மும்பை : டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில், பல வகையான சாதனைகள் நடைபெற்று வருகின்றன. மேற்கு இந்திய தீவுக்கள் அணியின் முன்னாள் கேப்டன் பிரைன் லாரா அதிக பட்ச ஸ்கோரான 400* ரன்கள் அடித்தவர் ஆவார். இதுவரை 30 முறை முச்சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஒரு ரன்னில் மூன்று சதங்களை தவற விட்ட இரண்டு நிகழ்வுகள்.
டான் ப்ராட்மன்.
பிப்ரவரி, 1932.
அடிலெய்ட் மைதானம்.

முதலில் பேட்டிங் விளையாடிய, தென் ஆப்பிரிக்க அணி 308 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலிய ஸ்பின் பவுலர் கிளாரி கிரிம்மேட் 7 விக்கெடுக்கள் வீழ்த்தினார். இந்த லெக் பிரேக், கூக்ளி பவுலர் இரண்டாவது இன்னிங்சிலும் 7 விக்கெடுக்கள் எடுத்தார்.
கிரிம்மேட் 14 / 199
ஆஸ்திரேலிய அணி எடுத்த 513 ரன்களில், டான் ப்ராட்மனின் ஸ்கோர் 299* ( நாட் அவுட் ).
முதல் விக்கெட் விழுந்த பொழுது அணியின் ஸ்கோர் 9. அப்பொழுது ஆட வந்த ப்ராட்மன், கடைசி வரையில் ஆடினார்.
இவருக்கு அடுத்தபடியான அதிக ரன்கள் 82 எடுத்தவர் கேப்டன் பில் வுட்பூல்.
இருவரும் 174 ரன்கள் சேர்த்தனர்.ப்ராட்மன், கெய்த் ரிக்வுடன் சேர்ந்து 114 ரன்கள் அணிக்கு அதிகரிக்க உதவினார்.பிறர் விக்கெட்டுக்களை வீழ்த்திய தென் ஆப்ரிக்க பவுலர்க்களால், எவ்வளவு முயன்றும் டான் ப்ராட்மன் விக்கெட்டை எடுக்க முடியவில்லை.
அவர் நின்று, பொறுமையுடன் விளையாடி ரன்களை குவித்தார்.
இவரது 299* ரன்கள் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற வித்திட்டது.
தென் ஆப்பிரிக்க பவுலர் சாண்டி பெல் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
அவர்கள் பேட்ஸ்மன்,ப்ருஸ் மிட்செல் எடுத்த ரன்கள் 95.
இன்னும் சிறிது நேரம் ஆடி இருந்தால், ப்ராட்மன் மூன்றாவது சதத்தை பதிவு செய்து இருப்பார்.
299* ரன்கள் எடுக்க அவர் அடித்தது பவுண்டரிகள் 23 இரண்டாவது இன்னிங்ஸ் ப்ராட்மன் பேட்டிங் விளையாடுவதற்கு முன்பு ஆஸ்திரேலிய அணி 10 விக்கெடுக்கள் வித்தியாசத்தில், வெற்றியை பதிவு செய்துவிட்டது.டான் ப்ராட்மன் டெஸ்டுகளில் அடித்த 29 சதங்களில், அதிக பட்ச இரட்டை சத ரன்கள் இந்த 299* ஆகும்.
மார்ட்டின் க்ரோ
பிப்ரவரி, 1991
வெலிங்டன் மைதானம்.
ஸ்ரீலங்கா அணிக்கு எதிரான டெஸ்ட் நியூஜிலாந்து அணி கேப்டன் சரித்திரம் படைத்தார்.
இரண்டாவது இன்னிங்சில், இவர் எதிர் கொண்ட பந்துக்கள் 523.
29 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள். குவித்த ரன்கள் 299. விக்கெட் கீப்பர் திலக்கரத்னே கேட்ச் பிடித்தார் . பவுலர் ரணத்துங்கா. இந்த இன்னிங்சில் மார்ட்டின் க்ரோ, அன்றெவ் ஜோன்ஸ் ஜோடி இணைந்து பார்ட்னர்ஷிப்பில் 467 ரன்களை சேர்த்தனர்.
அன்றெவ் ஜோன்ஸ் எடுத்த ரன்கள் 186. இந்த இருவரை தவிர, இந்த டெஸ்டில் சதம் எடுத்த வீரர்,ஸ்ரீலங்காவின் அரவிந்த டி சில்வா. ரன்கள் 267.
இந்த டெஸ்ட் மேட்ச் டிராவில் முடிவு பெற்றது. இவரது சகோதரர் ஜெப் க்ரோவும், நியூஜிலாந்து அணியை கேப்டனாக வழி நடத்தியுள்ளார்.
மார்ட்டின் க்ரோ 77 டெஸ்டுகளில் எடுத்த ரன்கள் 5444. 17 சதங்கள், 18 அரை சதங்கள்.
71 கேட்சுக்கள். இருவர் மட்டுமே எடுத்த 299 ரன்களில், ப்ராட்மன் அவுட் ஆகவில்லை ( நாட் அவுட்) மார்ட்டின் க்ரோ அவுட் .
வாசுதேவன், பெங்களூரு