Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

10வது விக்கெட்டுக்கு 307 ரன்கள் எடுத்த ஜோடி.. வெற்றி இலக்கிற்கு 1 ரன்.. இன்னும் பல சுவாரஸ்ய தகவலுடன்

பெங்களூரு : வெற்றி பெற தேவையான ஒரு ரன்னுக்காக, இரண்டாவது
இன்னிங்ஸ் விளையாடியது இந்த அணி. இரண்டாவது இன்னிங்சின் துவக்க பந்தில், பேட்ஸ்மன் ஒரு ரன் எடுத்தார். வெற்றி பதிவு செய்யப்பட்டது. அந்த ஒரு பந்தை வீசியவர் ஸ்டான் மக்காபே (ஆஸ்திரேலியா) அந்த ஒரு ரன் எடுத்தவர் ஹெர்பர்ட்
சட்கிளிப் ( இங்கிலாந்து )

இந்த நிகழ்வு நடந்தது, 07/12/1932 அன்று.
சிட்னி டெஸ்டில்.

cricket titbits - 307 run partnership for 10th wicket and other historical facts

ஆஸ்திரேலிய அணி

360 & 164

இங்கிலாந்து அணி

524 & 1

இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் அழியாத இடம் பெற்ற
' பாடி லயன் ' தொடரின் ( Body Line series ) முதல் டெஸ்ட் இது.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கிரிக்கெட்டில் பார்க்க மிகவும் நேர்த்தியாக இருக்கும் ஷாட்டுகளில் இதுவும் ஒன்று .

லேட் கட். (Late Cut)

அலன் கிப்பாக்ஸ் ( Alan Kippax ) என்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் இந்த வகை கிரிக்கெட் ஷாட்டுகளை நேர்த்தியாக ஆடுவதில் வல்லவர்.இவர் முதல் தர கிரிக்கெட் கிட்டத்தட்ட 20
வருடங்கள் விளையாடி உள்ளார். ஒரு மேட்சில் இவர் எடுத்த ரன்கள் 315 * நாட் அவுட் .
க்வீன்ஸ்லாந்து அணிக்கு எதிராக ( 1927 - 28 ) சிட்னி மைதானத்தில்.

அடுத்த வருடம், முதல் தர கிரிக்கெட்டில் உலக ரிகார்டு ஏற்படுத்தியதில் பங்கு கொன்டார்.
புகழ் பெற்ற ஷெஃபீல்ட் ஷீல்ட் (Sheffield Shield) மேட்ச். 22 - 27, டிசம்பர் 1928.
மெல்போர்ன் மைதானம்.முதலில் விளையாடிய
விக்டோரியா அணி 376 ரன்கள் குவித்தன.

நியூ சவுத் வேல்ஸ் அணி விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தன.
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இவர்களது ஸ்கோர் 58 / 7
ப்ராடமன் 1 ரன், அவுட். கேப்டன் அலன் கிப்பாக்ஸ் 1 * மூன்றாம் நாள் ஆட்டத்தை துவக்கினார்.

ஸ்கோர் 113 / 9. கடைசி ஆட்டக்காரர் ஹால் ஹூக்கர் ( Hal Hooker ) களம் இறங்கினார்.
விக்டோரியா அணி வீரர்கள், எதிரணியின் கடைசி விக்கெட்டை வீழ்த்தும் முனைப்பில் இருந்தனர்.ஆனால், இந்த ஜோடி நின்று அபாரமாக ஆட ஆரம்பித்தனர்.
முதலில் தனது சதத்தை எடுத்த கிப்பாக்ஸ் தொடர்ந்து ஆடி இரண்டாவது சதம் எடுத்தார்.

கடைசி வீரர் ஹூக்கர் தனது அரை சதம் அடித்தார்.
அன்றைய ஆட்ட முடிவில் ஸ்கோர்
367 / 9 ( கிப்பாக்ஸ் 221 *,
ஹூக்கர் 51 * )

அடுத்த நாள் ஹூக்கர் அவுட் 62 ரன்கள்.
கேப்டன் கிப்பாக்ஸ் 260 *

நியூ சவுத் வேல்ஸ் அணி
முதல் இன்னிங்சில்
ஆல் அவுட் 420 ரன்கள்.

அலன் கிப்பாக்ஸ், ஹால்
ஹூக்கர் இருவரும் சேர்ந்து 304 நிமிடங்கள் விளையாடி 10 வது விக்கெட்டுக்கு எடுத்த ரன்கள் 307.இது ஒரு உலக ரிகார்டு.

