பெங்களூரு : இந்த கிரிக்கெட் வீரர் இந்தியாவிற்காக டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒரு நாள் பந்தயங்களில் விளையாடி உள்ளார்.இவரது அறிமுக டெஸ்ட்டும், கடைசி டெஸ்ட்டும் பாகிஸ்தானுக்கு எதிராக பெங்களுரில் நடைப் பெற்றன.ஒரு நாள் பந்தயங்கள் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்தன.அறிமுகம் 1980 ல் மெல்போர்னில்.
கடைசி மேட்ச் 1987 ல் சென்னையில்.
இவர் பாகிஸ்தான் டீமிற்கு எதிரான 1987 கொல்கத்தா டெஸ்டில் தொடர்ந்தார் போல் வீசிய 5 ஒவர்களில் 9 ரன்கள் விட்டு கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்தார். அந்த மேட்ச்சில் இவர் வீழ்த்தியது 6 விக்கெட்டுகள் .இவர் 1977 - 78 ல் நடைப் பெற்ற மேட்ச்சில் கேரளா அணிக்கு எதிராக ஒப்பனிங் பேட்ஸ்மனாக களம் இறங்கி 211 ரன்கள் எடுத்தார், 451 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில்.

மேற்கு இந்திய தீவுகள் க்கு எதிரான டெஸ்ட் ஒன்றில், கார்டோன் கிரீனிட்ஜ், டெஸ் மெண்ட் ஹய்ன்ஸ், விவியன் ரிச்சர்ட்ஸ் இவர்களின் விக்கெட்டுகளை ஒற்றை பட
எண்களில் எடுத்தவர்.1986 ல் இங்கிலாந்து டெஸ்ட் ஒன்றில் இவர் எடுத்த 7 - 58, இந்திய டீம் தொடரை வெற்றிக் கொள்ள பெரிதும் உதவியது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு மேட்ச்சில் இவரது பார்ட்னர்ஷிப் மதன்லாலுடன் 155 ரன்களை எடுக்க உதவியது. அதில் இவரது ஸ்கோர் 83 * பெரிதும் பேசப்பட்டது.
83 ஆம் வருடம் இந்திய அணி ஒரு நாள் பந்தய உலக கோப்பை வென்று சாதனை படைத்தது.அதில் அதிக விக்கெட்டுகள் 18 எடுத்து அசத்தியவர்.
ஆஸ்திரேலியாவில் நடைப் பெற்ற வோர்ல்ட் சீரிஸ் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் 17 விக்கெட்டுகள் எடுத்தார்.இவரது மகனும் ஒரு நாள் பந்தயங்களில் பங்கு பெற்றவர்.இவர் கோச்சாக இருந்த பொழுது இந்திய டீம் 2000 ஆம் ஆண்டு 19 வயதிற்குள் உட்பட்ட உலக கோப்பையை வென்றது.இவர் தான் BCCI யின் தற்பொழுதிய தலைவர் ரோஜர் பின்னி.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ரோட்னி ரெட்மோன்ட் (Rodney Redmond ) என்ற கிரிக்கெட் வீரர் ஒரே ஒரு டெஸ்ட் விளையயடினார்.அதிலும் சதம், அரை சதம் எடுத்தார். இந்த நியூஸிலாந்து வீரர் 1973 ல் பாகிஸ்தான் டீமிற்கு எதிராக ஆடிய டெஸ்ட் மேட்சில் 107 & 56 ரன்கள் குவித்தார்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மஜித் கான் 1964 ல் டெஸ்ட் விளையாட துவங்கி 1983 வரையில் ஆன கால கட்டத்தில் விளையாடியது 63 டெஸ்டுகளே. 3931
ரன்கள் எடுத்த இவர், 8 சதங்கள் அடித்துள்ளார்.அதில் ஒன்று
நியூஸிலாந்து டீமிற்கு எதிராக காரச்சி டெஸ்ட்.1976.இந்த சதம் எடுக்க அவர் எடுத்துக் கொண்ட நேரம் 112 நிமிடங்கள். 78 பந்துகள். இந்த சதம் டெஸ்டின், முதல் நாள் லன்ச் இடைவேளைக்கு முன்பாக பதிவு செய்தது.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஆன்டி காந்தேையுமே ( Andy Ganteaume ) என்ற மேற்கு இந்திய தீவுகள் டீம் வீரர் விளையாடியது ஒரே ஒரு டெஸ்ட் மேட்ச் மட்டும் தான்.இவரது சராசரி ரன்கள் 112.
1948 ல் போர்ட் ஆப் ஸ்பெனில், இங்கிலாந்து டீமிற்கு எதிரான மேட்ச்.
இவர் எடுத்த ரன்கள் 112.
( 13 x 4 )
இந்த டெஸ்ட் மேட்ச்சில் 4 சதங்கள்.
