For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Cricket Titbits - ஒரே டெஸ்ட்டில் 12 வீரர்கள் அறிமுகம்.. எப்போது தெரியுமா?

சென்னை: எடி பார்லோ (Eddie Barlow) தென் ஆப்பிரிக்கா அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியவர். அவரது புள்ளி விவரம் - 30 டெஸ்ட், ரன்கள் 2516, சராசரி 45.74, சதங்கள் 6, அரை சதங்கள் 15, அதிக பட்ச ரன்கள் 201, கேட்ச்கள் 35, வீழ்த்திய விக்கெட்கள் 40.

1961 இல் நியூசிலாந்து அணிக்கு எதிராக டர்பன் மைதானத்தில் தனது அறிமுக டெஸ்ட்டில் ஆடினார். இந்த டெஸ்டை தென் ஆப்பிரிக்க அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த டெஸ்டில் மொத்தம் அறிமுகம் ஆன வீரர்கள் 12 பேர். இதில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் 7, நியூசிலாந்து அணி வீரர்கள் 5.

Cricket test cricket south africa


எடி பார்லோவோடு அறிமுகம் ஆன பீட்டர் போல்லோக், இந்த டெஸ்டில் எடுத்த விக்கெட்கள் 9 ஆகும். அவரது பந்துவீச்சு - 3 / 61 6 / 36 என்பதாகும். பார்லோவின் கடைசி டெஸ்ட் தென் ஆப்பிரிக்காவில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, மார்ச் 1970 இல் நடைபெற்றது. இந்த டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி 323 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இவர் 1963 ஆம் வருடம் பிரிஸ்பேன் டெஸ்டில், முதல் இன்னிங்சில் சதம் அடித்தார். மொத்த ரன்கள் 114. இரண்டாவது இன்னிங்சில் டக் அவுட் ஆனார். அந்த காலகட்டத்தில் விளையாடிய பல சிறந்த வீரர்கள் தொடர்ந்து விளையாட முடியாத சூழ்நிலை இருந்தது. எடி பார்லோவாலும் தென் ஆப்பிரிக்க அணிக்காக தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாட முடியவில்லை. இங்கிலாந்தில் டெர்பிஷய்யர் அணிக்கு முதல் தர கிரிக்கெட் விளையாடிய அனுபவம் உடையவர். பயிற்சியாளராகவும் பணி புரிந்துள்ளார்.

oooooooooooooooooooooo

பில் எட்மோண்ட்ஸ் என்ற ஸ்பின் பவுலர் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் ஆட்டங்கள் ஆடியவர். இவரது அறிமுக டெஸ்ட் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. இவர் வீசிய முதல் 12 ஓவர்களில் 17 ரன்கள் விட்டு கொடுத்து 5 விக்கெட்கள் கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்த நிகழ்வு, லீட்ஸ் மைதானத்தில் 1975 ஆகஸ்ட் மாதத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைப்பெற்றது.

இவரது அருமையான, திறமையான பந்து வீச்சுக்கு தங்கள் விக்கெட்களை பறிகொடுத்த ஆஸ்திரேலிய வீரர்கள் கேப்டன் இயன் சேப்பல், கிரேக் சேப்பல், ராஸ் எட்வர்ட்ஸ், டக் வால்டர்ஸ் மற்றும் மக்ஸ் வாக்கர் ஆவர். இவரது கடைசி டெஸ்ட், ஓவல் மைதானத்தில் ஆகஸ்ட், 1987ல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்றது.

முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 708 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 232 ரன்கள் மட்டும் எடுத்து ஃபாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடர்ந்தது. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து எடுத்தது 315 / 4 ரன்கள் மட்டுமே. ஆட்டம் டிராவில் முடிந்தது.

இந்த டெஸ்ட் மொத்தம் 4 சதங்களை கண்டது. பாகிஸ்தான் அணியில் ஜாவேத் மியந்தாத் 260, சலீம் மாலிக் 102, கேப்டன் இம்ரான் கான் 118 ரன்கள் குவித்தனர். இங்கிலாந்து அணியில்
கேப்டன் மைக் காட்டிங் 150* ரன்கள் சேர்த்தார். 51 டெஸ்ட்க்கள் விளையாடிய பில் எட்மோண்ட்ஸ் எடுத்த விக்கெட்டுக்கள் 125.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஜூன், 1978 லார்ட்ஸ் டெஸ்டில் இவர் அட்டகாசமான பவுலிங் செய்தார். 8 ஓவர்கள் வீசி, 6 மெய்டன்கள் வீசி, 6 ரன்கள் விட்டுக் கொடுத்து, 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.

இந்த டெஸ்டில் இயன் போத்தம் தனது ஆல் ரவுண்டர் திறமையை வெளிப்படுத்தி ஆட்ட நாயகனாக தேர்ந்து எடுக்கப் பட்டார். அவர் பேட்டிங்கில் 108 ரன்கள் எடுத்தார். பவுலிங்கில் ஒரு இன்னிங்சில் 8 விக்கெட் வீழ்த்தி இருந்தார். இந்த டெஸ்டை இங்கிலாந்து அணி வென்றது.

oooooooooooooooooooooooooooooooooooooooooooo

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Friday, August 16, 2024, 23:44 [IST]
Other articles published on Aug 16, 2024
English summary
Cricket Titbits - 12 players debut in same test match in 1961 between South Africa and New Zealand
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+