22 டெஸ்ட்டுகளில் அலன் கிப்பாக்ஸ் எடுத்த ரன்கள் 1192. சராசரி 36.12 ரன்கள். 2 சதங்கள்
175 முதல் தர மேட்சுக்கள். ரன்கள் 12762. சராசரி 57.22
ரன்கள். 43 சதங்கள்.
அதிக பட்சம் 315*

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இந்திய அணிக்காக விளையாடிய வேக பந்து பவுலர் சுரேந்திர நாத் விளையாடியது 11 டெஸ்ட்டுகள்.ஆனால், இவர் 6 கேப்டன்கள் தலைமையில் டெஸ்ட்டுகள் விளையாடினார்.
அவர்கள் குலாம் அஹமத், டிகே கெய்க் வாட் , பங்கஜ் ராய்,
வினு மன்காட், ஜிஎஸ் ராம்சந்த், நாரி கண்ட்ராக்டர்.

சுரேந்திர நாத் எடுத்த டெஸ்ட் விக்கெட்டுகள் 26.இரண்டு இன்னிங்ஸ்களில் 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.அறிமுக டெஸ்ட் 1958 ஆம் ஆண்டு கல்கத்தாவில், மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக.இந்த டெஸ்டில் ரோகன் கன்ஹாய் எடுத்த ரன்கள் 256.
சுரேந்திரநாத் இந்த டெஸ்டில் எடுத்த 2 விக்கெட்டுகளில் ரோகன் கன்ஹாய் விக்கெட்டும் ஆகும்.

கன்ஹாய் தவிர சதம் எடுத்தவர்கள் பேசில் புட்சர் ( 103 ) காரி சோபர்ஸ் ( 106 * )
ராய் கில்சிறிஸ்ட் 9 விக்கெட்டுகள் எடுத்தார்.

3 - 18 & 6 - 55

ஸ்விங் பவுலிங் சிறப்பாக போட்ட சுரேந்திரநாத்துக்கு, இங்கிலாந்து சூழ்நிலை உதவி செய்தது. ( 1959 )

சுரேந்திர நாத் டெஸ்ட்டுகளில் பிடித்த கேட்சுக்கள் 4.

5 - 115

ஓவல் டெஸ்ட்
5 - 75

இவரது கடைசி டெஸ்ட் மெட்ராஸ் ( இன்றைய சென்னை) (1961)
பாகிஸ்தான் அணிக்கு எதிராக.

இவர் எடுத்தது ஒரே ஒரு விக்கெட்
1 - 99

இதே டெஸ்டில் வேக பந்து பவுலர் ராம்காந்த் தேசாய்
4 - 66

பாகிஸ்தான் பவுலர்
ஹசீப் அஹ்சன் 6 - 202

சதங்கள்

இம்டியாஸ் அஹமத் 135
சயத் அஹமத் 103

பாலி உம்ரீக்கர் 117
சந்து போர்டே 177*

சுரேந்திர நாத் டெஸ்டுக் களில் பிடித்த கேட்சுக்கள் 4.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இங்கிலாந்தில் முதல் தர கிரிக்கெட் கெண்ட் அணிக்கு 32 வருட ங்கள் விளையாடியவர் வால்லி ஹார்டிங்கே. 623 முதல் தர மேட்சுகளில் 33500 ரன்களுக்கு மேல் எடுத்தவர். இவர் விளையாடியது ஒரே ஒரு டெஸ்ட்.இவரைப் போல் ஒரே ஒரு டெஸ்ட் விளையாடிய ஆண்ட்ரு டுகாட் இருவருக்கும் மற்றும் ஒரு ஒற்றுமை.இருவரும் 1910 ஆம் ஆண்டு இங்கிலாந்து கால் பந்து அணியில் விளையாடியவர்கள்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஆஸ்திரேலிய வீரர் ஜியார்ஜ் ஜான் போன்னார், என்பவர் தான் முதன் முதலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹிட் விக்கெட் முறையில் அவுட்
ஆனவர்.1884 ல் முதல் டெஸ்ட் மான்செஸ்டரில், முதல் இன்னிங்சில், இங்கிலாந்து வீரர் பியேட் ( Peate ) வீசிய பந்தில் ஹிட் விக்கெட் முறையில் அவுட் ஆனார்.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Monday, March 4, 2024, 15:08 [IST]
Other articles published on Mar 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+