மேலும் மேற்கு இந்திய தீவுகள் வீரர் பிரேங்க் வோரல் 97 ரன்கள் எடுத்தார்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
1969 ம் வருடம் டிசம்பர் மாதம் அன்றைய மெட்ராஸ் சேப்பாக் ஸ்டேடியத்தில் நடந்த மேட்ச்சில், இந்திய அணி வெற்றி பெரும் நிலையில் இருந்து ஒரு சிறிய தவறால் தோல்வியை தழுவியது.முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய டீம் 258 ரன்கள் எடுத்தனர்.இந்திய அணி 163 ரன்கள் எடுத்தது.
இரண்டாவது இன்னிங்சில் இந்திய சூழல் பந்துகளை சமாளிக்க முடியாமல்
ஆஸ்திரேலிய வீரர்கள் திணறி கொண்டு இருந்தனர். முதல் இன்னிங்சில் அருமையாக பந்து வீசி தலா 4 விக்கெட்டுகள் கைப்பற்றிய இ ஏ எஸ் பிரசன்னாவும், வெங்கட்ராகவனும் இரண்டாவது இன்னிங்க்சிலும் தொடர்ந்து திறமையாக வீசிக் கொண்டு இருந்தனர்.
தனது அறிமுக டெஸ்டில் கெய்த் ஸ்டாக்போல், இயன் சாப்பேல் இருவரையும் மிகவும் சொற்ப ரன்களுக்கு போல்ட் செய்தார், மொஹிந்தர் அமர்நாத். தொடர்ந்து வெகு நேர்த்தியாக பந்து வீசிய பிரசன்னா விக்கெட்டுகள் எடுத்த வண்ணம் இருந்தார். எதிரணியினர் 4 விக்கெட்டுகளை இழந்து ஸ்கோர் போர்ட்டில் 24 ரன்களுடன் தவித்துக் கொண்டிருந்த அந்த தருணத்தில் பேட்டிங் ஆட வந்த இயன் ரெட் பாத், பிரசன்னா வீசிய பந்தை அடிக்க பேட்டிங் க்ரீசை விட்டு முன்னேறிய ரெட் பாத்தால் அந்த பந்தை அடிக்க முடியவில்லை.
பந்து விக்கெட் கீப்பர் கைகளுக்கு சென்றும் என்ஜினீர் அந்த சுலபமான ஸ்டம்பிங்
சந்தர்ப்பத்தை நழுவ விட்டார். போதிய நேரம் இருந்தும் என்ஜினியரால் சரியாக செயல் பட முடியவில்லை.அந்த அருமையான வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார், இயன் ரெட் பாத். நின்று ஆடி 9 வதாக அவுட் ஆனார்.
அந்த ஸ்டம்பிங் மட்டும் நடந்து இருந்தால், அவர்கள் ஸ்கோர் 24 - 7 ஆகி இருக்கும் இந்திய டீம் வெற்றி பெற்று இருந்து இருக்கலாம்.ரெட்பாத் டீமின்ப் 153 ரன்களில், 63 ரன்கள் எடுத்து சில பார்ட்னர்ஷிப்கள் ஏற்படவும் காரணமாக இருந்தார்.
வெங்கட்ராகவான் 6 விக்கெட்டுகள், பிரசன்னா 10 விக்கெட்டுகள், அவர்கள் தரப்பில் மெக்கின்சி 7 விக்கெட்டுகள், அஷ்லே மல்லெட்ட 10 விக்கெட்டுகள் எடுத்தனர்.
டக் வால்டர்ஸ் 102, மன்சூர் அலிகான் பட்டோடி 59, அஜித்
வடேகர் 55, ஜி ஆர் விஸ்வநாத் 59 ரன்கள் எடுத்தனர்.அந்த நழுவ விட்ட சுலபமான ஸ்டும்பிங் சந்தர்ப்பம் இந்த மேட்ச்சில் டர்னிங் பாயிண்ட் ஆக கருத பட்டது அந்த கால கட்டத்தில். நான்கு நாட்களுக்குள் முடிவடைந்த இந்த டெஸ்டை முடிவில்
ஆஸ்திரேலிய டீம் வென்றது.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
1933 ம் வருடம். இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள் டெஸ்ட். ஓவல் மைதானத்தில்.
இந்த இங்கிலாந்து ஸ்பின் பவுலர், தனது அறிமுக டெஸ்டில் அருமையாக பந்து வீசினார், இரண்டு இன்னிங்சிலும்.முதல் இன்னிங்சில் 37 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்தார். இரண்டாவது இன்னிங்சில் 59 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் எடுத்தார்.
சார்லாஸ் மாரியட் ( Charles Marriott ) என்னும் இவர் மிக திறமையாக அறிமுக டெஸ்டில் 11 விக்கெட்டுகள் அள்ளி அவரது டீம் வெற்றி பெற வழி வகுத்தாலும், இவரது இந்த அறிமுக டெஸ்ட் மேட்ச் , கடைசி டெஸ்ட் ஆக முடிந்தது வினோதம் தான்.
வாசுதேவன், பெங்களூரு