For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“முற்றிலும் புதுசு” இந்தியா-தென்னாபிரிக்க போட்டிகான புதிய அட்டவணை.. போட்டிகளை எங்கு எப்படி பார்க்கலாம்

சென்னை: இந்திய அணியின் சுற்றுப்பயணத்திற்கான புதிய அட்டவணையை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

நியூசிலாந்து அணியுடனான தொடரை முடித்துள்ள இந்திய அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இதற்காக வரும் டிசம்பர் 9ம் தேதி இந்திய வீரர்கள் புறப்படவிருந்த சூழலில், ஓமிக்ரான் வைரஸ் காரணமாக ஒருவார காலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 தென்னாப்பிரிக்க டூர்

தென்னாப்பிரிக்க டூர்

இரு அணிகளுக்கு இடையேயும் முதலில் 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டி20 போட்டிகள் கொண்ட நீண்ட தொடர் நடைபெறவிருந்தது. டிசம்பர் 16ம் தேதி முதல் தொடங்கவிருந்தது. ஆனால் தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் என்ற புதுவகை கொரோனா வேகமாக பரவி வருவதால், இந்திய அணியின் புறப்பாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதே போல வீரர்கள் தேர்வும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மாற்றியமைக்கப்பட்ட போட்டி அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடர் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ம் தேதி முதல் தொடங்குகிறது. ஒருநாள் போட்டி தொடர் ஜனவரி 19ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மொத்தம் 4 மைதானங்களில் ஆட்டத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போட்டி அட்டவணை

போட்டி அட்டவணை

முதல் டெஸ்ட் போட்டி = 2021 டிசம்பர் 26 - 30

2வது டெஸ்ட் போட்ட் = 2022 ஜனவரி 3 - 7

3வது டெஸ்ட் போட்டி = 2022 ஜனவரி 11 - 15

முதல் ஒருநாள் போட்டி = 2022 ஜனவரி 19

2வது ஒருநாள் போட்டி = 2022 ஜனவரி 21

3வது ஒருநாள் போட்டி = 2022 ஜனவரி 23

Recommended Video

Rise Of Sri Lanka Cricket after Emphatic Win vs West Indies | OneIndia Tamil
போட்டி நேரங்கள் என்ன?

போட்டி நேரங்கள் என்ன?

முதல் 2 டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரையில் இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு தொடங்கவுள்ளது. 3வது டெஸ்ட் போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஒருநாள் போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட டி20 தொடர் அடுத்தாண்டு வேறு ஏதேனும் நாட்களில் நடத்தப்படும் எனக்கூறப்படுகிறது.

Story first published: Tuesday, December 7, 2021, 17:14 [IST]
Other articles published on Dec 7, 2021
English summary
Cricket southafrica announces revised fixture for Team India after Omicron cuts short tour
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+