cricket Titbits - ஒரே ஓவரில் விழுந்த 5 விக்கெட்.. கிரிக்கெட்டில் நிகழ்ந்த புதுமை
சிட்னி : ஒரே ஓவரில் நான்கு விக்கெட்டுகள் கேள்விப்பட்டு இருக்கிறோம். சிலர் பார்த்தும் இருக்கிறார்கள். ஆனால் ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகள் புதுமை தான்.
பிப்ரவரி 2023 ல் ஆஸ்திரேலியாவில் மகளிர் தேசிய கிரிக்கெட் லீக் மேட்சில் ( Women's National Cricket League ( WNCL) இந்த சம்பவம் நடந்து ஏறியது.
தெற்கு ஆஸ்திரேலிய அணிக்கு கடைசி ஓவரில் வெற்றி பெற 4 ரன்கள் தேவை.
கை வசம் விக்கெட்டுகள் இருந்தன. வெற்றி தங்கள் பக்கம் என்ற நினைப்பில் ஆட்டத்தை தொடர்ந்தனர் ,தெற்கு ஆஸ்திரேலியா மகளிர் அணியினர்.

எதிர் பார்த்ததோ ஒன்று. நடைப் பெற்றதோ வேறு.
கிரிக்கெட் பல சுவாரஸ்யங்களை வெளிப் படுத்தும் என்பதற்கு இந்த மேட்சின் முடிவும் ஒரு எடுத்துக் காட்டு. தெற்கு ஆஸ்திரேலிய அணியினர் 47 ஓவர்களில் 243 ரன்கள் எடுக்கவேண்டியிருந்தது. கடைசி ஓவர் துவக்கத்தில் ஸ்கோர் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 239 ரன்கள். கடைசி ஓவரில் இரண்டு ரன் அவுட்டுகள் மற்றும் மூன்று விக்கெட்டுகள் விழ தாஸ் மானியா ( Tasmania)அணியினர் வென்றது
தாஸ்மானியா கேப்டன் எல்சே வில்லனி ( Elyse Villani) 126 பந்துகளில் 110 ரன்கள் குவித்தார்.கடந்த நான்கு இன்னிங்சில் இவரது மூன்றாவது சதம் இது.
கோய்டே ( Coyte) 30 ரன்கள் கொடுத்து 4 தெற்கு ஆஸ்திரேலிய அணி வீராங்கனைகளை வீழ்த்தினார்.தாஸ்மானியா அணி தொடர்ந்தார் போல் இரண்டாவது ஆண்டும் வெற்றி பெற்று அசத்தியது.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் கோவர் ( David Gower) 0 ரன் எடுக்காமல் தொடர்ந்து 119 இன்னிங்சுகள் விளையாடி சாதனை புரிந்தவர். (26.08.1982 - 26.12.1990) இவர் ஒருவர் மட்டும் தான் தொடர்ந்தார் போல் 100 இன்னிங்சுக்கும் மேல் இந்த வகை சாதனையை புரிந்தவர்
டெஸ்ட் மேட்சுகளில்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
முதல் தர கிரிக்கெட் ஆட்டங்களில் ஒரே இன்னிங்சில் அதிக ரன்களைக் குவித்த பட்டியலில் முதல் ஐந்து ஆட்டக்காரர்கள்.
01. ப்ரெயின் லாரா மேற்கு இந்திய வீரர். 501 நாட் அவுட் (1994)
02. ஹனீப் மொஹமத் பாகிஸ்தான் வீரர் 499 (1959)
03. டான் பிராட்மன் ஆஸ்திரேலிய வீரர் 452 நாட் அவுட் (1930)
04. பிபி நிம்பால்கர் இந்திய வீரர் 443 நாட் அவுட் (1948)
05. டபிள்யூ எச் பாண்ஸ் போர்ட் ஆஸ்திரேலியா வீரர் 437 (1927)
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வாசுதேவன் பெங்களூரு


Click it and Unblock the Notifications