Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த பில்டர் நிற்கிறார் என்றால் பேட்ஸ்மேன் நடுங்குவார்கள்.. அப்படி ஒரு இந்திய வீரர் பற்றி தெரியுமா?

இவர் , பேட்டிங் ஆடும் வீரருக்கு அருகில் பார்வார்ட் ஷாட் லெக் (Forward Shot Leg position) சைடில் , பீல்ட் செய்கிறார் என்றால் நடுங்கிய பிரபல ஆட்டக்காரர்கள் டெஸ்டுகளில் உண்டு.

இவர் தான் அன்றே இந்திய அணியின் இம்பாக்ட் பிளேயர் ( Impact Player ) ஆக திகழ்ந்தவர், அணியில் 11 வீரர்களில் ஒருவராக ஆடி, கேட்சுக்கள் பிடித்து தாக்கத்தை
( Impact created) உண்டு செய்தவர்.

india national cricket team ind vs eng cricket cricket history sports news interesting facts


இவர் பீல்டிங்கில் சிறந்த வீரர். அதுவும் பார்வார்ட் ஷாட் லெக் பகுதியில் கேட்சுக்களை அள்ளுவதில் மன்னர். இவர் தான் ஏக்நாத் சோல்கர். ( Eknath Solkar )
ஏழை குடும்பத்தில் பிறந்த இவர், தனது கடினமான உழைப்பால், விடா முயற்சியால் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து, சாதித்தார்


சோல்கர் பல அடிக்கப்பட்ட பந்துக்களை கேட்சுக்களாக மாற்றி பிடித்து அசத்தியவர். இவர் தரைக்கு இடையே இருக்கும் கொஞ்ச இடைவெளியிலும் , கேட்சுக்களை அள்ளுவதில் சூரர். ( he took catches inches above the ground ).இவர் பீல்ட் செய்ய நின்ற பகுதிக்கு suicidal field position என்று அழைப்பார்கள். அந்த இடத்தில் பீல்ட் செய்ய பலர் தயங்குவார்கள்.

இவர் தையரியமாக ( பாதுகாக்க ஹெல்மட், ஷின் கார்டு போன்ற எந்த உபகாரணங்களும் இல்லாமல் ) நின்று அட்டகாசமான ஆட்ட த்தை வெளிக்காட்டியவர். இவர் விளையாடிய கால கட்டத்தில் ஆடிய நான்கு புகழ் பெற்ற ஸ்பின் பவுலர்களின் ( பிரசன்னா, சந்திரசேகர், பேடி, வெங்கட்ராகவன்) பந்துக்களிலிருந்து புறப்பட்ட கேட்ச்சுக்களை தாவி பிடித்து, அவர்களுக்கு விக்கெட்டுக்கள் கிடைக்க பெரிதும் உதவியுள்ளார்.

தேவை ஏற்பட்ட பொழுது, டெஸ்ட்மேட்ச்சுக்களில் ஒப்பனிங் பேட்டிங் மற்றும் பவுலிங் செய்துள்ளார். இவர் இடது கை வீரர். ஸ்பின் பவுலிங்கும் போடுவார்.
சோல்கர் மேற்கு இந்திய தீவுகளில், இங்கிலாந்தில் தனது சிறந்த ஆட்டங்களை இந்திய அணிக்கு தேவை என்ற சமயங்களில் ஆடி கை கொடுத்தவர்.

மேற்கு இந்திய தீவுக்கள் அணிக்கு எதிராக தொடரை முதன் முதலாக வென்ற இந்திய அணியின் 1971 போர்ட் ஆப் ஸ்பெயின் டெஸ்டில் இவர் பிடித்த கேட்சுக்கள் 6.
இங்கிலாந்தில், இந்திய அணி ஒரு டெஸ்டின் இரண்டாவது இன்னிங்க்சில் ( 1974 லார்ட்ஸ்) ஆல் அவுட் 42. ஏக்நாத் சோல்கர் அதில் 18 நாட் அவுட் , ஒரு சிக்ஸர் உட்பட.

இவர் ஆடியது 27 டெஸ்டுக்கள். ரன்கள் 1068. சதம் 1. அரை சதங்கள் 6.
இந்திய பள்ளிகளின் கிரிக்கெட் அணியை, இங்கிலாந்திற்கு கேப்டனாக வழி நடத்தியவர். முதல் தர கிரிக்கெட் மும்பை ( அன்றைய பம்பாய் ) அணிக்காக விளையாடியவர். ஒரு நாள் ஆட்டங்களிலும் இந்திய அணியில் விளையாடியவர்.
27 டெஸ்டுக்களில் முத்திரைப் பதித்த கேட்சுக்களின் எண்ணிக்கை 53.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Tuesday, June 4, 2024, 20:21 [IST]
Other articles published on Jun 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+