கிரிக்கெட் சரித்திரத்திலேயே கடைசி மேட்ச்சில் முதல் சதம் அடித்த வீரர் இவர்தான்.. Cricket TitBits
ஹென்றி வுட் என்ற கிரிக்கெட் வீரர், தனது கடைசி டெஸ்ட் இன்னிங்சில் தனது முதல் டெஸ்ட் சதம் அடித்தார். அப்பொழுது இவரது வயது 38 வருடம் 96 நாட்கள். இவர் இங்கிலாந்து அணிக்காக விளையாடியது 4 டெஸ்டுக்கள். இவர் தான் முதன் முதலில் கடைசி டெஸ்டில் சதம், அதுவும் முதல் டெஸ்ட் சதம் எடுத்த வீரர் ஆவார்.
மேலும் இவர் தான் முதல் விக்கெட் கீப்பர் டெஸ்டுகளில் முதல் சதம் எடுத்தவர். முதல் தர கிரிக்கெட் கெண்ட் மற்றும் சர்ரே டீம்களுக்கு விளையாடியவர். இவரது அறிமுக டெஸ்ட் ஓவல் மைதானத்தில் ஆகஸ்ட் , 1888 ல். இவர் அறிமுகம் ஆன இந்த டெஸ்டை கேப்டனாக வழி நடத்தியவர் புகழ் பெற்ற டபிள்யூ ஜி க்ரேஸ்.

இந்த டெஸ்டில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் 137 ரன்களில் வென்றது.
ஸ்கோர்
ஆஸ்திரேலிய அணி
80 100
இங்கிலாந்து அணி
317
அறிமுக இன்னிங்சில் ஹென்றி வுட் எடுத்த ரன்கள் 8.
இவரது கடைசி டெஸ்ட் - கேப்டவுன், தென் ஆப்பிரிக்காவில், மார்ச், 1892.
இந்த டெஸ்டில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் 189 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
ஸ்கோர்
தென் ஆப்பிரிக்கா
97 83
இங்கிலாந்து
369
ஒரே இன்னிங்சில், ஹென்றி வுட் தனது முதல் / கடைசி டெஸ்ட் சதம் அடித்து அசத்தினார். அவர் எடுத்த ரன்கள் 134*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
1890 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம். ஓவல் டெஸ்ட்.
இந்த டெஸ்டில் அதிக பட்ச தனி வீரர் ஸ்கோர் 39. எடுத்தவர்
ஆஸ்திரேலி ய வீரர் ஹென்றி ட்ரோட். அடுத்த ஸ்கோர் 32 ரன்கள். இங்கிலாந்து வீரர் பில்லி குண்.
ஸ்கோர்
ஆஸ்திரேலியா
92 & 102
இங்கிலாந்து
100 & 95 / 8
இங்கிலாந்து டீம் 2 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த டெஸ்டில் அறிமுகம் ஆன இடது கை வேக பந்து பவுலர், பிரெட் மார்ட்டின், அன்றைய கால கட்டத்தில் சரித்திரம் படைத்தார். இவர் தான் அறிமுக டெஸ்டில் அதிக விக்கெடுக்கள் எடுத்த வீரர் என்ற சாதனை புரிந்தார். இவர் இந்த டெஸ்டில் எடுத்தது விக்கெட்டுக்கள் 12. (6 - 50 6 - 52). இவர் ஆடியது மொத்தம் 2 டெஸ்டுக்கள் மட்டுமே. இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கேப் டவுன், தென் ஆப்பிரிகா. மார்ச், 1892.
இங்கிலாந்து டீம் வெற்றி பெற்ற இந்த டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் மட்டும் பவுலிங் போட வாய்ப்பு கிட்டியது.
2 - 39. அறிமுக வீரராக 1890 ல் இவர் செய்த சாதனை 12 - 102, 82 வருடங்களுக்கு பிறகு 1972 ல் ஆஸ்திரேலிய வேக பந்து பவுலர் பாப் மாஸ்ஸியால் , அவரது அறிமுக டெஸ்டில் அவர் எடுத்த 16 விக்கெடுக்கள் சாதனையால், முறியடிக்கப் பட்டது.
16 - 137
ப்ரெட் மார்ட்டின் முதல் தர கிரிக்கெட் கெண்ட் டீமிற்காக விளையாடினார்.
