Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டிவிட் போட்டதால் வந்த வினை.. கிரிக்கெட் வீரர்களுக்கு உள்ளேயே ஏற்பட்ட பிளவு.. அதிர்ச்சி பின்னணி!

சென்னை: விவசாய போராட்டத்தில் ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு நிலைப்பாடு கொண்டு இருப்பதால் பல வீரர்களுக்கு இடையே சின்ன கருத்து வேறுபாடும், பிளவும் ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் நடந்து வரும் விவசாய போராட்டம் தற்போது சர்வதேச அளவில் எதிரொலிக்க தொடங்கி உள்ளது. கிரேட்டா தன்பெர்க், ரிஹான்னா உள்ளிட்ட சர்வதேச பிரபலங்கள் இது குறித்து குரல் கொடுத்ததுதான் இந்த விவாதங்கள் அனைத்திற்கும் காரணம்.

இவர்களின் கருத்துக்கு இந்திய பிரபலங்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தும் கூட தொடர்ந்து இவர்கள் தங்கள் கருத்தில் உறுதியாக உள்ளனர். அதிலும் மியா கலீபா, கிரேட்டா தன்பெர்க் ஆகியோர் தொடர்ந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

ஆதரவு

ஆதரவு

இப்படி வெளிநாட்டு பிரபலங்கள் இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்து பேசியதை மத்திய அரசு விரும்பவில்லை. இது எல்லாம் திட்டமிட்ட பிரச்சாரம் என்று கூறி மத்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டு இருந்தது. வெளிநாட்டு பிரபலங்களின் கருத்துக்களை இந்திய பிரபலங்கள் பலர் எதிர்த்து உள்ளனர்.

பிளவு

பிளவு

இந்த கருத்துதான் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இடையே பிளவை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி சச்சின், கோலி, ரோஹித் போன்ற வீரர்கள் பலர் விவசாய போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய வெளிநாட்டு பிரபலங்களை விமர்சனம் செய்து இருந்தனர். இது உள்நாட்டு விஷயம் இதில் நீங்கள் தலையிட வேண்டாம் என்று இந்திய வீரர்கள்

விமர்சனம்

விமர்சனம்

இந்திய வீரர்கள் பலர் இப்படி அரசியல் ரீதியாக கருத்து சொன்னது பெரிய சர்ச்சையாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்களை நெட்டிசன்கள் பலர் இதனால் கடுமையாக விமர்சித்து உள்ளனர். அதே சமயம் இந்திய வீரர்கள் பேசியது என்ன தவறு என்றும் அவருக்கு ஆதரவாக சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மாறுபாடு

மாறுபாடு

இந்திய வீரர்கள் இப்படி கருத்து கூறி உள்ள நிலையில், இன்னொரு பக்கம் மற்ற சில கிரிக்கெட் வீரர்கள் விவசாய போராட்டத்திற்கு ஆதரவாக பேசி உள்ளனர். முன்னாள் வீரர்கள் மனோஜ் திவாரி, இர்பான் பதான் போன்றவர்கள் விவசாய போராட்டத்தை ஆதரித்துள்ளனர். அதோடு சந்தீப் சர்மா, ஸ்ரீவஸ் கோஸ்வாமி போன்றவர்களும் விவசாய போராட்டத்தை ஆதாரித்துள்ளனர்.

ஆதரவு

ஆதரவு

இவர்கள் விவசாய போராட்டத்தை ஆதரித்ததோடு மறைமுகமாக இந்திய வீரர்களை விமர்சனம் செய்துள்ளனர். இந்திய வீரர்கள் பொம்மலாட்ட பொம்மைகள் போல செயல்படுகிறார்கள் என்று விமர்சனம் செய்துள்ளனர். இந்திய வீரர்கள் எல்லோரும் இப்படி ஒன்றாக டிவிட் செய்வது சந்தேகம் தருவதாக டிவிட் செய்துள்ளனர்.

பிளவு

பிளவு

இது இந்திய வீரர்களுக்கு இடையே சின்ன பிளவை, மனஸ்தாபத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் சந்தீப் சர்மா போன்ற இளம் வீரரே கொதித்து எழுந்து டிவிட் செய்வது எல்லாம் பெரிய சர்ச்சையாகி உள்ளது . இங்கிலாந்து தொடர் நடக்கும் சமயத்தில் வீரர்கள் இதில் கவனம் செலுத்தி உள்ளனர். ஒவ்வொரு வீரருக்கும் அவரவர் கருத்தை சொல்ல உரிமை உள்ளது என்றாலும், கிரிக்கெட்டுக்குள் அரசியல் புகுந்தால் வீரர்கள் இடையே ஒற்றுமை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

வாய்ப்பு

வாய்ப்பு

இதெல்லாம் போக சேவாக், தோனி போன்ற வீரர்கள் இதில் அமைதி காக்கிறார்கள். சேவாக் இதில் இன்னும் ஏன் கருத்து சொல்லவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கருத்து வேறுபாடுகளை மறந்து இந்திய வீரர்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். முக்கியமாக கிரிக்கெட் மைதானத்திற்குள் தனிப்பட்ட அரசியல் கருத்துக்கள் நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Story first published: Saturday, February 6, 2021, 17:29 [IST]
Other articles published on Feb 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+