கிரிக்கெட் Titbits..! டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் சாதனைகள் நிகழ்த்தியவர்கள்.. அரிய தகவல்
பெங்களூரு : நல்ல உயரமான இடதுகை வேக பந்து வீச்சாளர் நுவான் ஸ்ஓய்ச( Nuwan Zoysa) ஸ்ரீ லங்கா( Sri Lanka ) கிரிக்கெட் டெஸ்டில் ஜிம்பாப்வே அணிக்கு ( Zimbabwe) எதிராக தனது முதல் ஓவரில் ஹாட்ரிக் எடுத்து அசத்தினார். இவர் வீசிய முதல் ஓவரின் முதல் மூன்று பந்துகளிலும் விக்கெட் எடுத்தது தனி சிறப்பாகும். இவ்வாறு நிகழ்த்திய முதல் பவுலர் இவர் ஆவார். 26 நவம்பர் 1999 அன்று ஹராரே டெஸ்ட் மேட்சில் இது நிகழ்ந்தது.
ஹாட்ரிக் (Hat trick) எடுத்த சில வீரர்களை பற்றிய தகவல்கள்.

டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் முதல் ஹாட்ரிக் எடுத்த பெருமை ,
ஆஸ்திரேலிய பவுலர் ப்ரெட் ஸ்பிஆஃஒர்த் (Fred Spofforth) என்பவரை சாரும். 2 ஜனவரி 1879 அன்று சரித்திரத்தின் மூன்றாவது டெஸ்டில் நிகழ்த்தினார்.
பில்லி பேட்ஸ் (Billy Bates) என்பவர் முதல் கிரிக்கெட் வீரர் இங்கிலாந்து அணிக்காக ஹாட்ரிக் எடுத்தவர்.
மேற்கு இந்திய வீரர் கோர்ட்னே வால்ஷ் ( Courtney Walsh) மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மெர்வ் ஹுக்ஸ்( Merv Hughes) ஆகிய இருவரும் முதல் இன்னிங்சில் ஆரம்பித்து அடுத்த இன்னிங்சில் தங்கள் ஹாட்ரிக் களை முடித்தனர்.
ஆஸ்திரேலிய வீரர் பீட்டர் ஸீட்டில் ( Peter Siddle ) அவருடைய பிறந்த தினத்தன்று ஹாட்ரிக் எடுத்து அசத்தினார்.
வங்க தேச ஆப் ஸ்பின் பவுலர் சோகக் காஜி( Sohag Gazi) என்பவர் ஒரே டெஸ்டில் ஹாட்ரிக்கும் எடுத்தார். பேட்டிங்கில் சதம் அடித்தார்.
ஹுக்க் த்ரும்ப்ளே,(Hugh Trumble) வாசிம் அக்ரம்,(WasimAkram, ஜிம்மி மெத்தியூஸ் ( Jimmy Matthews) மற்றும் ஸ்டுவர்ட் ப்ரோ ட் ( Stuart Broad) ஆகியோர் இரண்டு முறை டெஸ்டுகளில் ஹாட்ரிக் எடுத்தவர்கள். இந்திய அணி சார்பாக ஹாட்ரிக் எடுத்தவர்கள் ஹர்பஜன்ஜிங் ( Harbhajan Singh) இப்ரான் பதான் (Ifran Pathan).மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா
கிரிக்கெட்டில் ' கேர்ரி தி பேட் ' ( Carry the bat ) என்று ஒரு அம்சம் உண்டு.
ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் யாராவது ஒருவர் அவர்கள் அணியின் எல்லா ஆட்டக்காரர்களும் அவுட் ஆகி, இவர் மட்டும் அவுட் ஆகாமல் இருந்தால் அதற்கு கேர்ரி ட் தி பேட் என்று அழைப்பர்.
இது குறித்து டெஸ்ட் மேட்சுகளில் நடைப் பெற்ற சில தகவல்களை காண்போம்.
25 March 1889 ல் முதல் முறையாக டெஸ்ட் மேட்சில் தென் ஆப்பிரிக்க வீரர் பெர்னார்ட் தான்கிரேட் ( Bernard Tancred) 26 * இங்கிலாந்துக்கு எதிராக எடுத்தார். அவரது அணியின் ஸ்கோர் 47.
2018 ஆம் வருடம் ஸ்ரீ லங்காவிற்கு எதிராக நியூஸிலாந்து அணியின் ஓபனர் டாம் லதாம் 264* (Tom Latham) ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்காவின் டீன் எல்கேர்( Dean Elgar) மற்றும் மேற்கு இந்திய அணியின் ஓபனர் டெஸ்மாண்ட் ஹெய்ன்ஸ் (Desmond Haynes) இருவரும் தலா மூன்று முறை டெஸ்ட் மேட்சுகளில் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கி கடைசி வரையில் அவுட் ஆகாமல் சாதித்தனர்.
தனது முதல் டெஸ்டில் இந்த சாதனை படைத்த முதல் வீரர் ஆஸ்திரேலியாவின் ஜாக் பார்ர்ட்( Jack Barret) ஆவார். வருடம் 1890 இந்திய அணியின் சார்பாக முதன் முதலில் இன்னிங்ஸ் கடைசி வரையில் அவுட் ஆகாமல் இருந்தவர், சுனில் கவாஸ்கர். 1983 ல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பைசிலாபாத்தில் (Faisalabad) அவர் எடுத்தது 127* ரன்கள்.
1979 ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இங்கிலாந்து ஓபனிங் ஆட்டக்காரர் ஜோயோபிரி பாய் காட் ( Geoffrey Boycott) கடைசி வரையில் அவுட் ஆகவில்லை. அவர் எடுத்த ரன்கள் 99*.
இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் ஓப்பனிங் ஆட்டக்காரர் நாசர் மொஹமட் 124* ரன்கள்( Nazar Mohammad) எடுத்தார், 1952 லக்னோ டெஸ்டில்.அவரது மகன் முதஸர் நாசர் 152* ரன்கள் இந்தியாவிற்கு எதிராக லாகூர் டெஸ்டில் 1983ல் சாதித்தார்.
இது தந்தை , தனயன் ஜோடியின் உலக சாதனை.
பில் பிரவுன் (Bill Brown), லென் ஹட்டன் (Len Hutton), க்ளென் டர்னர் (Glen.Turner ), மார்வன் ஆடப்பட்டு (Marvan Atapattu), வீரேந்திர சேவாக் (Virender Sehwag) அலாஸ்டர் குக் (Alastair Cook) டாம் லதாம் (Tom Latham) ஆகியோர் 200 ரன்களுக்கு மேல் குவித்து இன்னிங்சின் கடைசி வரையில் அவுட் ஆகாமல் நாட் அவுட் நிலையில் கேர்ரிட் தி பேட் (Carried the bat) சாதனை புரிந்தவர்கள்.
வாசுதேவன், பெங்களூரு


Click it and Unblock the Notifications