Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே டெஸ்டில் விளையாடிய மூன்று அண்ணன் தம்பிகள்.. கிரிக்கெட்டில் நிகழ்ந்த அதிசயம்

மும்பை :டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் சகோதரர்கள் ஒரே டெஸ்டில் சேர்ந்து விளையாடுவது என்பது துவக்க டெஸ்டில் துவங்கி இன்று வரை பல டெஸ்டுக் களில் நடந்தேறியுள்ளது.
ஆனால் இது வரையில் நடைப் பெற்ற ஒரே ஒரு டெஸ்டின் தனி பட்ட சாதனை குறித்து இங்கு காண்போாம்.

செப்டம்பர், 1997. ஹாரரே மைதானத்தில் நியூசிலாந்து , ஜிம்பாப்வே அணிகள் டெஸ்ட் விளையாடினார்கள்.முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி ஸ்கோர் 298.
துவக்க வீரர் கிரான்ட் ப்ளவர் சதம் எடுத்தார். 104 ரன்கள் ( 288 பந்துக்கள். 10 பவுண்டரிகள்)

ind vs aus virat kohli sam konstas boxing day test vs

இவர் 6 வது ஆக ஆவுட் ஆகும் பொழுது அணியின் ஸ்கோர் 244.
இவருக்கு அடுத்த அதிக ரன்கள் குவித்த வீரர் பால் ஸ்ட்ரங். 42 ரன்கள்
கிரான்ட் ப்ளவர் உடன் அணியின் இன்னிங்சை துவக்கிய வீரர் காவின் ரென்னி. இவர் எடுத்த ரன்கள் 23.ப்ளவர், ஸ்ட்ரங், ரென்னி ஆகிய இந்த மூன்று வீரர்களும் இந்த டெஸ்ட் சாதனை புரிய காரணமாக திகழ்ந்தவர்கள்.

இந்த மூன்று வீரர்கள் தவிர இன்னும் மூன்று வீரர்களும் அதில் பங்கு பெற்றனர்.
இந்த 6 வீரர்கள் தவிர இன்னும் இரண்டு வீர்களும் ஒரு மாதிரி இந்த சாதனை கோஷ்டியில் இடம் பெற்றனர். சாதனை பற்றி முடிவில் காண்போம்.
நின்று நிதானமாகவும், பொறுமையாகவும் ஆடி சதம் எடுத்த
ஜிம்பாப்வே துவக்க வீரர் கிரான்ட் ப்ளவர் இரண்டாவது இன்னிங்சிலும் அருமையாக ஆடி.சதம் பதிவு செய்தார். 151 ரன்கள். ( எதிர் கொண்டது 240 பந்துக்கள். 12x4 & 3x6 )

இவரது இந்த தனிப்பட்ட, சாதனை இவர் தான் ஜிம்பாப்வே அணியின் முதல் வீரர், ஒரே டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சதங்கள் குவித்தவர் என்பதாகும்.

ஸ்கோர்
ஜிம்பாப்வே
298 & 311 / 9 டிக்ளர்

நியூசிலாந்து
207 & 304 / 8

ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்று இருக்க வேண்டும். அவ்வாறு முடிவு வராமல் தடையாக நின்று விளையாடியவர்
நியூசிலாந்து
ஆல் ரவுண்டர்
கிறிஸ் கேர்ன்ஸ்.

கேர்ன்ஸ் 50 ரன்கள் விட்டு கொடுத்து 5 ஜிம்பாப்வே வீரர்களின் விக்கெட்டுக்களை எடுத்தார்.அது மட்டும் அல்லாமல் நியூஜிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் பேடடிங்கில் 238 பந்துக்கள் எதிர் கொண்டு நின்று ஆடினார் கடைசி வரையில். இவர் எடுத்த ரன்கள் 71 * நாட் அவுட்.
அடித்தது 1 சிக்ஸர், 7 பவுண்டரிகள்.

இவரது பங்களிப்பால் ஆட்டம் டிராவில் முடிவு பெற்றது.இரண்டு இன்னிங்சிலும் சதங்கள் எடுத்த க்ரான்ட் ப்ளவர் ஆட்ட நாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த டெஸ்டில் நியூசிலாந்து வீரர் பிளெமிஹ் 7
கேட்ச்சுக்கள் பிடித்து சாதித்தார்.

இப்பொழுது இந்த டெஸ்டின் தனிப்பட்ட
சாதனைக்கு வருவோம்.

இந்த ஒரே ஒரு டெஸ்டில் மட்டும் தான் 3 ஜோடி சகோதரர்கள் பங்கு பெற்றனர் , ஒரு அணியின் விளையாடும் 11, வீரர்கள் நடுவில்.ஜிம்பாப்வே அணி அந்த தனி சிறப்பு பெருமையை பெற்றுள்ளது.ப்ளவர் , ஸ்ட்ரங் , ரென்னி சகோதரர்கள் சேர்ந்து இந்த டெஸ்டில் ஆடினார்கள்.இவர்களை தவிர 11, வீரர்களில் ஆடிய
வைட்டால் என்பவரின் உறவினர் இந்த டெஸ்டில் 12 வது வீரராக பங்கு பெற்றார்.
இந்த சகோதரர்களின் பங்களிப்பு

க்ரான்ட் ப்ளவர்

104 & 151
1 கேட்ச்

ஆண்டி ப்ளவர்
( விக்கெட் கீப்பர் )

8 & 20
5 கேட்சுக்கள்

காவின் ரென்னி

23 & 57
2 கேட்சுக்கள்

ஜான் ரென்னி

22 & 16

1 கேட்சு

பால் ஸ்ட்ரங்

42 & 17

3 விக்கெடுக்கள்

பிரயன் ஸ்ட்ரங்

1 & 4*

வைட்டால்

33 & 4

1 கேட்ச்

ஒரே டெஸ்டில் இந்த மாதிரி மூன்று சகோதரர்கள் சேர்ந்து ஆடியது சிறப்பான நிகழ்வாக
கருதப்படுகின்றது.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Friday, December 27, 2024, 17:17 [IST]
Other articles published on Dec 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+