Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

5 ஆண்டுகளுக்குப் பின் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா!

துபாய்: ஒருநாள் போட்டிகளுக்கான தர வரிசையில் தென் ஆப்பிரிக்கா அணி முதலிடம் பிடித்துள்ளது. 2009ம் ஆண்டுக்கு பிறகு இந்த இடத்துக்கு தென் ஆப்பிரிக்கா வந்து அசத்தியுள்ளது.

ஐசிசி இன்று வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் 115 புள்ளிகளுடன் தெ.ஆப்பிரிக்கா முதலிடத்திலும், 114 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 2வது இடத்திலும், ஒரு புள்ளிகள் குறைவாக அதாவது 113 புள்ளிகளுடன் இந்திய அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன.

நவம்பரில் இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ள இலங்கை 111 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும், 107 புள்ளிகளுடன் இங்கிலாந்து ஐந்தாம் இடத்திலும், 98 புள்ளிகள், 96 புள்ளிகளுடன் முறையே பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகியவை ஆறு மற்றும் ஏழாம் இடங்களிலும் உள்ளன.

Cricket: South Africa reclaim No. 1 ODI rank; India 3rd

மே.இ.தீவுகளும் 96 புள்ளிகள் எடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து வங்கதேசம், ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதற்கு பரிசாக தெ.ஆப்பிரிக்காவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. முன்னதாக சாம்பியன்ஸ் லீக் போட்டியில் மோசமாக தோற்றதால் 2009ல் தெ.ஆப்பிரிக்க அணி முதலிடத்தை இழந்திருந்தது.

ஐந்தாண்டுகளுக்கு பிறகு ஐசிசி தரவரிசையில் தெ.ஆப்பிரிக்கா முதலிடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, October 28, 2014, 17:22 [IST]
Other articles published on Oct 28, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+