For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெஸ்ட் கிரிக்கெட்டில் கலக்கிய சகோதரர்கள்.. ஒரே இன்னிங்ஸில் 9 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்

பெங்களூரு : டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் பல சகோதரர்கள், பல்வேறு காலகட்டத்தில் தனி தனியாகவும், ஜோடியாகவும் , சேர்ந்தும் விளையாடி உள்ளார்கள். அவர்களில் சிலரைப் பற்றிப் பாப்போம்.

சுபாஷ் மற்றும் பாலு குப்தே சகோதரர்கள்.
சுபாஷ் குப்தே (Subash Gupte ) இந்திய கிரிக்கெட் அணியில் தலை சிறந்த லெக் ஸ்பின் பவுலராக திகழ்ந்தார். இவர் 36 டெஸ்டுகளில் 149 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பொழுது, அணில் கும்ப்ளேக்கு முன்பாக ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை கிட்டத்தட்ட பெற்றுவிட்டார்.

cricket titbits - Brothers who played test cricket - Who is subash gupte - man pickes 9 wickets in a innings

இவர் வீசிய பந்தில் மேற்கு இந்திய அணி ஸ்பின் பவுலர் லான்ஸ் கிப்ஸ் (Lance Gibbs) கேட்ச் கொடுத்தார். அந்த வாய்ப்பை தவற விட்டார் விக்கெட் கீப்பர் நரேன் தாமானே (Naren Tamhane) ,கேட்ச் பிடிக்கவில்லை. அதனால் அந்த இன்னிங்சில் மற்ற 9 ஆட்டக் காரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்திய சுபாஷ் குப்தேவினால் அறிய 10 விக்கெட் வீழ்த்தும் சாதனையை அடைய முடியவில்லை. கிப்ஸ் விக்கெட்டை எடுத்தவர் வசந்த் ரஞ்சனே.(Vasanth Ranjane).

சுபாஷ் குப்தே 102 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இவர் தான் இந்தியாவில் முதல் தர கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பவுலர். 78 ரன்களுக்கு 10 விக்கெட்டுகள். இவர் இந்தியாவில் பம்பாய் , (Bombay) வங்காளம் , (Bengal) ராஜஸ்தான் டீம்களுக்கு ஆடியுள்ளார். இங்கிலாந்திலும் விளையாடியவர்.

மேற்கு இந்திய தீவின் டிரினிடாட் பகுதியில் குடி பெயர்ந்தார். 1929 ல் பிறந்த இவர் தனது 72 வது வயதில் 2002 ஆம் ஆண்டு மறைந்தார். இவரது சகோதரர் பாலு குப்தேயும் (Baloo Gupte) லெக் ஸ்பின் பவுலர். இந்தியாவிற்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியவர். பாலு குப்தே விளையாடியது மொத்தம் மூன்று டெஸ்ட் மேட்சுகள். எடுத்த விக்கெட்டுகள் 3 மட்டுமே.

முதல்தர கிரிக்கெட்டில் 99 மேட்சுகளில் 417 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
இவரது சகோதரர் போல் உள்நாட்டு கிரிக்கெட் பம்பாய், வங்காளம் தவிர ரயில்வேஸ் அணிகளுக்கு விளையாடி உள்ளார். 1934 ல் பிறந்த இவர் 70 வது வயதில் 2005 ல் மறைந்தார்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பெனாட் சகோதரர்கள் ( ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் )( Benaud Brothers)
ரிச்சி பெனாட் ( Richard (Richie) Benaud) மொத்தம் 63 டெஸ்டுகளில் 2201 ரன்கள் எடுத்தார். சராசரி 24.45.

3 சதங்கள் எடுத்துள்ளார். 248 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். 1952 முதல் 1964 வரை டெஸ்டுக்கள் ஆடிய இவர் 1958 ல் கேப்டனாகி, ஓய்வு பெறும் வரை அந்த பதவியில் இருந்தார். 1960 டிசம்பர் மாதம் நடைப் பெற்ற புகழடைந்த பிரிஸ்பேன்( Brisbane) டெஸ்ட் மேட்சில் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக இருந்தவர். சுற்றுப் பயணம் மேற்கொண்ட மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் முதல் டை ( First Tied test) ஆன டெஸ்ட் மேட்ச் அது.

ஓய்வு பெற்றதும் , சிறந்த வர்ணனையாளராக திகழ்ந்தார். 1930 ல் பிறந்த இவர் 84 வது வயதில் 2015ஆம் ஆண்டு மறைந்தார். இவரது சகோதரர் ஜான் பெனாட் (John Benaud) இவரும் டெஸ்ட் மேட்ச்சுகள் விளையாடியவர். ஜான் பெனாட் மொத்தம் 3 டெஸ்டுகள் விளையாடியுள்ளார். 223 ரன்கள் எடுத்த இவரது சராசரி 44.60.

இவர் பத்திரிக்கை துறையில் வேலை பார்த்தார். கிரிக்கெட் பற்றி எழுதி வந்தார். புத்தகங்களும் எழுதியுள்ளார். இவர் டெஸ்டுகள் விளையாடியது பாகிஸ்தான் மற்றும் மேற்கு இந்திய தீவு அணிகளுக்கு எதிராக ஒரு சதம் (142 ) ரன்கள் 2 விக்கெட்டுகள்
வீழ்த்தியுள்ளார்.

வாசுதேவன் பெங்களூரு

Story first published: Sunday, December 31, 2023, 12:14 [IST]
Other articles published on Dec 31, 2023
English summary
cricket titbits - Brothers who played test cricket - Who is subash gupte - man pickes 9 wickets in a inningsடெஸ்ட் கிரிக்கெட்டில் கலக்கிய சகோதரர்கள்.. ஒரே இன்னிங்ஸில் 9 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+