இவர் அறிமுகம் ஆன சமயத்தில் டெஸ்டுகளில் ஒரு ஓவருக்கு 5 பந்துக்கள் வீசப் பட்டன.
(1890 ஆம் வருடம் )
இரண்டு டெஸ்டுக்கள் மட்டும் விளையாடிய இவர் எடுத்த
டெஸ்ட் ரன்கள் 14
டெஸ்ட்
விக்கெடுக்கள் 14
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வார்விக் ஆர்ம்ஸ்ட்ராங், 50 டெஸ்ட் மேட்ச்சுக்கள் விளையாடிய
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்.
6 சதங்கள் எடுத்தார். இதில் 4 இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக, அனைத்தும் ஆஸ்திரேலிய மண்ணில். இரண்டு சதங்கள் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக.
இவர் ஆஸ்திரேலிய அணி கேப்டனாக அறிமுகம் ஆன பொழுது , இவரது வயது 41 வருடங்கள் 209 நாட்கள். இங்கிலாந்து அணி . சிட்னி டெஸ்ட் ( 17 டிசம்பர், 1920 )
இவர் ஒரு டெஸ்டில் குழப்பத்தின் காரணமாக இரண்டு ஓவர்கள் பவுலிங் செய்தார். மெல்போர்ன் டெஸ்டில் ( பிப்ரவரி, 1921 ) சதம் எடுத்தார், இங்கிலாந்து அணிக்கு எதிராக. 123 * . வயது 41 வருடங்கள் 265 நாட்கள்.
50 டெஸ்டுகளில் 44. கேட்சுக்கள் பிடித்தும், 87 விக்கெடுக்கள் எடுத்தும் உள்ளார்.
1902 ஆம் ஆண்டு
மெல்போர்ன் அறிமுக டெஸ்டில், இவர் முதல் இன்னிங்சில் எடுத்தது 4* நாட் அவுட்.
இரண்டாவது இன்னிங்சில் 11 வது வீரராக விளையாட வந்தார்.
இவருடன் அதே டெஸ்டில் அறிமுகம் ஆன ரெக்கி டுப், 10 வது ஆட்டக்காரருடன் சேர்ந்து கடைசி விக்கெட்டுக்கு 120
ரன்கள் சேர்த்தனர்.
இந்த ரன்கள்
ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற பெரிதும் உதவியது.
இவர்கள் எடுத்த ரன்கள்.
ரெக்கி டுப் 104
ஆர்ம்ஸ்ட்ராங் 45* ( நாட் அவுட் )
இந்த டெஸ்டில்
இங்கிலாந்து வேக பந்து பவுலர் சிட்னி பர்ன்ஸ் எடுத்த
விக்கெட்டுக்கள் 13
6 - 42 7 - 121
ஆஸ்திரேலிய பவுலர் மோன்ட்டி நோபில் எடுத்த
விக்கெட்டுக்கள் 13
7 - 17 6 - 60
டெஸ்டின் ஸ்கோர்
ஆஸ்திரேலியா
112 353
இங்கிலாந்து
61 175
1902 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட் மேட்சில்,
வார்விக் ஆர்ம்ஸ்ட்ராங் இரண்டாவது இன்னிங்சை துவக்கினார் , ஒப்பனிங் பேட்ஸ்மனாக.
அந்த இன்னிங்ஸ் இறுதி வரையில் அவுட் ஆகவில்லை.
காரிட் தி பேட் முறை ( Carried the bat ) சாதனை புரிந்தார்.
இவர் அடித்த சதம்
ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற உதவியது.
இந்த டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்காவை,
ஆஸ்திரேலிய அணி வென்றது. ரன்கள் வித்தியாசம் 159
ஆர்ம்ஸ்ட்ராங்
எடுத்த ரன்கள் 159*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
1885ல் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் இங்கிலாந்து கிரிக்கெட் டீமின் கேப்டனாக இருந்த ஆர்த்தர் ஸ்ரயூஸ்புரி என்பவர் சதம் அடித்தார் (105*). கிரிக்கெட் டெஸ்ட் சரித்திரத்தில், சதம் அடித்த முதல் இங்கிலாந்து கேப்டன் என்ற பெருமை பெற்றார்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வாசுதேவன் பெங்களூரு


Click it and Unblock the Notifications