For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தொடர்ந்து 4 சதம் அடித்த வீரர்.. 1387 விக்கெட்டு எடுத்து சாதனை.. இன்னும் பல சுவாரஸ்ய தகவல்களுடன்

ஜாக் பிங்கில்டன் , ஆஸ்திரேலியா அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியவர். முதல் தர கிரிக்கெட் விளையாடியது
நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக.இவர் 18 டெஸ்டுகளில் 1189 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 42.46

5 டெஸ்ட் சதங்கள். இவற்றில் தொடர்ந்தார் போல் நான்கு டெஸ்டுகளில் சதங்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.

Cricket titbits - Back to Back 4 century and surrey all rounder picks 1387 wickets

தென் ஆப்பிரிக்கா கேப் டவுன் 01.01.1936
112
ஜோக்கான்னாஸ்புர்க் 15.02.1936
108
டர்பன் 28.02.1936
11

இங்கிலாந்து
பிரிஸ்பேன் 04.12.1936
100

மற்றும் ஒரு சாதனை.
6 வது விக்கெட்டிற்குப் பார்ட்னர்ஷிப். டான் ப்ராட்மனுடன் சேர்ந்து எடுத்த ரன்கள் 346. இங்கிலாந்திற்கு எதிராக மெல்போர்ன் டெஸ்டில். 01.01.1937.

இந்த டெஸ்டில்
ஜாக் பிங்கில்டன் எடுத்தது 136 ரன்கள். டான் ப்ராட்மன் எடுத்த ரன்கள் 270.
இவர் ஒரு டெஸ்டில் முதல் இன்னிங்சில் 100 ரன்களும் அடுத்த இன்னிங்க்சில் ரன் எதுவும் எடுக்கவில்லை. ( 0 )

இவர் தனது அறிமுக டெஸ்டில் எடுத்த ரன்கள் 40. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக மெல் போர்ன் டெஸ்ட்டில். பிப்ரவரி 1932 ல்.
இந்த டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்கோர்
36 45

ஆஸ்திரேலிய அணி ஸ்கோர்
153

ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இவரது கடைசி டெஸ்ட் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆகஸ்ட், 1938.
ஓவல் மைதானத்தில். காயம் காரணமாக ஜாக் பிங்கில்டன் இரண்டு இன்னிங்சிலும் பேட்டிங் விளையாடவில்லை.

ஜாக் பிங்கில்டன் ஒரு சிறந்த எழுத்தாளாராகவும், வர்ணனையாளா ராகவும் திகழ்ந்தவர். இவர் கிரிக்கெட் பற்றி பல கட்டுரைகளும், புத்தகங்களும் எழுதியுள்ளார்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பில் ஹிட்ச் என்ற வீரர் வேக பந்து வீசுபவர்.

இவர் சர்ரே டீமிற்கு முதல் தர கிரிக்கெட் விளையாடியவர். 350 மேட்சுக்களில் 1387 விக்கெட்டுக்கள் எடுத்துள்ளார். 7643 ரன்கள் எடுத்துள்ளார். 3 சதங்கள். 230 கேட்சுக்கள் பிடித்துள்ளார்.

இங்கிலாந்து டீமிற்காக டெஸ்டுக்கள் விளையாடி உள்ளார்.
7 டெஸ்ட்டுக்கள் விளையாடிய இவர் எடுத்த டெஸ்ட் விக்கெட்டுக்கள் 7

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சாமுவேல் வுட்ஸ் சிட்னி ஆஸ்திரேலியாவில் பிறந்தவர். இவர்
ஆஸ் திரேலியா மற்றும் இங்கிலாந்து இரண்டு டீம்களுக்கும் , டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியவர்.

இங்கிலாந்து சுற்றுப் பயணம் சென்ற
ஆஸ்திரேலிய டீமில் ஜூலை, 1888 ல் லார்ட்ஸ் டெஸ்டில் அறிமுகம் ஆனார். இவரது ஸ்கோர்
18 3

ஒரு இன்னிங்சில் மட்டும் 4 ஓவர்கள் போட்டார். 2 மெய்டன். 6 ரன்கள். 1 விக்கெட்.

