For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே போட்டியில் அதிக கேட்ச்களை பிடித்த கிரிக்கெட் வீரர்கள்.. ஒரு ரன்னில் உலக சாதனையை தவறவிட்டவர்

பெங்களூரு :பிப்ரவரி மாதம் 1977 ஆம் வருடம். பெங்களூர் டெஸ்ட் மேட்ச் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையே.யஜுர்விந்தீர சிங் ( Yajurvindra Singh ) என்பவர், அவரது துவக்க டெஸ்ட்டிலேயே ( test debut ) உலக ரிகார்டடு ஏற்படுத்தினார் , அந்த மேட்சில் 7 கேட்சுகள் பிடித்து. முதல் இன்னிங்சில் 5 கேட்சுகள் பிடித்த பொழுது ஆஸ்திரிலிய வீரர் விக் ரிச்சர்ட்ஸனின் ( Vic Richardson) சாதனையை சமன் செய்தார்.

இரண்டாவது இன்னிங்சில் இரண்டு கேட்சுகள் பிடித்து மொத்தம் அந்த மேட்சில் பிடித்த 7 கேட்சுகள் மூலம் இந்த உலக சாதனை புரிந்தார். இவர் விளையாடிய 4 டெஸ்டுகளில் 11 கேட்சுகள் பிடித்துள்ளார். 1979 ல் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக இவர்
சப்ஸ்டிடுயுட் ( substitute player )வீரராக மூன்று கேட்சுகள் பிடித்தார்.

cricket titbits - Cricketers Who got most catches in a single match

இரண்டு அணிகளுக்கு ரஞ்சி கோப்பைக்காக விளையாடி உள்ளார்.
சவுராஷ்டிரா ( Saurashtra ) மற்றும் மகாராஷ்டிரா
(Maharashtra) யஜுர்விந்தீர சிங் விஸ்டேன்னில் ( Wisden ) மேனேஜிங் டைரக்டர் ஆக இருந்தவர். கிரேக் சாப்பெல் ( Greg Chappell ) அழைப்பை ஏற்று 2006 ஆம் வருடம் இங்கிலாந்து அணி தொடரில் நமது பீல்டர்களுக்கு , மிக அருகில் நின்று கேட்சுகள் பிடிப்பது குறித்து ( close-in catching ) ஆலோசனைகள் கூறினார்.

விக் ரிச்சர்ட்சன் 19 டெஸ்டுகளில் 24 கேட்சுகள் பிடித்தவர்.
இவர் புகழ் பெற்ற 1932-33 பாடிலையன் ( Body Line ) தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு துணை கேப்டன் ஆக இருந்தவர். இவர் டெஸ்ட் கேப்டனாக திகழ்ந்தவர், தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணத்தின் பொழுது 1935 ஆம் வருடம். இவர் தனது 41 வது வயதில் கேப்டனாக தேர்ந்து எடுக்கப் பட்டார்.

இவர் பல விளையாட்டு துறைகளில் சிறந்தவராக இருந்தவர்.
சேப்பல் ( Chappell brothers ) சகோதரர்களுக்கு தாத்தா ஆவார். ( இயன் ( Ian )( கிரெக் ( Greg) மற்றும் ட்ரெவர் ( Trevor Chappell)விக் ரிசர்ட்சனின் பேரனான ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் சேப்பலும் ஒரே மேட்சில் 7 கேட்சுகள் பிடித்து சாதனை செய்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக 1974-75 தொடரில்.
பெர்த் டெஸ்டில் ( Perth Test ) முதல் இன்னிங்சில் மூன்றும் , இரண்டாவது இன்னிங்சில் 4 கேட்சுகளும் பிடித்தார் சேப்பல்.இவர்கள் இருவரை தவிர ஒரே டெஸ்டில் 7 கேட்சுகள் பிடித்த வீரர்கள் ஹெஸ் பி தில்லகராத்னே (HP Tilakaratne) ( ஸ்ரீ லங்கா) நியூஸிலாந்து அணிக்கு எதிராக

