For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

cricket Titbits - ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் விளையாடிய பவுலர்.. இன்னும் பல அரிய தகவல்

பெங்களூரு : இந்த இங்கிலாந்து வேக பந்து வீரர் பிராங்க் டைசன் ( Frank Tyson) மற்றும் பிரெட் ட்ருமென் ( Fred Truman) இருவருடன் ஜோடியாகப் பந்து வீசியவர். வலது கையினால் பந்து வீசிய இவர், இடது கையினால் பேட்டிங் விளையாடியவர்.
இவரது ஆரம்ப டெஸ்ட் மேட்ச் நியூஸிலாந்து மண்ணில் துவங்கியது. அது ஒரு நான்கு நாட்கள் டெஸ்ட் மேட்ச்.

இவர் அந்த கால கட்டத்திலேயே ஆஸ்தி ரேலியா , நியூஸிலாந்து , தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள் , இந்தியா, பாகிஸ்தான் , சிலோன் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ளார்.

cricket Titbits- Fast bowling Legend Played with oxygen cylinder- interesting facts

தென் ஆப்பிரிக்கா சுற்றுப் பயணத்தில் வாண்டாரர்ஸ் மைதானத்தில் விளையாடும் பொழுது அங்கு இருந்த காற்று ஒத்துக் கொள்ளாமல் போக ஆஸ்துமாவினால் அவதி பட்டார். ஒவ்வொரு இடை வேளையின் பொழுதும் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியினால் காற்று இழுத்து ஆசுவாசப் படுத்திக் கொண்டு பந்து வீசிய அனுபவம் இவருக்கு உண்டு.

இவரது பந்து வீசும் திறமையை ஸர் காரி சோபர்ஸ் வெகுவாக பாராட்டி உள்ளார். மிகவும் துல்லியமாகவும், நேர்த்தியாகவும் பந்து வீசுவதில் வல்லவர்.
இவர் 70 டெஸ்டுகள் விளையாடி 252 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
முதல் தர கிரிக்கெட்டில் 2260 விக்கெட்டுகளை கைப்பற்றிய இவர் லங்காஷையர் ( Lancashire) அணிக்கு விளையாடியவர்.

இவர் கிரிக்கெட் விளையாடியதில் இருந்து ஒய்வு பெற்றதும் சில காலம் கின்னஸுக்காக ( Guinness) வேலை பார்த்தார். 17/06/1930 ல் பிறந்த இவர் தனது 70 வது வயதை நெருங்கும் போது 10/06/2000 அன்று மறைந்தார்.
வேக பந்து பவுலராக திகழ்ந்த பொழுதும் அனாவசியமாக பவுன்சர் போன்ற பந்துகளை வீச மாட்டார். இவர் ஒரு ஜென்டில்மென் கிரிக்கெட் வீரராக திகழ்ந்தார். இவர் பெயர் ஜான் பிரைன் ஸ்டேதம்.
( John Brain Statham )இவருடைய நினைவாக ஓல்ட் டிராஃபோர்டின் தெற்கு முனை , ( Old Trafford Soth End ) பிரைன் ஸ்டேதம் எண்டு என்று அழைக்கப் படுகின்றது.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கிரிக்கெட் டெஸ்ட் சரித்திரத்தில் மிகவும் கடினமான பேட்டிங் சராசரியான 99.94 ரன்களை எடுத்து அசத்திய ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸர் டான் பிராட்மன், தனது துவக்க டெஸ்டில் எடுத்த மொத்த ரன்கள் 19. முதல் இன்னிங்சில் 18 இரண்டாவது இன்னிங்சில் 1 ரன். அப்பொழுது அவருக்கு வயது 20.

இவருடன் தன்னுடைய முதல் டெஸ்ட் விளையாடிய வீரர் பெர்ட் ஐரான் மோங்கெர் ( Bert Ironmongar) வயது 46.இந்த டெஸ்ட் 1928 ஆம் ஆண்டு பிரிஸ்பேன் மைதானத்தில், இங்கிலாந்திற்கு எதிராக விளையாடப் பட்டது. இங்கிலாந்து அணி 675 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 122 மற்றும் இரண்டாவதில் 66 ரன்கள் குவித்தன. 1948 ஆம் ஆண்டு அவர் தனது கடைசி டெஸ்ட் மேட்ச் 40 வயதில் விளையாடினார்.முக்கியமாக இடைப் பட்ட கால கட்டத்தில் அவர் டெஸ்ட் மேட்சுகள் இரண்டாம உலக யுத்தத்தினால் விளையாடவில்லை.