ஸ்கோர்
ஆஸ்திரேலியா

116 60

இங்கிலாந்து

53 62

61 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது.

6 டெஸ்டுக்கள் ஆடிய இவர் இரண்டு டீம்களுக்கும், சரி சமமாக தலா மூன்று டெஸ்டுக்கள் விளையாடினார்.

இவரது கடைசி டெஸ்ட் இங்கிலாந்து டீம் சார்பாக, தென் ஆப்பிரிக்கா டீமிற்கு எதிராக கேப் டவுன் டெஸ்ட். மார்ச், 1896.
ஸ்கோர்
30 ரன்கள்

3 - 28

ஸ்கோர்
தென் ஆப்பிரிக்கா
115 117
இங்கிலாந்து
265

ஒரு இன்னிங்ஸ் 33 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து டீம் வெற்றி பெற்றது.

6 டெஸ்டுக்களில் 10 விக்கெட்டுக்கள் எடுத்துள்ளார்.

எடுத்த ரன்கள் 154

முதல் தர கிரிக்கெட்டில் எடுத்த விக்கெட்டுக்கள் 1040.

அடித்த ரன்கள் 15345. அதிக பட்சம் 215

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஆஸ்திரேலியா டீமில் இவர் அறிமுக ஆட்டக்காரராக விளையாடும் பொழுது இவரது வயது 46
வருடங்கள் 253 நாட்கள்.
(14.12.1928)

டான் பிளாக்கி,
இங்கிலாந்திற்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் இவர் எடுத்தார் 6 - 94. அப்பொழுது இவரது வயது 46 வருடங்கள் 268 நாட்கள்( 29.12. 1928 )

3 டெஸ்ட்டுக்கள் விளையாடிய இவர் எடுத்த விக்கெட்டுக்கள் 14.

அறிமுக சிட்னி டெஸ்டில் ஒரே ஒரு இன்னிங்சில் மட்டும் பவுலிங் செய்தார்.
4 / 148

இந்த இன்னிங்சில், இங்கிலாந்து டீம் எடுத்த ரன்கள் 636.

வால்லி ஹம்மோன்ட் எடுத்த ரன்கள் 251.

இங்கிலா ந்து டீம் 8 விக்கெடுக்கள் வித்தியாசத்தில் வென்றது.

டான் பிளாக்கி கடைசி டெஸ்டிலும், வால்லி ஹம்மோன்ட் சதம் எடுத்தார்.

இந்த முறை இரண்டு இன்னிங்ஸ்களிலும்.
119* நாட் அவுட்
177

இந்த அடிலெய்ட் டெஸ்ட்
டான் பிளாக்கி விளையாடிய கடைசி டெஸ்ட்.
1 / 57 2 / 70

12 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து டீம் வென்றது.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

வி வி எஸ் லட்சுமண் 1996 நவம்பரில் தென் ஆப்பிரிக்கா டீமிற்கு எதிராக, தனது அறிமுக டெஸ்ட் ஆடினார்.

அகமதாபாத் டெஸ்டில். ஸ்கோர்
11 51

134 டெஸ்டுக்கள் ஆடிய இவரது கடைசி டெஸ்ட்
2012 ஜனவரியில்
அடிலெய்ட் டெஸ்ட்.

ஆஸ்திரேலிய டீம்.
ஸ்கோர்
18 35

8781 டெஸ்ட் ரன்கள்.
அதிக பட்சம் 281
சராசரி 45.97
சதங்கள் 17
அரை சதங்கள் 56
கேட்சுக்கள் 135
விக்கெட்டுக்கள் 2

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Sunday, March 31, 2024, 16:06 [IST]
Other articles published on Mar 31, 2024
English summary
Cricket titbits - Back to Back 4 century and surrey allrounder picks 1387 wickets தொடர்ந்து 4 சதம் அடித்த வீரர்.. 1387 விக்கெட்டு எடுத்த சாதனை.. இன்னும் பல சுவாரஸ்ய தகவல்கள் உடன்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+