For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த முதல் வீரர்.. 55 ஆயிரத்து 61 ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரர் - விவரம்

காரி சோபர்ஸ் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து 1968 ல் ஒரு முதல் தர மேட்சில் ஆடி உலக ரிகார்டு ஏற்படுத்தினார். இதற்கு முன்பு 1911 ல் அல்லேட்சன் ( Alletson) என்ற வீரர் , ஒரே ஓவரில் எடுத்த 34 ரன்கள் ரெகார்ட் 57 வருடங்கள் முறியடிக்கப் படாமல் இருந்தது.

அவருடைய அணி 87 ரன்கள் முன்னிலையில் இருந்த பொழுது , 9 விக்கெட்டுக்கள் இழந்த நிலையில் அவரது ஸ்கோர் 47*. அடுத்த 40 நிமிடங்களில் அவரது ஸ்கோரை 189 ரன்களுக்கு கொண்டு சென்று அவுட் ஆனார்.

Cricket titbits - First player to hit six sixers in an over- interesting facts


அப்பொழுது கில்லிக் ( Killck ) என்ற எதிரணி பவுலரின் ஒரு ஓவரில் தான் அந்த 34 ரன்களை அடித்தார், அல்லேட்சன்.இவர் அடித்தது இந்த ஒரே ஒரு முதல் தர கிரிக்கெட்டின் சதம் ஆகும்.இவர் விளையாடியது நோட்டிங்கிஹாம் ஷையர் ( Nottinghamshire) அணிக்கு.
இந்த நிகழ்வு நடைப் பெற்றது சஸ்ஸக்ஸ் ( Sussex) அணிக்கு எதிரான மேட்சில். காரி சோபர்சும் விளையாடி சாதனைப் படைத்தது நோட்டிங்கிஹாம்ஷையர் அணிக்கு விளையாடிய பொழுதுதான்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சார்லஸ் பிலிப் மேட் ( Charles Philip Mead ) இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வீரர் முதல் தர கிரிக்கெட்டிலும் அசத்தியுள்ளார்.814 மேட்ச்சுகளில் எடுத்த ரன்கள் 55061. இவற்றில்
ஹம்ப்ஷயர் அணிக்கு மட்டும் எடுத்தது 48892.இடது கை ஆட்டக்காரர். டெஸ்டுக்களில் எடுத்த ரன்கள் 1185. 4 சதங்கள்.அதிக பட்ச ரன்கள் 182 *

டெஸ்டுகளில் பிடித்த கேட்சுக்கள் 4.ஆனால் முதல் தர ஆட்டங்களில் பிடித்த கேட்சுக்கள் 675.அறிமுக டெஸ்ட் ஆஸ்தி ரேலியாவிற்கு எதிராக, சிட்னி டெஸ்ட் டிசம்பர் 1911.
கடைசி டெஸ்ட் பிரிஸ்பேன். டிசம்பர் 1928.அறிமுக டெஸ்டில் முதல் இன்னிங்சில் இவரது ஸ்கோர் 0. கடைசி டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் இவர் எடுத்த ரன்கள் 73.

இந்த டெஸ்டில் இங்கிலாந்து அணி 675 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இவர் 17 வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடினார். இவர் விளையாடிய டெஸ்டுக்கள் 17.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மார்ச், 1887 சிட்னி டெஸ்ட் சில வினோத நிகழ்வுகளை கண்டது.
இங்கிலாந்து அணிக்காக அழைத்து வரப்பட்டதே 11 வீரர்கள் மட்டுமே.
முதல் டெஸ்டில் நடைப் பெற்ற நிகழ்வால், இந்த இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து அணியில் விளையாட இருந்த வீரர்கள் 10 மட்டுமே.இங்கிலாந்து அணி கேப்டன் அர்தூர் ஸ்ரயூஸ்புரி ( Arthur Shrewsbury ) ஆஸ்திரேலி ய முதல் தர அணி விக்டோரியாவிற்காக விளையாடிக் கொண்டு இருந்த வீரர் ஒருவரை இங்கிலாந்து அணியில் அந்த டெஸ்ட் ஆட சேர்த்துக் கொண்டார்.

