For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Cricket Titbits - முதல் பந்தில் இருந்து கடைசி வரை அவுட் ஆகாத முதல் பேட்ஸ்மேன் இவர்தான்

பெங்களூரு : பாபி ஆபேல் என்ற ஒபனிங் வீரர் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டும், சர்ரே அணிக்காக முதல் தர கிரிக்கெட்டும் விளையாடியவர். டெஸ்டு போட்டிகள் விளையாடிய இவர் அடித்தது 2 சதங்கள். 744 ரன்கள். சராசரி 37.20.

627 முதல் தர ஆட்டங்களில், 74 சதங்கள், சராசரி 35.46 ரன்கள், 587 கேட்சுக்கள். 33128 ரன்கள்.

Cricket Titbits - First ever batsman to carry the bat in test innings


அதிகபட்ச ரன்கள் -

டெஸ்ட் மேட்ச் - 132*
முதல் தர ஆட்டம் - 357*

அறிமுக டெஸ்ட் - 1888 ஜூலை, லார்ட்ஸ் மைதானம். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் துவக்க வீரராக களம் கண்டார். டபிள்யூ ஜி கிரேஸ் உடன் ஜோடி சேர்ந்து துவக்கினார். இவரது ஸ்கோர் 3 & 8.

இந்த டெஸ்டின் ஸ்கோர் -

ஆஸ்திரேலியா - 116 & 60

இங்கிலாந்து - 53 & 62

ஆஸ்திரேலிய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டு தினங்களுக்குள் இந்த டெஸ்ட் முடிந்து விட்டது. 1902 ல் மன்செஸ்டரில் தனது இறுதி டெஸ்ட் போட்டியில் ஆடினார்.

அந்தப் போட்டியில் இவரது ஸ்கோர் - 6 & 21. அந்தப் போட்டியில் சதம் எடுத்தவர்கள் ஸ்டான்லி ஜாக்சன், இங்கிலாந்து - 128
விக்டர் டிரம்பர், ஆஸ்திரேலியா - 104.

ஆஸ்திரேலிய அணி பவுலர் டிரம்பிள் 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். (4 - 75 6 - 53). இங்கிலாந்து வீரர் பில் லாக்வுட் 11 விக்கெடுக்கள் எடுத்தார். (6 - 48 & 5 - 28). ஆஸ்திரேலிய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பாபி ஆபேல் ஒரு டெஸ்டில் ஓபன் செய்து இன்னிங்ஸ் முடியும் வரையில் அவுட் ஆகாமல் விளையாடினார். 1892. சிட்னி டெஸ்டில். இங்கிலாந்து முதல் இன்னிங்சில் ஆல் அவுட் 307 ரன்கள். ஒப்பனர் பாபி ஆபேல் நாட் அவுட் 132*
"காரிட் தி பேட்" சாதனை புரிந்தார். இந்த மாதிரி சாதனை புரிந்த முதல் இங்கிலாந்து வீரர் பாபி ஆபேல் ஆவார். இவருடைய முக்கிய சாதனையாக கருத்தப் படுவது, 1899 ஆம் ஆண்டு சொமேர்ஸ்ட் அணிக்கு எதிரான மேட்ச்சில் சர்ரே அணி எடுத்த ரன்கள் 811.

இந்த மேட்ச்சில் ஒப்பனிங் வீரராக களம் இறங்கிய, பாபி ஆபேல் இன்னிங்ஸ் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இவர் எடுத்த ரன்கள் 357*. இது ஒரு ரிக்கார்ட், குறிப்பாக காரிட் தி பேட் சாதனைக்கு. (Carried the bat)

பாபி ஆபேல்
டெஸ்டுக்கள் - 13
கேட்சுக்கள் - 13

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஜாக் ருசெல் என்ற இங்கிலாந்து வீரர் தான் விளையாடிய கடைசி டெஸ்டில் சாதனை படைத்தார்.

தென் ஆப்பிரிக்காாவின் டர்பனில் நடைப் பெற்ற டெஸ்ட்.
பிப்ரவரி, 1923.

முதல் இன்னிங்ஸ் ரன்கள் - 140

இரண்டாவது இன்னிங்ஸ் ரன்கள் - 111

இந்த வீரர் தான், இங்கிலா ந்து அணிக்காக, முதல் முதலில் இரண்டு இன்னிங்சிலும் சதங்கள் எடுத்தவர் ஆவார். இவரது அறிமுக டெஸ்டில் அறிமுக இன்னிங்சில் இவர் ரன் எதுவும் எடுக்க வில்லை.

சிட்னி டெஸ்ட். 1920 டிசம்பர்.

மூன்று வருடங்களில் 10 டெஸ்டுகளில் இவர் எடுத்த சதங்கள் 5

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ராபின் ஹோப்ஸ் என்ற இங்கிலா ந்து ஸ்பின் பவுலர் இந்திய அணிக்கு எதிராக 1967 ல் லீட்ஸ் மேட்சில் தனது அறிமுக டெஸ்டை விளையாடினார். இந்த டெஸ்டில் இவர் வீழ்த்திய விக்கெட்டுக்கள் 4 (3 - 45 & 1 - 100).

இங்கிலாந்து அணி இந்த டெஸ்டில் வென்றது 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில்.

இங்கிலாந்து - 550 / 4 டிக்ளர் 126 / 4

இந்தியா - 164 510.

இந்திய அணி ஃபாலோ ஆன் பெற்றது.