எஸ் பி பிளெமிங் ( SP Fleming ) ( நியூஸிலாந்து ) ஜிம்பாப்வே அணிக்கு எதிராக
எம் எல் ஹேடன் ( ML Hayden )( ஆஸ்திரேலியா )
ஸ்ரீ லங்கா டீமிற்கு எதிராக

கே எல் ராகுல் ( KL Rahul ) ( இந்தியா ) இங்கிலாந்து டீமிற்கு எதிராக
ஒரே மேட்சில் அதிக கேட்சுகள் பிடித்துள்ள சாதனை தற்சமயம் இந்திய வீரர் ஏ எம் ரஹானேவை ( AM Rahane )சாரும். ஆகஸ்ட் 2015 ல் காலே ( Galle ) டெஸ்டில் ஸ்ரீ லங்கா டீமிற்கு எதிராக 8 கேட்சுகள் பிடித்து அசத்தினார்முதல் இன்னிங்சில் 3 கேட்சுகளும், இரண்டாவது இன்னிங்சில் 5 கேட்சுகளும் இவரால் பிடிக்க பட்டன.

----------------------------------------------

இங்கிலாந்து அணிக்காக டெஸ்டுகள் விளையாடியவர் பில் ஷார்ப் ( Phil Sharpe).இவர் சிறந்த ஸ்லிப் பீல்டர் ஆக திகழ்ந்தவர்.சராசரி 46.23 ரன்கள். ஒரு சதம்.
விளையாடிய டெஸ்டுகள் 12. பிடித்த கேட்சுகள் 17.முதல் தர கிரிக்கெட்டில் விளையாடிய 228 மேட்சுகளில் பிடித்த கேட்சுகள் 618.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இந்த இங்கிலாந்து பவுலரின் சராசரி பவுலிங் 19.75. விளையாடியது 18 டெஸ்டுகள்.
வீழ்த்தியது 112 விக்கெட்டுகள். ஜி ஆ லொஹ்மன். ( George Alfred Lohmann ) இவர் சிறந்த வேக பந்து பவுலராக இருந்தவர். 36 வது வயதில் மறைந்தார்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

அந்த ஒரு ரன் எடுத்து இருந்தால் சரித்திரம் படைத்தது இருப்பார், அத்தகைய சாதனை புரிந்த பேட்ஸ்மேன் என்று. ஒரு ரன் எடுக்க ஓடும் பொழுது ரன் அவுட் ஆகிவிட்டார்.
இருந்தும் உலக ரெக்கார்டு ஏற்படுத்தினார்.இந்த நிகழ்வு ஜனவரி 1959 ல் நிகழ்ந்தது.
அந்த ஒரு ரன்எடுத்து இருந்தால், பாகிஸ்தானின் ஓப்பனிங் பேட்ஸ்மன் ஹனிஃ முஹம்மத் ( Hanif Mohammad ) 500 ரன்கள் எடுத்த முதல் வீரர் முதல் தர கிரிக்கெட் மேட்சில் என்ற சாதனை படைத்து இருப்பார்.

பகவல்பூர் ( Bahawalpur ) டீமிற்கு எதிராக ஹனிஃ விளையாடிய கராச்சி டீம் (Karachi ) அந்த மேட்ச்சில் வென்றது. இவரது ஸ்கோர் 499. இதில் 64 பவுண்டரிகள் அடங்கும்.
இந்த ஸ்கோர் 499 , 35 வருடங்களுக்கு பிறகு மேற்கு இந்திய வீரர் பிரைன் லாரா ( Brain Lara ) 501* ரன்கள் எடுத்து, கடந்து சென்று சாதனை புரிந்தார். ஒரு இன்னிங்சில் முதல் தர கிரிக்கெட் மேட்சின் அதிக பட்ச ரன்கள் குவித்த தனி நபர் என்ற சாதனையை ஏற்படுத்தி.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Monday, January 15, 2024, 20:01 [IST]
Other articles published on Jan 15, 2024
English summary
cricket titbits - Cricketers Who got most catches in a single match ஒரே போட்டியில் அதிக கேட்ச்களை பிடித்த கிரிக்கெட் வீரர்கள்.. ஒரு ரன்னில் உலக சாதனையை தவறவிட்டவர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+