அவர் பெயர் ரெஜினல்ட் வுட் ( Regional Wood ).இவர், இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்.
லன்ங்ஷையர் அணிக்காக சில மேட்சுக்கள் விளையாடியவர்.
வுட் ஆடிய இந்த சிட்னி டெஸ்டே , அவருடைய கடைசி டெஸ்டாக அமைந்தது.
இந்த ஒரே டெஸ்டில் இவர் எடுத்த ரன்கள் 6 & 0. இங்கிலாந்து அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த டெஸ்டில் தான் முதன் முதலில் ஒரு வீரர் ஒரே இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கள்
வீழ்த்தி, சரித்திரம் படைத்தார். இந்த டெஸ்டில் அவர் எடுத்தது 10 விக்கெட்டுக்கள்.அவர் தான் இங்கிலாந்து அணி வேக பந்து பவுலர் ஜார்ஜ் லோஹ்மான் ( George Lohmann ).

27.1 / 12 / 35 / 8

40 / 16 / 52 / 2


டர்னர் என்ற ஆஸ்திரே லிய வீரர் இங்கிலாந்து அணிக்காக சப்ஸ்டிட்யூடாக பீல்ட் ( Substitute fielder ) செய்து, ஆஸ்திரேலிய பேட்ஸ்மன் கொடுத்த கேட்சை பிடித்தார். பவுலிங் செய்தது இங்கிலாந்து வீரர் பில்லி பேட்ஸ்.இந்த டெஸ்டில் நின்ற நடுவர்கள் (Umpires )
சார்லஸ் பானர்மன், ஜான் ஸ்விப்ட்.

சார்லஸ் பானர்மன் தான் கிரிக்கெட் டெஸ்ட் சரித்திரத்தில் முதல் டெஸ்டில் முதல் பந்தை எதிர் கொண்டவர். முதல் சதம், அதுவும் அறிமுக டெஸ்டில் எடுத்தவர்.
இந்த சிட்னி டெஸ்டில் ( மார்ச், 1887 ) ஜான் ஸ்விப்ட், விளையாட்டின் நடுவில் அவரது நடுவர் பணி செய்யமுடியாத சூழ்நிலை ஏற்பட்ட பொழுது, நடுவராக பணி ஆற்றியது குண் ( Gunn ) என்ற இந்த டெஸ்டில் விளையாடிக் கொண்டு இருந்த வீரர்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஜார்ஜ் லோஹ்மான் இங்கிலாந்து பவுலர் அட்டகாசமாக பந்து வீசினார், குறிப்பாக இரண்டாவது இன்னிங்சில்பிப்ரவரி, 1896.இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா டெஸ்ட்.
ஜார்ஜ் லோஹ்மான்

15.4 / 6 / 38 / 7
9.4 / 5 / 7 / 8

இங்கிலாந்து ரன்கள்

185 226

தென் ஆப்பிரிக்கா

93 30

இங்கிலா ந்து அணியில்
அறிமுக வீரர்கள் 8

தென் ஆப்பிரிக்கா அணியில் அறிமுக வீரர்கள் 7

இங்கிலாந்து அணி 288 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பிப்ரவரி, 1884. நான்காவது டெஸ்ட் மேட்ச். சிட்னி மைதானம். இங்கிலாந்து, ஆஸ்திரே லிய அணிகள்.இந்த டெஸ்டில் நான்கு இன்னிங்ஸ்களிலும் நான்கு தனி, தனி பிட்சுக்கள் உபயோகிக்க ப்பட்டன. ஆஸ்திரேலிய அணி வென்றது, டெஸ்ட்டை.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Sunday, March 10, 2024, 19:29 [IST]
Other articles published on Mar 10, 2024
English summary
Cricket titbits - First player to hit six sixers in an over- interesting facts ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த முதல் வீரர்.. 55 ஆயிரத்து 61 ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரர் - விவரம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+