Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வேகப்பந்துவீச்சாளர் முதல் தலைமை ஆசிரியர் வரை.. காயத்தால் மாறிய கிரிக்கெட் வாழ்க்கை! யார் இந்த டைசன்

லண்டன் : இந்த இங்கிலாந்து வேக பந்து பவுலரின் 9 வது டெஸ்ட். இதில் இவர் தனது 50 வது டெஸ்ட் விக்கெட்டை கைப் பற்றினார். 1955 ல் நாட்டிங்கம் டெஸ்டில் இந்த நிகழ்வு ஏற்பட்டது. தென் ஆப்பிரிக்க வீரர்கள், குறிப்பாக இரண்டாவது இன்னிங்சில் இவரது பந்து வீச்சை எதிர் கொண்டு தாக்குப் பிடிக்க திணறினார்கள். இந்த வீரர் பெயர் பிரேங்க் டைசன். மொத்தம் 8 விக்கெடுக்கள் வீழ்த்தி அசத்தினார்.
2 / 52 & 6 / 28

இவரது அபார பவுலிங் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல பெரிதும் உதவியது. இந்த டெஸ்டில் தென் ஆப்பிரிக்க வீரர் ட்ரெவோர் கோடார்ட் மற்றும் இங்கிலா ந்து வீரர் கென் பாரிங்டன் இருவரும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட அடி எடுத்து வைத்தனர். இருவரின் அறிமுக டெஸ்ட் இது.

india national cricket team ind vs eng 1981 bangalore test cricket cricket history sports news interseting facts

டைசன் விளையாடியது 17 டெஸ் டுக்கள் மட்டுமே. காயங்கள் காரணமாக அவரால் அதிகமான டெஸ்டுக்களில் விளையாட. முடியவில்லை. அந்த 17 டெஸ்டுக்களில் இவர் எடுத்த விக்கெடுக்கள் 76. ஒரு இன்னிங்சில்
7 / 27 எடுத்தார்.

1954 ல் ஓவல் டெஸ்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இவரது அறிமுக டெஸ்ட். 5 விக்கெட்டுக்கள்.
4 / 35 & 1 / 22

இந்த டெஸ்டில் பாகிஸ்தான் வேக பந்து பவுலர் பாசல் மஹ்மூட் விக்கெட்டுக்கள் 12
6/53 & 6/46

இங்கிலாந்து வீரர் ஜான்னி வார்ட்லே இரண்டாவது இன்னிங்சில் மட்டும் பந்துக்கள் வீசி விக்கெடுக்கள் 7.
7 / 56
இந்த டெஸ்டில் பாகிஸ்தான் அணி வென்றது 24 ரன்கள் வித்தியாசத்தில்.

1959 ல் ஆக்லாந்தில் இவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவு பெற்றது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் டிராவில் முடிவு பெற்றது.
1954 - 55 ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய மண்ணில் டைசன் 9 இன்னிங்ஸ்களில் 28 விக்கெடுக்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி அந்த தொடரை வென்றது.

8 டெஸ்டுக்கள் லென் ஹட்டன் , 9 டெஸ்டுக்கள் பி பி எச் மே தலைமையிலும் டைசன் விளையாடினார்.ஆஸ்திரேலியாவில் குடியேறினார். தலைமை ஆசிரியராக பணி புரிந்தார். விக்டோரியா அணிக்கு கோச்சாகவும் இருந்துள்ளார்.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Wednesday, June 19, 2024, 0:00 [IST]
Other articles published on Jun 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+