75 ஓவர்கள் வீசிய பவுலர்.. அதில் 25 ஓவர் மெய்டன்.. இன்னும் பல சுவாரஸ்ய தகவலுடன்
பெங்களூரு : எர்ணஸ்ட் ஜோன்ஸ் என்ற வேக பந்து வீச்சாளர், ஆஸ்திரேலிய அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியவர். 19 டெஸ்டுக்களில் இவர் 64 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
ஒரு இன்னிங்சில் 7 / 88 மற்றும் டெஸ்டில் 10 / 164 எடுத்துள்ளார். துவக்க டெஸ்ட் டிசம்பர், 1894. சிட்னி. இங்கிலாந்து அணிக்கு எதிராக.
கடைசி டெஸ்ட் அக்டோபர், 1902. ஜோஹன்னஸ்பர்க். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக. இந்த கால கட்டத்தில் இவர் ஒரு தலை சிறந்த டெஸ்ட் பவுலராக திகழ்ந்தார்.

இவரது அறிமுக டெஸ்டில் பவுலிங்.
1 / 44 1 / 57
இந்த டெஸ்டில் இங்கிலாந்து அணி பால்லோவ் ஆன் பெற்றது. இருந்தும் டெஸ்ட் மேட்சில் 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
ஸ்கோர்
ஆஸ்திரேலியா
586 166
இங்கிலாந்து
325 437
முதலில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்தனர். பிறகு ஆடிய இங்கிலாந்து அணி, இரண்டு இன்னிங்ஸ் பேட்டிங்களை தொடர்ந்து ஆடினர். அதற்கு பிறகு ஆஸ்திரேலிய அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸ் (டெஸ்டின் நான்காவது இன்னிங்ஸ் )விளையாடி தோல்வியை தழுவினர்.
இந்த டெஸ்டில் தான் ஆஸ்திரேலிய வீரர் சிட் கிரேகோரி டெஸ்ட் சரித்திரத்தின் முதல் இரட்டை சதம் ஆஸ்திரேலிய மண்ணில் பதித்து சாதனை படைத்தார்.
ரன்கள் 201.இவரைத் தவிர அவர் அணியின் வீரர் ஜார்ஜ் கிப்பன் 161 ரன்கள் எடுத்தார். அதை தவிர பவுலிங்கிலும், கிப்பன் அசத்தினார். 8 இங்கிலாந்து அணி வீரர்களை அவுட் ஆக்கினார்.
4 / 75 4 / 164
இரண்டாவது இன்னிங்சில் இவர் வீசிய 75 ஓவர்களில் 25 ஓவர்கள் மெய்டன்கள்.
இங்கிலாந்து வீரர் பாபி பீல் 8 விக்கெட்டுக்கள் எடுத்தார்.
2 / 140 6 / 57
எர்ணஸ்ட் ஜோன்ஸ் கடைசி டெஸ்டில் எடுத்த விக்கெடுக்கள் 4
3 / 78 & 1 / 22
டிராவில் முடிந்த இந்த டெஸ்டில் , தென் ஆப்பிரிக்க அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோர் 101 / 4.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மேற்கு இந்திய தீவுக்கள் அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி அசத்தியவர், எவேர்ட்டன் வீக்ஸ்.48 டெஸ்டுகளில் ரன்கள் 4455. சராசரி 58.61. 15 சதங்கள். 19 அரை சதங்கள். 49 கேட்சுக்கள். ஆனால் இரண்டே இரண்டு சிக்ஸர்கள்.
சாதனை. 5 இன்னிங்ஸ் களில், டெஸ்டில் தொடர்ந்தார் போல் சதங்கள் ( இவர் ஒருவர் தான் இத்தகைய சாதனை செய்தவர்.) 7 இன்னிங்ஸ்களில் தொடர்ந்தார் போல் 50 ரன்களுக்கு அதிகமாக அடித்தவர்.டெஸ்ட் கிரிக்கெட்டில் அதி வேகமாக 1000 ரன்களை கடந்தவர். (12 டெஸ்டுக்களில்)
இந்திய அணிக்கு எதிராக , 1948 - 49 ம் வருடம் அன்றைய கல்கத்தா டெஸ்டில் இரண்டு இனிங்க்சிலும் சதம் பதிவு செய்தார்.
162 101
இரண்டு இன்னிங்சிலும் இவரது விக்கெட்டை தனது பவுலிங்கில் கேட்ச் பிடித்து வீழ்த்தி அசத்தியவர் ஆப் பிரேக் பவுலர் குலாம் அஹமத்.
வீக்ஸ் தவிர இந்த டெஸ்டில் அவர்கள் அணியின் விக்கெட் கீப்பர் கிளைடி வால்காட் சதம் எடுத்தார். ரன்கள் 108.
வீக்ஸ் 6 கேப்டன்கள் தலைமையில் விளையாடி உள்ளார்.
வீக்ஸ் எடுத்த அந்த 5 அடுத்த அடுத்த சதங்கள்
141 இங்கிலாந்து கிங்ஸ்டன்
128 இந்தியா டெல்லி
194 இந்தியா பாம்பே
162 இந்தியா கல்கத்தா
101 இந்தியா கல்கத்தா
1948 ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுக டெஸ்ட்டும், 1958 ல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடைசி டெஸ்டும் ஆடினார், வீக்ஸ். இந்த டெஸ்டில் பாகிஸ்தான் அணி 1 இன்னிங்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் வென்றனர்.
டெஸ்டுகளில் இவர் எடுத்த அதிக பட்ச ரன்கள் 207. முதல் தர ஆட்டங்களில் ( பார்படாஸ் அணி ) எடுத்தது 304*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தஸ்லிம் ஆரிப் (Taslim Arif) என்ற பாகிஸ்தான் வீரர் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ் மனாக திகழ்ந்தவர். இவர் ஆடியது 6 டெஸ்டுக்கள் மட்டுமே.
இவரது சராசரி 62.62. ரன்கள் 501. ஒரே ஒரு சதம். அதுவும் இரட்டை சதம் 210* ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக. 6 கேட்சுக்கள். ஸ்டம்பிங்கள் 3.
அன்றைய கல்கத்தாவில்
1980 ல் இந்திய அணிக்கு எதிராக அறிமுக ஆட்டம்.துவக்க வீரராக களம் இறங்கி
தஸ்லிம் ஆரிப், எடுத்த ரன்கள் 90. இரண்டாவது இன்னிங்சில் ரன்கள் 46. இந்திய அணியை கேப்டனாக வழி நடத்தியவர் ஜி ஆர் விஸ்வநாத்.பாசிலாபாத்தில் மேற்கு இந்தியத் தீவுக்கள் அணிக்கு எதிராக தஸ்லிம் ஆரிப் கடைசி டெஸ்ட் ஆடினார். இவரது கடைசி இன்னிங்ஸ் ஸ்கோர் 18.
மார்ச் 1980 ல் பாகிஸ்தான் மண்ணில் இவர் தனது ஒரே சதம் பதிவு செய்தார். 210*. விக்கெட் கீப்பர்களில் இவ்வாறு அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனை புரிந்தார்.
இவரை தவிர சதங்கள் இந்த டெஸ்டில் எடுத்த இருவர். கிரேக் சாப்பெல் 235 , கிரஹம் எல்லோப் 172.மேட்ச் டிராவில் முடிந்தது.
தஸ்லிம் ஆரிப் ஆடிய 2 ஒரு நாள் ஆட்டங்களில் எடுத்த ரன்கள் 28.
வாசுதேவன், பெங்களூரு


Click it and Unblock the Notifications