Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே இன்னிங்சில் இரண்டு பேர் 234 ரன்கள்.. இங்கிலாந்தை துவம்சம் செய்த பிராட்மேனின் ஆஸ்திரேலியா படை

மும்பை : இந்த டெஸ்ட் இரண்டு வீரர்களின் இரட்டை சதங்களை கண்டது.இருவரின் ஸ்கோரும் ஒரே மாதிரி இருந்தது.234 ரன்கள்
இவர்கள் இருவரும் அடுத்து அடுத்து அவுட் ஆனார்கள்.

அப்பொழுது இவர்கள் அணியின் ஸ்கோர்
564 - 5
564 - 6

india national cricket team ind vs ban sports news

இவர்களது அபார ஆட்டங்கள், அவர்கள் அணி பேட்டிங் ஆடிய ஒரே இன்னிங்சில் 659 / 8 எடுத்து டிக்ளர் செய்ய பெரிதும் உதவியது என்றால் மிகையாகாது.அது சரி இந்த நிகழ்வு எப்போது எங்கு நடைப் பெற்றது என்பதைப் பற்றி பார்ப்போம்.

1946 ன் ஆஷஸ் தொடரில், சிட்னி மைதானத்தில் 2 வது டெஸ்டில் நடைப் பெற்றது.இங்கிலாந்து அணியின் கேப்டன் வால்லி
ஹாம்மோன்ட் டாஸ் வென்று முதலில் பேட்டிங் விளையாட முடிவு செய்தார்.

முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெடுக்களை இழந்து 219 ரன்கள் மட்டும் குவித்து இருந்தனர்.
முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் இங்கிலாந்து அணி 255.

பில் எட்ரிச் (71) ஜாக் ள்கின் (60 )
ஆஸ்திரேலிய பவுலர் இயன் ஜான்சன் 6 - 42
பவலிங்கில் சாதித்தார்.

ஆஸ்திரேலிய பேட்டிங் கொடி கட்டி பறந்தது.
இங்கு தான் ஆராம்பத்தில் கூறியிருந்த இரண்டு வீரர்களின் தனிப்பட்ட மற்றும் கூட்டு முயற்சி ஆஸ்திரேலிய இரு வீரர்களின் பேட்டிங் அர்ப்பணிப்பு வெளிவந்தது.

india national cricket team ind vs ban sports news

ஓப்பனிங் பேட்ஸ்மன் சித் பர்ன்ஸ் உடன் ஜோடி சேர்ந்தார் அணி கேப்டன் டான் ப்ராட்மன். ஸ்கோர் 159 - 4இருவரும் ஜோடி சேர்ந்து பார்ட்னர்ஷிப்பில் அதிகரித்த ரன்களின் எண்ணிக்கை 405.
சித் பர்ன்ஸ் எதிர் கொண்டது 667 பந்துக்கள். 17 பவுண்டரிகள். ரன்கள் 234.

இவர் நின்று நிதானமாகவும், பொறுமையாகவும் ரன்கள் சேர்த்தார்.
டான் ப்ராட்மன் எதிர் கொண்டது 396 பந்துக்கள். பவுண்டரிகள் 24. ரன்கள் 234.சித் பர்ன்ஸ் உடன் ஒப்பிடும் பொழுது டான் ப்ராட்மன் வேகமாகவும், அதிரடியாகவும் ரன்கள் எடுத்தார்.

முதல் இன்னிங்சை விடசற்று கவனம் செலுத்தி இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிக்சில் பேட்டிங் ஆடினார்கள்.
அவர்களது பில் எட்ரிச் இந்த இன்னிங்சிலும் அதிக பட்ச ரன்கள் குவித்தார். அவர் சதம் எடுத்தார்.( 119 ) நின்று இவர் ஆடிய பந்துக்கள் 379. பவுண்டரிகள் 5 மட்டும் தான் அடித்தார்.

இங்கிலாந்து ஸ்கோர் 371 ரன்கள். ஆஸ்திரேலிய பவுலிங்.

முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கள் எடுத்த இயன் ஜான்சன் இந்த முறை 2 விக்கெட்டுக்கள் எடுத்தார்.இந்த இன்னிங்சில் மற்றும் ஒரு பவுலர் காலின் மக்கூல் வீழ்த்தியது 5 , முதல் இன்னிங்சில் இவர் எடுத்தது 3.

இந்த மேட்ச்சில் சில வீரர்கள் எடுத்த வித்தியாசமான ரன்கள்.
ரன்கள் 1 (2) 5 (3 ) 15 (2*)
17( 2*) 37 (2)

இந்த டெஸ்ட் 6 தினங்கள் விளையாடப் பட்டது.ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, இந்த டெஸ்டை.

oooooooooooooooooooooooooooooooooooooooooo

ஆஸ்திரேலியாவிற்கு ,1947 ல் முதல் முறையாக சுற்றுப் பயணம் மேற் கொண்ட இந்திய அணி இரண்டாவது சிட்னி டெஸ்டில் அனுபவம் மிக்க ஆஸ்திரேலிய அணியை திணற அடித்தது தங்கள் பவுலிங்கால்.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி எடுத்தது 188 ரன்கள்.
டாட்டு பட்கர் 51. கிஸ்சன்சன்ந் 44.ஆஸ்திரேலிய அணி பேட்டிங் ஆடிய பொழுது இந்திய அணி பந்து வீச்சை எதிர் கொள்ள முடியாமல் விக்கெட்டுக்கள் விழுந்த வண்ணம் இருந்தது.டாட்டு பட்கர் 3, விஜய் ஹாசரே 4 விக்கெட்டுக்கள் கைப்பற்றி அசத்தினர் தங்கள் அருமையான பவுலிங்கால்.

எதிரணியின் அதிக பட்ச 25 ரன்களை எடுத்தவர் ரொனால்ட் ஹமென்ஸ்.
வில்லியம் ப்ரவுன் 18.கீத் மில்லர் 17. புகழ் பெற்ற கேப்டன் ப்ராட்மன் எடுத்தது 13. ஆஸ்திரேலிய அணி ஸ்கோர் 107 ஆல் அவுட்.

இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் ஸ்கோர் 7 விக்கெடுக்கள் இழப்பிற்கு 61 ரன்கள் இருந்த பொழுது ஆட்டம் முடிவிற்கு வந்தது டிராவில்.இந்த 6 நாட்கள் டெஸ்டில் 3, 4, 6 ஆம் நாட்களில் டெஸ்ட் நடைப் பெறவில்லை.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Monday, September 23, 2024, 21:40 [IST]
Other articles published on Sep 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+