இந்த டெஸ்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள்

பாய்காட் 246*
பேசில் டி ' ஒலிவீரியா 109
மன்சூர் அலி கான் பட்டோடி 64 & 148


7 டெஸ்டுக்கள் விளையாடிய ராபின் ஹோப்ஸ் எடுத்த விக்கெட்டுக்கள் 12.

1975 ஆம் ஆண்டு சுற்றுப் பயணம்.மேற் கொண்ட ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, எஸ்ஸக்ஸ் அணிக்கு விளையாடிய இவர் சதம் அடித்தார். அதை அடிக்க இவர் எடுத்துக் கொண்ட நேரம் நிமிடங்கள் 44.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

நான்டை ஹாய்வார்ட் என்ற மிக வேக பந்து வீசுபவர், தென் ஆப்பிரிக்கா அணிக்காக 16 டெஸ்டுக்கள் விளையாடி 54 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

1999 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான அறிமுக டெஸ்டில் இவர் எடுத்த விக்கெட்டுக்கள் 5

4 - 75 1 - 55

21 ஒரு நாள் ஆட்டங்களில் இவர் எடுத்த விக்கெட்டுக்கள் 21

இவரது கடைசி டெஸ்ட் இலங்கை அணிக்கு எதிராக 2004 ஆம் ஆண்டு கொழும்புவில்.

இரண்டு விக்கெட்டுக்கள் மட்டும் எடுத்தார்.

இந்த டெஸ்டை இலங்கை அணி வென்றது.
குமார் சங்கக்காரா எடுத்த ரன்கள் 222.

நான்டை ஹாய்வார்ட் அவருடைய திறமைக்கும், வேகமாக வீசும் திறனுக்கும் அதிகமான டெஸ்டுகளில் ஆடி மேலும் அதிகமான விக்கெட்டுக்களை
வீழ்த்தி இருக்க வேண்டியவர். சரி வர வழி நடத்துபவர்கள் இல்லாத காரணத்தினால் அவரால் கட்டுப்
பாடுடன் பந்துக்களை ஒரே சீராக வீசி விக்கெடுக்களை தொடர்ந்தார் போல் எடுக்க முடியவில்லை.
அதனால் அவரால் டெஸ்டுகளில் நன்றாக சோபிக்க முடியாமல் போய் விட்டது.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சில வீரர்கள், டெஸ்டுகளில் இரண்டு இன்னிங்ஸ்களில் சதங்கள் அடித்துள்ளனர். சிலர் ஒரு இன்னிங்சில் ஒரு சதமும் அதே டெஸ்டின் மற்ற இன்னிங்சில் இரட்டை சதமும் அடித்ததுண்டு.
ஆனால் இந்த ஒரே ஒரு வீரர் மட்டும் தான் ஒரு டெஸ்டின் இரண்டு இன்னிங்சில்லும் 150 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார். அவர் தான் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக இருந்த ஆலன் பார்டர்.

1980 ல் நடைப் பெற்ற லாகூர் டெஸ்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்த சாதனை புரிந்தார்,

முதல் இன்னிங்ஸ்

150* நாட் அவுட்

இரண்டாவது இன்னிங்ஸ்

153

டிராவில் முடிந்த இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது இன்னிங்சில், பாகிஸ்தான் அணி சார்பாக 10 வீரர்கள் பவுலிங் செய்தனர், விக்கெட் கீப்பர் தஸ்லிம் ஆரிப் உட்பட. ஆஸ்மத் ரானா மட்டும் பவுலிங் செய்யவில்லை.
கேப்டன் ஜாவேட் மியந்தாது விக்கெட் கீப்பிங் செய்தார். ஆலன் பார்டர் ஆசார் கான் வீசிய பந்தில் ஸ்டம்பிங் செய்யப்பட்டு அவுட் ஆனார். அப்படி ஸ்டம்பிங் செய்தது ஜாவேட் மியந்தாது.

இந்த டெஸ்டில் இரண்டு அணிகளும் 400 ரன்களுக்கு மேல் தங்களது முதல் இன்னிங்ஸ்களை
டிக்ளர் செய்தனர்.

ஆஸ்திரேலியா
407 / 7 டிக்ளர் 381 / 8

பாகிஸ்தான்

420 / 9 டிக்ளர்

ஆலன் பார்டாரை தவிர இந்த டெஸ்டில் சதம் எடுத்தது பாகிஸ்தான் வீரர் மஜித் கான் 110* நாட் அவுட்.

ஆஸ்திரேலிய பவுலர்
ரே பிரைட் எடுத்த விக்கெட்டுக்கள்
5 / 172

பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் தஸ்லிம் ஆரிப் 1 விக்கெட் எடுத்தார்.

ஆலன் பார்டர் 153
டெஸ்டுக்கள் தொடர்ந்தார் போல் விளையாடியவர்.

93 டெஸ்டுக்களில் கேப்டனாக திகழ்ந்தவர்.

மொத்த டெஸ்ட் ரன்கள் 11174. சராசரி 50.56.
27 சதங்கள். 63 அரை சதங்கள்.

156 டெஸ்டுக்கள் விளையாடிய
ஆலன் பார்டர் பிடித்த கேச்சுக்கள்
156


°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Tuesday, March 26, 2024, 17:24 [IST]
Other articles published on Mar 26, 2024
English summary
Cricket Titbits - First ever batsman to carry the bat in test innings
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+