For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

போர் களத்தில் மாண்ட 39வது கிரிக்கெட் வீரர்.. ஒரே நாளில் 14 விக்கெட் சாதனை படைத்திருக்கிறார்.. விவரம்

லண்டன் : இந்த இங்கிலாந்து அணி இடது கை பந்து வீச்சாளர் முதல் தர கிரிக்கெட்டில் இரண்டு முறை எதிரணியினர் இன்னிங்சின் 10 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார். நாட்டின்காம்ஷையர் டீமுக்கு ( Nottinghamshire ) எதிராக 10 ரன்கள் கொடுத்து இன்னிங்சின் மொத்த 10 விக்கெட்டுகளையும் எடுத்தார், 1932 ல்.378 முதல் தர கிரிக்கெட் ஆட்டங்களில் 1956 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

40 டெஸ்டுகளில் 144 விக்கெட்டுகள் எடுத்தவர் இவர். சர் டான் பிராட்மேனின் விக்கெட்டுகளை 10 முறை வீழ்த்தியுள்ளார். அவரின் விக்கெட்டுகளை அதிக படியாக எட்டு முறை டெஸ்டுகளில் எடுத்த பெருமை இவரையே சாரும்.
ஆஸ்திரேலியாவில் டக்ளஸ் ஜார்டைன் தலைமையில் நடைபெற்ற பாடி லைன் தொடரில் விளையாடியவர்.

cricket titbits - 39 Year old cricketer who took bradman wickets ten time lost his life in war

இவர் முதல் தர கிரிக்கெட் யார்க் க்ஷையர் ( Yorkshire ) டீமிற்காக விளையாடியவர். 1934 ம் வருடம் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒரு டெஸ்டில் ஒரே நாளில் 14 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்.இவர் 39 வயதிற்கு முன்பே பரிதாபமாக உயிர் துறந்தார்.

இரண்டாவது உலக மகா யுத்தத்தில், ராணுவத்தில் கேப்டன் பதவியில் இருந்த இவர் தனது படை வீரர்களை வழி நடத்தி முன்னேறிக் கொண்டு இருந்தார். அப்பொழுது மார்பில் ஏற்பட்ட காயத்தினால் உயிர் இழந்தார். இவரது உடல் இத்தாலியில் உரிய இராணுவ மரியாதையோடு புதைக்கப் பட்டது.

18 மே 1905 இங்கிலாந்தில் பிறந்த இவர் 31 ஜூலை 1943 ல் இத்தாலியில் மறைந்தார். இவர் கடைசியாக மறைவதற்கு நான்கு வருடங்களுக்கு முன்பு யார்க்க்ஷையர் டீமிற்காசக, சசெக்ஸ் டீமிற்கு ( Sussex) எதிராக 9 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இவர் கடைசி வரையில் போராடிய வீரர் ஆவார். கிரிக்கெட் மைதானங்களிலும், யுத்த களத்திலும்.

கிரிக்கெட் விளையாட்டில் தனது சிறந்த பந்து வீச்சு திறமையால் எதிரணி ஆட்டக்காரர்களை முதல் தர மேட்ச்கள் , டெஸ்ட் மேட்சுகளில் திணறடித்தார்.
யுத்த களத்தில் அடி பட்டு கீழே விழுந்து இருந்த போதும், அவர் கடைசியாக தனது குழுவின் ராணுவ வீரர்களுக்கு கூறியது ,Keep going தொடர்ந்து செல்லுங்கள் என்பது தான்.

cricket titbits - 39 Year old cricketer who took bradman wickets ten time lost his life in war

இவர் தனது இரண்டு மகன்களுக்கு வில்பிரட் ( Wilfred) மற்றும் ஜார்ஜ் டக்ளஸ் ( George Douglas ) என்று பெயர்கள் வைத்தார். இவர் மதித்த புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர்கள் வில்பிரட் ரஹோட்ஸ் ( Wilfred Rhodes) , ஜார்ஜ் ஹிர்ஸ்ட் ( George Hirst) டக்ளஸ் ஜார்டைன் ( Douglas Jardaine ) இவர்களின் நினைவாக.

இந்த கிரிக்கெட் வீரர் பெயர் ஹெட்லேய் வெரிட்டி ( Hedley Verity)

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Tuesday, January 2, 2024, 23:42 [IST]
Other articles published on Jan 2, 2024
English summary
cricket titbits - 39 Year old cricketer who took bradman wickets ten time lost his life in war போர் களத்தில் மாண்ட 39வது கிரிக்கெட் வீரர்.. ஒரே நாளில் 14 விக்கெட் சாதனை படைத்திருக்கிறார்.. விவரம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+