Cric Tit bits: 903 ரன்கள் குவித்து சாதனை படைத்த இங்கிலாந்து! டான் பிராட்மேனே பந்துவீச வேண்டிய நிலை!
லண்டன்: 1938 ஆம் ஆண்டு 5வது டெஸ்ட் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடந்தது. ஆர்த்தூர் வுட் என்ற விக்கெட் கீப்பர் பேட்டிங் ஆட சென்ற பொழுது இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 770 ரன்களாக இருந்தது. அப்போது அவர் உதிர்த்த வார்த்தைகள், "நான் எப்பொழுதும் தேவையான ஆட்டக்காரன் , நெருக்கடியின் பொழுது..!".
இவர் எடுத்த 53 ரன்கள் இங்கிலாந்து அணிக்கு பெரிதும் உதவியது. அந்த கால கட்டத்தில் ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ரன்கள் குவிக்க காரணமாக அமைந்தது. அந்த போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெடுக்கள் இழப்பிற்கு 903 ரன்களை குவித்தது. இந்த டெஸ்டில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணியின் 903/7 ரன்கள் சேர்த்து டிக்ளர் செய்தது.

இங்கிலாந்து அணியின் லென் ஹட்டன் 364 ரன்களும், மாரிஸ் லய் லேண்ட் 187 ரன்களும், ஜோ ஹார்ட்ஸ்டாப் 169* ரன்களும், கேப்டன் வால்லி ஹாமன்ட் 59 ரன்களும் எடுத்தனர். இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 201 ரன்கள் எடுத்து பால்லோவ் ஆன் பெற்றது. பின்னர் மீண்டும் 123 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.
இங்கிலாந்து அணியின் பவுலர் பில் போவ்ஸ் 7 விக்கெட்டுகளையும், கேன் பார்ன்ஸ் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதேபோல் விக்கெட் கீப்பர் ஆர்த்தூர் வுட் 3 கேட்சுக்கள் பிடித்தார். ஆஸ்திரேலிய அணி கேப்டன் டான் ப்ராட்மன், ஜாக் பிங்கில்டன் இருவரும் இரண்டு இன்னிங்சிலும் காயம் காரணமாக பேட்டிங் விளையாடவில்லை.
ஆனால் ப்ராட்மன் பவுலிங் செய்தார். மொத்தமாக 2.2 ஓவர்களை வீசினார். 6 ரன்கள் விட்டுக் கொடுத்து, 1 மெய்டனும் அடக்கம். இந்த டெஸ்டில்
இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் 579 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்தது. நான்கு நாட்களுக்குள் இந்த டெஸ்ட் முடிவு பெற்றது.
இந்த டெஸ்ட் தான் விக்கெட் கீப்பர் ஆர்த்தூர் வுட்டின் அறிமுக டெஸ்ட். இவர் ஆடியது மொத்தம் 4 டெஸ்ட்கள் மட்டுமே. ஆர்த்தூர் வுட்டின் கடைசி டெஸ்ட் அதே ஓவல் மைதானத்தில். 1939 ஆகஸ்டில் மேற்கு இந்திய தீவுக்கள் அணிக்கு எதிராக நடந்தது. ஒரு இன்னிங்சில் மட்டும் ஆடிய வுட் ரன் எதுவும் எடுக்கவில்லை. டெஸ்ட் டிராவில் முடிவு பெற்றது.
மூன்று சதங்கள். மேற்கு இந்திய தீவுக்கள் வீரர் பி பி வீக்ஸ் 137 ரன்களும், இங்கிலாந்து கேப்டன் வால்லி ஹாமன்ட் 138 ரன்களும், லென் ஹட்டன் 165* ரன்களும் எடுத்தனர். விக்கெட் கீப்பர் ஆர்த்தூர் வுட் ஆடிய 4 டெஸ்டுக்களில் பிடித்த கேட்சுக்கள் 10. ஸ்டம்பிங் 1. யார்க்க்ஷய்யர் அணிக்கு முதல் தர கிரிக்கெட் விளையாடினார்.
* அதேபோல் 1910ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவின் டர்பன் டெஸ்டில் முதல் இன்னிங்சில் இரண்டு அணிகளும் ஒரே மாதிரி ரன்கள் எடுத்தனர். 199 ரன்கள். முதலில் ஆடிய தென் ஆப்ரிக்க அணி 199 ரன்களில் ஆல் அவுட். தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்ஸ் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியும் 199 ரன்களில் சுருண்டது. இதனால் ஆட்டத்தில் ஒரு விறுவிறுப்பு ஏற்பட்டது.
இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி கோர்டோன் வைட் என்ற வீரர் எடுத்த 118 ரன்களினால் 347 ரன்கள் எடுத்தனர். 348 ரன்கள் இலக்கை எதிர் நோக்கி ஆட துவங்கிய இங்கிலாந்து அணி எடுத்தது என்னவோ 252 ரன்கள் தான். தென் ஆபிரிக்க பவுலர் பெர்ட் வோகலர் 7, ஆப்ரெ பால்க்ணர் 8, இங்கிலாந்து பவுலர்கள் ஜி எஸ் ஹய்வார்ட் 7, ஜி தாம்பசன் 5 விக்கெட்டுக்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணியின் வீரர் ஜாக் ஹாப்ஸ் எடுத்த ரன்கள் 53 மற்றும் 70 ஆகும். இதனால் தென் ஆப்ரிக்க அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வாசுதேவன்,
பெங்களூரு


Click it and Unblock the Notifications