இவர் இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் 334, 304, 103, 173 * ரன்கள் எடுத்துள்ளார்.
இவர் எடுத்த இரண்டு 300 க்கும் மேலான ரன் களும் லீட்ஸ் மைதானத்தில் தான்.
இவற்றைத் தவிர 10 இரட்டை சதங்கள் எடுத்துள்ளார். அவற்றில் ஒன்று 299* தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக. இவர் எடுத்த மொத்த 29 சதங்களில், ஆஸ்திரேலிய அணி 23 டெஸ்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. 2 டெஸ்டிகளில் தோல்வி அடைந்தன. 4 டெஸ்ட்டுகள் ட்ராவில் முடிவடைந்தன.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெற்றதும் கால்நடை மருத்துவராக பணி புரிந்து ( Veterinary surgeon ) தலைமை வெட்டரினரி ஆபிஸராக திகழ்ந்தார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கிரிக்கெட் டீமில் விளையாடியவர்.
ஜமைக்காவில் வசித்த இவர், மேற்கு இந்திய டீமிற்காக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மானாக டெஸ்ட்டுகளில் பங்கு பெற்றவர்.

கேப்டனாகவும் திகழ்ந்த இவர் தான் மேற்கு இந்திய அணிக்கான கடைசி வெள்ளைக்கார கேப்டன் ஆவார். கால் பந்து விளையாடுவதிலும் சிறந்து விளங்கினார். இவர் ஒரு ஸ்ட்ரிக்ட் ஆன கேப்டன் ஆக திகழ்ந்தவர். ஒழுக்கத்திற்கு மிக்க முக்கியத்துவம் அளித்தவர்.

cricket Titbits- Fast bowling Legend Played with oxygen cylinder- interesting facts

இவர் தலைமையில் இந்திய சுற்றுப் பயணத்தின் பொழுது வேகப்பந்து வீரர் ராய் கில்கிறிஸ்ட் தாறுமாறாக கடைசி நிலை ஆட்டக்காரர்களுக்கு எதிராக பந்து வீசினார். இவர் கேப்டனாக அவரிடம் அவ்வாறு வீச வேண்டாம் என்று அறிவுறுத்தி எச்சரித்தார். இருந்தும் அந்த பவுலர் கேட்காமல் அவர் முறையில் வேக பந்துகளை வீச அந்த ஆட்டக்காரரை திருப்பி அனுப்பி விட்டார்.
அந்த வீரரால் பாகிஸ்தானுக்கு செல்ல முடியவில்லை. மேற் கொண்டு டெஸ்ட் பந்தயங்களிலும் பங்கு பெறவில்லை.

இந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கேப்டனாக திகழ்ந்தவர் பெயர் கேரி அலெக்சாண்டர். ( Gerry Alexander)இவர் மேற்கு இந்திய தீவுகள் அணிக்காக 25 டெஸ்டுகளில் 961 ரன்கள் எடுத்தார். சராசரி 30.03. ஒரு சதம் ( 108 ரன்கள் ) ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக. 85 கேட்சுகள் பிடித்த இவர் 5 ஸ்டம்ப்பிங்கள் செய்துள்ளார்.

இவரின் கேப்டன் பதவி பிராங்க் ஒர்ரேலிடம் ( Frank Worrell) ஒப்படைக்கப் பட்டது. அதை இவர் வரவேற்றார். இருவரும் நண்பர்களாக திகழ்ந்தனர். அவரது தலைமையில் இவர் விக்கெட் கீப்பராக விளையாடினார் முதல் டை டெஸ்ட் உட்பட. இவர் தனது 82 வது வயதில் மறைந்தார்.

Story first published: Friday, January 5, 2024, 0:00 [IST]
Other articles published on Jan 5, 2024
English summary
cricket Titbits- Fast bowling Legend Played with oxygen cylinder- interesting facts cricket Titbits - ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் விளையாடிய பவுலர்.. இன்னும் பல அரிய தகவல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+