ஜெயலலிதா கடந்த 5ம் தேதி மறைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னையில் இன்று டெஸ்ட் போட்டியை தொடங்குவதா வேண்டாமா என பிசிசிஐ குழம்பி தவித்தது. ஒரு வழியாக எதிர்ப்பு இல்லை என தெரிந்த பிறகு கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி சென்னையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Story first published: Friday, December 16, 2016, 12:21 [IST]
Other articles published on Dec 16, 2016


Click it and Unblock the Notifications