Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எலிசபெத் ராணியிடமே கிண்டல் அடித்த இங்கிலாந்து வீரர்! 64 ஆண்டுக்கு முன் நடந்த IND vs WI டெஸ்ட் தொடர்

லண்டன் : ஒரு முறை ஆஸ்திரேலிய கிரிக்கெட் குழு இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற் கொண்டனர். டெஸ்ட் ஆடுவதற்கு முன்பு அரசி எலிஸபெத்துக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் ஐயான் க்ரெய்க் என்பவரிடம் அரசி வினவினார், " நீங்கள் இங்கிலாந்துக்கு வருவது இது தான் முதல் முறையா?", என்று. உடனே க்ரெய்க் கூறினார், " ஆமாம். ஆனால் நான் சரியாக விளையாடாவிட்டால் இதுவே கடைசி முறையாகவும் இருக்கும்..!" என்று.


1958 - 59 ல் எப் சி எம் அலெக்சாண்டர் தலைமையில் இந்தியாவுக்கு வருகை தந்த மேற்கு இந்திய தீவுக்கள் அணி 5 டெஸ்ட் மேட்ச்சுக்கள்
விளையாடினார்கள். இந்த தொடரை 3 - 0 என்ற வித்தியாசத்தில் அவர்கள் வென்றனர்.
இந்த தொடரில் ஒரு இரட்டை சதம் மற்றும் 8 சதங்கள் மேற்கு இந்திய தீவுக்களின் வீரர்கள் எடுத்தனர்.

ind vs aus border gavaskar trophy india vs australia vs


இந்திய அணியின் சார்பாக ஒரே ஒரு சதம் அடித்தவர் சந்து போர்டே 109.
டெல்லி டெஸ்டில். இரண்டாவது இன்னிங்சில் சதம் எடுக்க நெருங்கிக் கொண்டு இருந்தார் சந்து போர்டே. எதிர் முனையில் கிட்ட தட்ட எல்லா வீரர்களும் அவுட். கையில் காயம் காரணமாக விளையாட மாட்டார் என்று எதிர் பார்த்த விஜய் மஞ்சுரேகர் கையில் கட்டுடன் கடைசி வீரராக களம் இறங்கினார், சந்து போர்டே இரண்டாவது இன்னிங்சிலும் சதம் எடுக்க உதவி செய்ய.

சந்து போர்டே சதம் எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் , பதட்டத்தில் ஆட போய் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் 96 ரன்களில்.இந்த டெல்லி டெஸ்டில் அறிமுகம் ஆன வேக பந்து வீசும் ராம்கன்ட் தேசாய் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

இந்த டெஸ்டில் பாலி உம்ரிக்கர், விஜய் மஞ்சுரேக்கர், ஹால், கில்கிறிஸ்ட் ஆகிய முக்கிய முன்னணி வீரர்கள் கைகளில் காயங்கள் காரணமாக முழுமையாக பங்கு பெறவில்லை.இந்த தொடரில் அதிக ரன்கள் ஆன 256 கல்கத்தா டெஸ்டில் எடுத்து அசத்திய கன்ஹாய் அடுத்த மெட்ராஸ் டெஸ்டில் 99 ரன்கள் எடுத்த பொழுது ரன் அவுட் ஆனார்.

இந்த தொடரில் இரண்டு டெஸ்டுக்களில் மேற்கு இந்திய தீவுக்கள் அணியின் மூன்று வீரர்கள் சதங்கள் பதிவு செய்தனர் அவை

3 வது டெஸ்ட் கல்கத்தா.
ரோகன் கன்ஹாய் 256
பேசில் புட்ச்சர் 103
சோபர்ஸ் 106*

5 வது டெல்லி டெஸ்ட்.
ஜே கே ஹோல்ட் 123
ஓ ஜி ஸ்மித் 100
ஜே சாலமன் 100*

காரி சோபர்ஸ் 3 சதங்கள்

பாம்பாய் 142*
கான்பூர் 198
கல்கத்தா 106*

பேசில் புட்ச்சர் 2 சதங்கள்
கல்கத் தா 103
மெட்ராஸ் 142

இந்திய ஸ்பின் பவுலர் சுபாஷ் குப்தே
2 வது கான்பூர் டெஸ்டின் முதல் இன்னிங்சில் அருமையாக பந்து வீசி மேற்கு இந்திய தீவின் 9 வீரர்களின் விக்கெட்டுக்கள் எடுத்து சாதித்தார்.இருந்தும் , மேற்கு இந்திய தீவுக்கள் அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.காரி சோபர்சின் பேட்டிங் தவிர வேக பந்து வீரர் வெஸ் ஹால் எடுத்த 11 விக்கெட்டுக்களும் ஒரு முக்கிய காரணம்.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Wednesday, December 25, 2024, 16:10 [IST]
Other articles published on Dec 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+