Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே நாளில் இரு முறை ஹாட்ரிக் எடுத்த வீரர்.. 408 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்த இந்திய அணி

மும்பை : இந்த டெஸ்டில் முதல் நான்கு இந்திய வீரர்கள் சதங்கள் எடுத்தனர். முதல் விக்கெட்டு விழுந்த பொழுது ஸ்கோர் 408. அதற்குள் முதல் நான்கு வீரர்களும் பேட்டிங் ஆடினார்கள். ஒப்னிங் ஜோடி இருவரும் கால்களில் வலிகளின் காரணமாக தொடர்ந்து விளையாட முடியாமல் ரிட்டயார்ட் ஹர்ட் ஆகி பின்னால் தொடர்ந்து விளையாடினார்கள்.

துவக்க ஆட்டக்காரர் தினேஷ் கார்த்திக் 129, மற்றும் ஒரு துவக்க வீரர் வாசிம் ஜாபர் 138, ராகுல் திராவிட் 129, சச்சின் டெண்டுல்கர் 122 ரன்கள் குவித்தனர். இந்திய அணி ஸ்கோர் 610 / 3 என்ற நிலையில் டிக்ளர் செய்தனர். எதிரணி வங்காள தேசம் ஒரு இன்னிங்ஸ் 239 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவினர்.

Cricket titbits - Aussie cricketer who picks hat trick twice in a day

ஜாகீர் ஹீர் கான் இந்த டெஸ்டில் மொத்தம் 7 விக்கெடுக் கள் எடுத்தார். ஆட்ட நாயகனாக தேர்ந்து எடுக்கப் பட்டார். வங்காள தேசத்து 4 பவுலர்கள் ஒவ்வொருவரும் தலா 100 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்தனர், அவர்கள் பவுலிங்கில்.

முதல் நான்கு வீரர்கள் வரிசையாக ஒரே இன்னிங்சில் சதங்கள் எடுத்தது, டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் இதுவே முதல் முறையாகும்.

இந்த டெஸ்ட் 2007 ல்
மிர்பூரில் நடைப் பெற்றது.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

முகம்மது முனாப் என்ற வேக பந்து பவுலர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு 4 டெஸ்டுக்கள் விளையாடியவர். 7 விக்கெடுக்கள் எடுத்தார். மேற்கு இந்திய தீவுக்கள் ( 1957 - 58 ) & இந்தியா ( 1960 - 61 ) சுற்றுப் பயணம் செய்தார், ஒரு டெஸ்டிலும் விளையாடாமல்.

1959 ல் லாகூர் டெஸ்டில் அறிமுக ஆட்டம். இரண்டு இன்னிங்சிலும் இரண்டு, இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வென்றனர்.ஓநீல் 134, சயத் அஹமத் 166 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய பவுலர் க்ளைன் எடுத்த விக்கெட்டுக்கள் 8.

1 / 15 & 7 / 75

முகம்மது முனாப்,. இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் ஆடினார். டாக்கவில் 1962ல். இந்த ஆட்டம் டிராவில் முடிவு பெற்றது.

இந்த டெஸ்டில் பாக்கிஸ்தான் ஒப்பனிங் பேட்ஸ்மன் ஹனிப் முஹம்மது இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் பதிவு செய்தார்.
111 & 104

இவரை தவிர இந்த டெஸ்டின் சதங்கள்.
ஜவேட் பர்கி 140
ஜியோப் புல்லர் 165

பவுலிங்

டோனி லாக் விக்கெட்டுக்கள் 8
4 / 155 & 4 / 70
டேவிட் ஆலன் 7
2 / 94 & 5 / 34

முகம்மது முனாப், பாசல் மஹமூட், இம்டியாஸ் அஹமத் ஆகிய இரண்டு கேப்டன்கள் தலைமையில் டெஸ்டுக்கள் விளையாடியவர்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

டெஸ்டுக்களில்
ஹாட் ட்ரிக் எடுப்பது சாதாரண விஷயம் அல்ல. ஆஸ்திரேலிய ஸ்பின் பவுலர் ஜிம்மி மாத்யூஸ் என்பவர் ஒரே நாளில் இரண்டு முறை இந்த சாதனை செய்து அசத்தியுள்ளார். இதில் இரண்டு க்ளீன் போல்ட், இரண்டு LBW, இரண்டு இவரே கேட்சுக்கள்
பிடித்தது இவரது பவுலிங்கிலேயே.

இந்த சாதனையை லெக் பிரேக் பவுலரான ஜிம்மி மாத்யூஸ் 1912 ல் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நிகழ்த்தினார். இரண்டு இன்னிங்சிலும் இவரது மூன்றாவது விக்கெட், விக்கெட் கீப்பர் டொம்மி வார்டு ஆவார். இந்த தென் ஆப்ரிக்க விக்கெட் கீப்பரின் அறிமுக டெஸ்ட் இது. இரண்டு இன்னிங்சிலும் இவர் ரன் எதுவும் எடுக்கவில்லை. 0.

8 டெஸ்டுக்கள் ஆடிய ஜிம்மி மாத்யூஸ் 16 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இவரது அறிமுக டெஸ்டில், புகழ் பெற்ற ஜாக் ஹாப்ஸ் ரன்கள் 187, க்ளேம் ஹில் 98 எடுத்தனர். ஜிம்மி மாத்யூஸ் எடுத்தது 1 விக்கெட்டு.

அறிமுக டெஸ்ட் ஜனவரி 1912 அடி லெய்ட் மைதானத்தில்.
இவரது கடைசி டெஸ்ட் ஆட்டம், 1912 ஆகஸ்டில். இங்கிலாந்து அணிக்கு எதிராக.
இவர் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இந்திய கிரிக்கெட் வீரர் ருசி சுர்த்தி இடது கை பேட்டிங், பவுலிங் செய்தவர். 26 டெஸ்டுக்கள். ரன்கள் 1263. அதிக பட்ச ரன்கள் 99. அரை சதங்கள் 9.
26 கேட்சுக்கள். விக்கெடுக்கள் 42.

அறிமுக டெஸ்ட் பாக்கிஸ்தான் அணிக்கு எதிராக 1960 ல் அன்றைய பம்பாய் பிராப்போர்ன் ஸ்டேடியத்தில். இந்திய அணி பேட்டிங் ஆடிய ஒரே இன்னிங்சில் இவரது ஸ்கோர் 11. இந்த டெஸ்டில் ஹனிப் முஹம்மது 160, சயத் அஹமத் 121.

ருசி சுர்த்தியின் கடைசி டெஸ்ட் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதே
பம்பாய் பிராப்போர்ன் ஸ்டேடியத்தில், 1969 ல். இந்த டெஸ்ட்டில்
ஆஸ்திரேலிய அணி வென்றது.இரண்டாவது இன்னிங்சில் விழுந்த 2 விக்கெடுக்களையும் கைப் பற்றியவர் ருசி சுர்த்தி.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Wednesday, May 29, 2024, 10:56 [IST]
Other articles published on May 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+