பெங்களூரு : இந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஒரு முறை இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் பொழுது லங்கஷய்யர் அணிக்கு எதிரான முதல் தர மேட்ச்சில் விளையாடினார். இவர் பெயரைக் கொண்ட லங்கஷய்யர் அணியின் வீரர் இவர் விக்கெட்டை கைப்பற்றினார். இவர் அப்பொழுது எடுத்த ரன்கள் 99. இந்த வீரர் பெயர் பிரைன் பூத்.
இவர் ஒரு முறை டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்படாத பொழுது சர் டான் ப்ராட்மன் இவரை ஏன் தேர்வு செய்யவில்லை என்ற காரணத்தை குறிப்பிட்டு இவருக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதினார். பொதுவாக இந்த மாதிரி தனிப்பட்ட முறையில் கடிதங்கள் எதுவும் எழுதமாட்டார் டான் ப்ராட்மன் , என்பது குறிப்பிட்டத்தக்கது.

பிரைன் பூத் ஹாக்கி விளையாடுவதிலும் சிறந்து விளங்கினார்.
இவர் கிறிஸ்டியன் மதம் மீது தனிப்பட்ட ஈடுபாடு உடையவர். இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய பாதிரியார் ஷெப்பர்ட் மற்றும் மேற்கு இந்திய வீரர் கோனார்ட் ஹண்ட் இவர்களுடன் தனி தனியாக சேர்ந்து போதனை செய்துள்ளார். இவரை ஒரு ஜெண்டில்மன் கிரிக்கெட் வீரர் என்று அழைத்தனர்.
அவுட் என்று தெரிந்தால், அம்பயர் கையை தூக்கி அவுட் என்று கூறுவதற்கு முன்பே, பெவிலியன் நோக்கி செல்ல ஆரம்பித்து விடுவார்.இவர் நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக. முதல் தர கிரிக்கெட் விளையாடினார். பிரைன் பூத் அந்த அணிக்கு விளையாடிய கால கட்டத்தில் புகழ் பெற்ற ஷெப்பில்ட் ஷீல்ட்டை பல வருடங்கள் தொடர்ந்தால் போல் வென்றனர். இவர் பள்ளியில் கற்பிக்கும் தொழிலை விரும்பி செய்து வந்தார்.
டெஸ்ட்டுகள் 29.ரன்கள் 1773. சராசரி 42.21. சதங்கள் 5. அதிக பட்சம் 169. எடுத்த டெஸ்ட் விக்கெட்டுகள் 3.5 ஆண்டுகளுக்கும் குறைவாக டெஸ்ட்டுகள் விளையாடியவர்.
ஆகஸ்ட் 1961 ல் அறிமுக டெஸ்ட் இங்கிலாந்து அணிக்கு எதிராக மன்செஸ்டர்.
ஆஸ்திரேலிய அணி வெற்றி 54 ரன்கள் வித்தியாசத்தில்.
பிரைன் பூத்
46 & 9
பில் லாரி 102
பீட்டர் மே 95
பவுலிங் விக்கெட்டுகள்
ரிச்சி பேனோ 6
பாப் சிம்ப்சன் 5
ஆலன் டேவிட்சன் 5
பிரைன் ஸ்டாதம் 6
டேவிட் அல்லன் 4
பிரைன் பூத்தின் கடைசி டெஸ்ட் சிட்னியில், ஜனவரி,1966 ல். இங்கிலாந்து அணி வென்றது. பிரைன் பூத் இந்த மேட்சில் கேப்டன். இவர் எடுத்த ரன்கள்.
8 & 27.
இந்த டெஸ்டில் இரண்டு சதங்கள். இங்கிலாந்து வீரர்கள் பாப் பார்பர் 185. ஜான் எட்ரிச் 103.
ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்சில் மட்டும் பவுலிங் செய்தனர். அதில் அவர்கள் அணி பவுலலர் நெயில் ஹாவ்க் எடுத்த விக்கெட்டுகள் 7.
ஆஸ்திரேலிய அணி பால்லோவ் ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடர்ந்து ஆடினார்கள்.
இவர் வெகு வேகமாக டெஸ்ட் ஆட்டங்களில் 1000 ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இந்த சாதனையை தனது 11 வது டெஸ்டில் நிகழ்த்தினார். இது டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் 555 வது டெஸ்ட். சிட்னி பிப்ரவரி 1964. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக. இதில் பிரைன் பூத்தின் ஸ்கோர் 102* நாட் அவுட். 5 பவுண்டரிகள்.
இவர் கேப்டனாக இரண்டு டெஸ்ட்டுகளில் வழி நடத்தியுள்ளார். ரிச்சி பேனோ, பாப் சிம்ப்சன் ஆகிய இரண்டு கேப்டன்களின் தலைமையில் விளையாடியுள்ளார் பிரைன் பூத்.
oooooooooooooooooooooooooooooooooooooooooooo
டேவிட் ஜான் பிரவுன் 6 அடி 4 அங்குலம் உயரம் இருந்தார். இந்த வேக பந்து வீரர் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட், வார்விக்க்ஷயர் அணிக்காக முதல் தர கிரிக்கெட் விளையாடியவர். 26 டெஸ்ட்டுகளில் 79 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
முதல் தர ஆட்டங்களில் எடுத்த விக்கெட்டுகள் 1165.
இவரது சிறந்த பவுலிங் டெஸ்ட் மற்றும் முதல் தர ஆட்டங்களில் நடந்தது புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில். 1968ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 / 42
1975 ல் மிடில்செக்ஸ் அணிக்கு எதிராக 8 / 60.
இவர் ஒரு சிறந்த க்ளோஸ் இன் பீல்டர்.
1968 ஓவல் டெஸ்டில் அண்டர்வுட் பிராமதமாக சூழல் பந்துகள் வீசி இங்கிலாந்து அணி வெற்றி பெறவும், ஆஷஸ் தொடரை சமன் செய்யவும் உதவினார்.
அப்பொழுது முக்கிய தருணத்தில் டேவிட் பிரவு ன் , அண்டர்வுட் விக்கெட்டுகள் எடுக்க இரண்டு கேட்சுக்களை அட்டகாசமாக பிடித்து அசத்தி உதவினார்.
இவர் 1966 - 67 ல் பாகிஸ்தான் சென்ற
எம் சி சி இங்கிலாந்து அணி குழுவின் வைஸ் கேப்டனாக இருந்தார்.
வார்விக்க்ஷயர் அணிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார்.
கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற்று பல வருடங்கள் கழித்து 1982 ல் இவரது 40 வது வயதில் இவரது 390 வதும் கடைசி முதல் தர கிரிக்கெட் ஆட்டம் ஆடினார்.கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும் குதிரைகள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டி அந்த துறையில் சிறந்து விளங்கினார்.
வாசுதேவன், பெங்களூரு