Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

36 ஆயிரம் ரன்கள்.. 185 முறை நாட் அவுட்.. விளையாடியதோ 7 டெஸ்ட் தான்.. இன்னும் மற்ற சுவாரஸ்ய தகவல்கள்

பெங்களுரு : முதல் தர அறிமுக மேட்ச் மற்றும் இவர் விளையாடிய கடைசி முதல் தர மேட்ச் இரண்டிலும் இவர் எடுத்தது ஒரே மாதிரியான ரன்கள் 115.இந்த வீரர் விளையாடியது 719 முதல் தர மேட்ச்சுக்கள்.எடுத்தது 36012 ரன்கள். 72 சதங்கள் எடுத்துள்ளார். இவர் விளையாடிய 7 டெஸ்டுக்களில் அவ்வளவாக சோபிக்க வில்லை.

வில்லியம் ஜார்ஜ் குவாைப் என்ற இவர் பல முறை அவுட் ஆகாமல் இருந்துள்ளார் அவற்றின் எண்ணிக்கை நாட் அவுட் 185.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

Cricket titbits - Cricketer who scored 36012 runs in domestic cricket played only 7 test matches


வாரேன் பார்ட்ஸ்லே என்ற ஆஸ்திரேலிய ஒப்னிங் பேட்ஸ்மன் முதன் முதலில் இரண்டு இன்னிங்சிலும் சதங்கள் அடித்தவர்.இங்கிலாந்து அணிக்கு எதிராக. 1909 ல். ஓவல் டெஸ்ட்.136 , 130 ரன்கள். இவர் அடுத்த டெஸ்ட் சதம் அடித்தது 17 வருடங்களுக்கு பிறகு 1926 ல் புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில்.

அந்த டெஸ்ட் டிராவில் முடிந்தது. இவரது ஸ்கோர் 193* ( நாட் அவுட் )
ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 383. ஓப்பனிங் வீரராக களம் இறங்கிய இவர் கடைசி வரையில் அவுட் ஆகாமல் 193* எடுத்து காரிட் தி பேட் ( carried the bat ) சாதனை புரிந்தார்.

வாரேன் பார்ட்ஸ்லே தான் மிக அதிகமான வயதில் டெஸ்ட் மேட்சை கேப்டனாக திகழ்ந்தவர் லிஸ்டில் முதல் இடத்தில் உள்ளார்.10 ஜூலை, 1926 அன்று ஆஸ்திரேலிய அணியை லீட்ஸ் மைதானத்தில் முதல் முறை கேப்டனாக வழி நடத்தும் பொழுது இவரது வயது 43 வருடங்கள் 216 நாட்கள்.இந்த டெஸ்டில் முதல் பந்தில் இவர் அவுட். ரன் எதுவும் எடுக்கவில்லை. ( 0 ).41 டெஸ்டுக் கள் விளையாடிய இவர் எடுத்தது 2469 ரன்கள் 6 சதங்கள்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பிரெட் ஹீஷ் ( Fred Huish ) என்ற விக்கெட் கீப்பர் 450 க்கும் மேற்பட்ட முதல் தர மேட்ச்சுகளில் கென்ட் அணிக்காக விளையாடியவர். சர்ரே அணிக்கு எதிரான மேட்ச் ஒன்றில், இவர் 9 ஆட்டக்காரர்களை ஸ்டம்பிங் செய்து அவுட் செய்து ரிக்கார்ட் ஏற்படுத்தியுள்ளார்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

டான் ப்ராடமன் ஒரு முதல் தர மேட்சில் 0 ரன்னுக்கு அவுட் ஆக்கிய எட்டி கில்பர்ட் என்ற வேக பந்து பவுலர் தான், மிக வேகமாக பந்து வீசியவர் என்று ப்ராட்மனால், வர்ணிக்கப் பட்டவர்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

1896 ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக
ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக விளையாடியவர் ஹார்ரி ட்ரோட், லார்ட்ஸ் டெஸ்டில்.

முதல் இனிங்க்சில் ரன் எடுக்கவில்லை. ( 0 ) ஆனால் இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்தார். 143 ரன்கள்.இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில்.வென்றது.
24 டெஸ்டுகளில் இவர் எடுத்த ரன்கள் 921. வீழ்த்திய விக்கெட்டுக்கள் 29.
அடித்தது இந்த ஒரே ஒரு சதம் மட்டும் தான்.


வாசுதேவன்,பெங்களூரு

Story first published: Monday, March 18, 2024, 21:26 [IST]
Other articles published on Mar 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+