For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

திருப்பி அனுப்பிடுங்க.. வெஸ்ட் இண்டீஸ் வீரரை குறைத்து மதிப்பிட்ட டான் பிராட்மேன்! என்ன நடந்தது?

மும்பை : 1960 ஆம் ஆண்டு மேற்கு இந்திய தீவுக்கள் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற் கொண்டது. அந்த அணியை கேப்டனாக தலைமை ஏற்று வழி நடத்தியவர் பிரேங்க் ஒர்ரெல் (Frank Worrell).

ஒரு இளம் ஸ்பின் பவுலரை குறித்து. அவரிடம் டான் ப்ராட்மன் கூறினார். இந்த ஆஸ்திரேலிய பிட்சுக்களுக்கு அவரது ஸ்பின் சரி பட்டு வராது, நீங்கள் அவரை திருப்பி அனுப்பி விடலாம் என்று. பிரேங்க் ஒர்ரெல் புன்னகையுடன் கேட்டுக் கொண்டார்.

india national cricket team cricket cricket history sports news interseting facts

முதல் டெஸ்டில் அந்த இளம் ஸ்பின் பவுலருக்கு இடம் அளிக்கப் படவில்லை.இரண்டாவது டெஸ்டிலும்
விளையாடவில்லை, அவர்.அந்த முதல் டெஸ்டு தான் சரித்திரம் படைத்தது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில்.
ஆம். அந்த பிரிஸ்பேன் டெஸ்டில் தான் டெஸ்ட் சரித்திரத்தின் முதல் டை டெஸ்ட் நடைப் பெற்றது.

அந்த குறிப்பிட்ட ஸ்பின் பவுலருக்கு 3 வது டெஸ்டில் விளையாட சந்தர்ப்பம் கிடைத்தது. வாய்ப்பை நழுவ விடவில்லை. அந்த டெஸ்டிலும் , அடுத்த 4 வது டெஸ்டிலும் அசத்தலாக பந்துக்கள் வீசி அவர் பவுலிங்கை பேச வைத்தார்.அவர் பெயர் லான்ஸ் கிப்ஸ்.

3 வது டெஸ்ட். ஜனவரி 1961. சிட்னி. கிப்ஸ் இந்த டெஸ்டில் எடுத்த மொத்த விக்கெட்டுக்கள் 8. நான்கு பந்துக்களில் எடுத்தது விக்கெடுக்கள் 3.
இவரது பவுலிங்கும் மேற்கு இந்திய தீவுக்கள் அணி 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற பெரிதும் உதவியது.

4 வது டெஸ்ட். ஜனவரி, 1961. அடிலெய்ட். இங்கு ஒரு இன்னிங்சில் லான்ஸ் கிப்ஸ் வீழ்த்தியது விக்கெடுக்கள் 5.இங்கு தான் டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் முதல் மேற்கு இந்திய ஸ்பின் பவுலர் ஹாட் ட்ரிக் சாதனை புரிந்தவர் ஆனார்.

5 வது டெஸ்ட் மெல்போர்னில் கிப்ஸ் எடுத்தது விக்கெட்டுக்கள் 6.
டெஸ்டுகளில் ஹாட் ட்ரிக் எடுத்த முதல் ஸ்பின் பவுலர் என்ற பெருமை லான்ஸ். கிப்சை சாரும். லான்ஸ் கிப்ஸ் மேற்கு
இந்திய தீவுக்கள் அணிக்காக விளையாடிய டெஸ்டுக்கள் 79. ரன்கள் 488. கேட்சுக்கள் 52.

கைப் பற்றிய விக்கெடுக்கள் 309.
ஒரு இன்னிங்சில் 8 / 38
ஒரு டெஸ்டில் 11 / 157

இவர் தான் முதல் ஸ்பின் பவுலர் 300 விக்கெடுக்களுக்கு மேலாக
விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்.லான்ஸ் கிப்ஸ் 1958 ல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அறிமுக டெஸ்ட் ஆடினார். போர்ட் ஆப் ஸ்பெயின் டெஸ்டில். மொத்தம் எடுத்தது விக்கெடுக்கள் 4.

1976 ல் மெல்போர்ன் மைதானத்தில் இவர் கடைசி டெஸ்ட் ஆடினார்.
இந்திய அணிக்கு எதிராக 53 ஓவர்கள் வீசி 38 ரன்கள் விட்டு கொடுத்து விக்கெடுக்கள் 8 கைப் பற்றினார். இந்த 8 விக்கெடுக்களை இவர் 15 ஓவர்கள் வீசி சாதித்தார்.இவர் முதல் தர கிரிக்கெட் பிரிட்டிஷ் கியானா, தெற்கு ஆஸ்திரேலியா, வார்விக்ஷய்யர் அணிகளுக்காக விளையாடியவர்.

1991 ஆம் வருடம் இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்ட மேற்கு இந்திய தீவுக்கள் அணியின் மேனேஜராக இருந்தார்.
தற்பொழுது அமெரிக்காவில் குடியேறியுள்ளார்.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Sunday, July 28, 2024, 22:35 [IST]
Other articles published on Jul 28, 2024
English summary
cricket titbits - Don bradman Prediction goes wrong about West indies spinner திருப்பி அனுப்பிடுங்க.. வெஸ்ட் இண்டீஸ் வீரரை குறைத்து மதிப்பிட்ட டான் பிராட்மேன்! என்ன நடந்தது?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+