Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Cricket Titbits - சர்வதேச டெஸ்ட் வரலாற்றில் முதல் சதம் அடித்தவர்.. இன்னும் பல அரிய தகவல்கள்

பெங்களூரு : அதிகாரப் பூர்வமான முதல் டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் 1877 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மாதம் 15 ஆம் தேதி துவங்க பட்டது. (1876- 77 தொடர் ). இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பங்கு பெற்றன.சரித்திரம் படைத்த இந்த டெஸ்டின், முதல் பந்தை எதிர் கொண்டு, முதல் ரன் அடித்து, முதல் டெஸ்ட் சதம் எடுத்து, சாதித்தவர்
ஆஸ்திரேலிய வீரர் சார்லஸ் பேனர்மான் ( Charles Bannerman)

இவர் மைதானத்தில் டெஸ்ட் மேட்ச் நடக்கும் சமயத்தில், தான் உண்டாக்கிய பேட்டிங்கில் அதிக ரன்களாகிய 165 ரன்கள் கடந்து செல்வதை மைதானத்தின் நடுவே நின்று கொண்டு பார்த்தார். இந்த முறை ஆட்டக்காரராக அல்லாமல் நடுவராக. ( அம்பயர்) (Umpire)இந்த நிகழ்வு சிட்னி மைதானத்தில் நடந்தது.

Cricket Titbits - First ever centurion in Test cricket history and other interesting facts

இந்த மேட்சில் ஆஸ்திரேலிய வீரர் ஜார்ஜ் கிபன் ( George Giffen ) என்பவர் 160 ரன்கள் எடுத்துவிட்டார். இவர் சார்லஸ் பேனர்மானின் ஸ்கோரை முறி அடிப்பார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் இவர் 161 ரன்களில் அவுட் ஆனார்.

எஸ் கிரெகோரி ( Syd Gregory ) என்பவர் பேனர் மானின் 165 ரன்கள் ஸ்கோரை, அவர் எதிரிலேயே கடந்து சென்று இரட்டை சதம் எடுத்தார். 201 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
இந்த நிகழ்வு சுமார் 18 வருடங்களுக்கு பிறகு சிட்னியில் 1894 ஆம் ஆண்டு நடைப் பெற்றது. கிரிக்கெட் சரித்திரத்தில் முதல் டெஸ்டில் (1877 ) ஓப்பனிங் பேட்ஸ்மேனாக மேட்சை துவக்கி வைத்த பேனர் மான், டெஸ்ட் அம்பயராகவும் திகழ்ந்தார்

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களாக ஒரே குடும்பத்தை சார்ந்த மூவர் ஆடி உள்ளனர்.
லாலா அமர்நாத் ( Lala Amarnath ) மற்றும் அவரது இரண்டு மகன்கள் சுரீந்தர் (Surinder ) மொஹிந்தர் ( Mohinder ) அமர்நாத்.இவர்கள் மூவரும் சேர்ந்து டெஸ்டுகளில் 64 கேட்சுகள் பிடித்துள்ளனர்.

லாலா அமர்நாத் - 13

சுரீந்தர் அமர்நாத் - 4

மொஹிந்தர்
அமர்நாத் - 47

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

1932-33 தொடரில் இங்கிலாந்து வேக பந்து பவுலர் ஹரோல்ட் லார் வுட் ( Harold Larwood) வீசிய பந்து இந்த பேட்ஸ்மனின் தலையை பதம் பார்க்க தரையில் சரிந்து மயக்கமாக விழுந்தார் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மன் ஓல்டு பீல்ட் ( Bert Oldfield ).

பிறகு இருவரும் உற்ற நண்பர்கள் ஆனார்கள் லார்வுட் ஆஸ் திரேலியாவில் நிரந்தரமாக குடி ஏறியதும்.முதல் உலக மகா யுத்தத்திலும் பங்கு பெற்று இல்லல்களை எதிர் கொண்டவர், ஓல்டுபீல்ட்.இந்த சிறந்த விக்கெட் கீப்பர் விளையாடியது 54 டெஸ்டுகள் ( டிசம்பர் 1920 முதல் மார்ச் 1937 வரையில் )

இவர் 52 ஸ்டும்பிங்குகள் செய்து , டெஸ்டுகளில் அதிக ஸ்டம்பிங்குகள் செய்த விக்கெட் கீப்பர் தர வரிசையில் முதலிடத்தில் உள்ளார். இவர் 78 கேட்சுகள் பிடித்துள்ளார். முதல் உலக மகா யுத்தம் மற்றும் இரண்டாவது உலக மகா யுத்தங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் டெஸ்டுகளில் இவர் பங்கு கொண்டவர்.
1427 டெஸ்ட் ரன்கள் குவித்தும் ஒரு சதம் கூட அடித்தது இல்லை.கடைசி டெஸ்ட் ஆடும் பொழுது இவருக்கு 42 வயதிற்கு மேல் ஆகி இருந்தது.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சிட்னி கோர்டன் ஸ்மித் ட்ரினிடாடில் (1881ல் )(Trinidad ) பிறந்தவர்.
மேற்கு இந்திய தீவில் ட்ரினிடாட் ( Trinidad ) அணிக்கும் , இங்கிலாந்தில், நார்த்தம் ப்டன்ஷையர் அணிக்கும் ( Northamptonshire ) நியூஸிலாந்தில் ஆக்லாண்ட் டீமிற்கும் ( Auckland ) விளையாடியவர். 1906 ஆம் வருடம் இங்கிலாந்து சென்ற மேற்கு இந்திய தீவுகள் குழுவில் இடம் பெற்றவர்.

1910 - 11 மற்றும் 1912 - 13 ல் மேற்கு இந்திய தீவுகளுக்கு சென்ற குழுவில் எம் சி சி ( MCC ) சார்பாக சென்றார். இடது கை ஆல் ரவுண்டர்.211 முதல் தர மேட்சுகளில் 10000 க்கும் அதிகமான ரன்கள் எடுத்தவர். 950 க்கும் அதிகமான விக்கெட்டுகள் வீழ்த்தியவர்
19 முறை 10 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்தவர். 1963 ல் 82 வது வயதில்
நியூஸிலாந்தில் மறைந்தார்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் மேட்சில் ஸ்ரீ லங்கா ஆட்டக்காரர் இரண்டு இன்னிங்சிலும் சதம் எடுத்து அசத்தினார். இரண்டு இன்னிங்சிலும் ஒரே மாதிரி ஸ்கோர். தலா 105 ரன்கள். சென்னை சேப்பாக்எம் ஏ சிதம்பரம் மைதானத்தில்
இந்த சாதனையை நிகழ்த்தி அசத்தியவர் துலீப் மெண்டிஸ் ( Duleep Mendis )

வாசுதேவன். பெங்களூரு

Story first published: Tuesday, January 16, 2024, 19:55 [IST]
Other articles published on Jan 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+