Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரன்கள்- 13501 விக்கெட்டுக்கள் - 2063, 125 முறை 5 விக்கெட்டுகள் எடுத்த இங்கிலாந்து வீரர்

லண்டன் : ஜியார்ஜ் கெரி என்ற வீரர் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியவர். சிறந்த ஸ்லிப் பீல்டர். முதல் தர கிரிக்கெட் விளையாடியது லெய்செஸ்டர்ஷய்யர் அணிக்காக. சர்வதேச கிரிக்கெட் விளையாடியது 1924 - 1934 இடைப்பட்ட காலத்தில். டெஸ்ட்டுக்கள் 14. இரண்டு அரை சதங்கள். ரன்கள் 249. பவுலிங்கில் வீழ்த்திய விக்கெட்டுக்கள் 46.

ஒரு டெஸ்டில் 12 விக்கெட்டுக்கள் எடுத்தார்.1929 ல் மெல்போர்ன் டெஸ்டில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இந்த இன்னிங்சில் இவர் வீசிய பந்துக்கள் எண்ணிக்கை 486.
அறிமுக டெஸ்ட் ஜூலை 1924. தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக
மன்செஸ்டர்.

cricket history sports news

இந்த 4 நாட்கள் டெஸ்ட் மேட்சில் முதல் நாள் இங்கிலாந்து பவுலர் களால் 66.5 ஓவர்கள் மட்டுமே பந்துக்கள் வீச முடிந்தது. ஜியார்ஜ் கெரி போட்ட 11 ஓவர்களில் 5 ஓவர்கள் மெய்டன். தென் ஆப்பிரிக்க அணி ஸ்கோர் 116 / 4

இவரது கடைசி டெஸ்ட் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 1934 ல்.இங்கிலாந்து அணி ஸ்கோர் 440.
ஆஸ்திரேலிய அணி 284. பாலோவ் ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்சில் ரன்கள் 118.

இங்கிலாந்து அணி 1 இன்னிங்ச் 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்த டெஸ்டில் 3 சதங்கள்.இங்கிலாந்து வீரர்கள்
மௌரிஸ் லெய்லாந்து 109 .விக்கெட் கீப்பர் லீஸ் ஆம்ஸ் 120.ஆஸ்திரேலிய வீரர் பில் பிரவுன் 105

இங்கிலாந்து பவுலர் ஹெட்லே வெரிட்டி எடுத்த விக்கெட்டுக்கள் 15

7 / 61
8 / 43

இந்த டெஸ்டில் டான் ப்ராட்மனின் ரன்கள்

36 & 13

முதல் தர கிரிக்கெட் விளையாடியது 1912 - 1938 காலகட்டத்தில்.
நடுவில் முதல் உலக போரினால் சில வருடங்கள் கிரிக்கெட் ஆட்டங்கள் நடைப் பெறவில்லை.549 முதல் தர ஆட்டங்களில் ரன்கள் 13501. சதங்கள் 8. அரை சதங்கள் 54. பிடித்த கேட்சுக்கள் 450.

அந்த முதல் தர மேட்ச்சுக்களில் வீசிய பந்துக்கள் எண்ணிக்கை 116292.
எடுத்த விக்கெட்டுக்கள் 2063. விக்கெட்டுக்கள் 5 க்கும் மேல் 125 முறை
10 விக்கெட்டுக்களுக்கு மேல் 30 முறை.ஜியார்ஜ் கெரி 87 வருடங்களுக்கு மேல் உயிர் வாழ்ந்தார்.

oooooooooooooooooooooooooooooooooooooooooo

மேக்ஸ் வாக்கர். ஆஸ்திரேலிய வேக பந்து பவுலர். லில்லீ , தாம்ப்சன் டெஸ்டுகளில் விளையாடும் பொழுது மூன்றாவது பவுலராக திகழ்ந்தவர்.138 டெஸ்ட் விக்கெட்டுக்கள் 34 டெஸ்டுகளில் வீழ்த்தியவர், அவ்வளவாக வாய்ப்புக்கள் கிட்டாத அந்த கால கட்டத்திலும்.

விக்டோரியா அணிக்கு முதல் தர ஆட்டங்கள் ஆடி 135 ஆட்டங்களில் எடுத்த விக்கெட்டுக்கள் 499.ஒரு நாள் ஆட்டங்களில் விக்கெட்டுக்கள் 20.
பிப்ரவரி, 1975 ல் இங்கிலாந்து அணியிடம் மெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவியது.

ஸ்கோர்
ஆஸ்திரேலியா
152 & 373

இங்கிலாந்து
529

இந்த டெஸ்டில் சதங்கள் 3.

இங்கிலாந்து
கேப்டன் மைக் டென்னஸ் 188
கீதப்ளட்சர் 146

ஆஸ்திரேலியா
கிரேக் சப்பெல் 102

இருந்தும் , மேக்ஸ் வாக்கர் பவுலிங்கில் வெளுத்து வாங்கினார்.
லில்லீயுடன் ஓபன் செய்து இங்கிலாந்து அணி பேட்டிங் ஆடிய ஒரு இன்னிங்சில் தனது அருமையான பவுலிங்கை வெளிப் படுத்தினார். இவர் அதிக ஓவர்கள் வீசி எடுத்த விக்கெட்டுக்கள் 8.

1972 - 73 மேற்கு இந்திய தீவுக்கள் சுற்றுப் பயண தொடரில் இவரது சிறந்த பவுலிங், ஆஸ்திரேலிய அணி அத் தொடரை வெல்ல பெரிதும் உதவியது. அதில் வாக்கர் வீழ்த்திய விக்கெட்டுக்கள் 23.

1972 டிசம்பரில் மெல்போர்ன் டெஸ்டில் அறிமுக ஆட்டம் ஆடினார் மேக்ஸ் வாக்கர்.

இவர் எடுத்தது மொத்தம் விக்கெட்டுக்கள் 5. சதங்கள் 6
பாகிஸ்தான் சாதிக் முஹம்மது 137
மஜித் கான் 158

ஆஸ்திரேலியா
இயன் ரெட் பாத் 135
கிரேக் சப்பெல் 116*
பால் ஷீயன் 127
ஜான் பெனோ 142

ஸ்கோர்
ஆஸ்திரேலியா
441/ 5 டிக்ளர் & 425
பாகிஸ்தான் 574 & 200

ஆஸ்திரேலிய அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
கடைசி டெஸ்ட் ஓவல் மைதானத்தில் 1977.
டிராவில் முடிந்தது.மேக்ஸ் வாக்கர் பேட்டிங்கில் 78* ரன்கள் 84 பந்துக்களில் 10 பவுண்டரிகளுடன் அடித்து அசத்தினார்.

காயம் காரணமாக இவரால் அதிக மேட்ச்சுக்கள் ஆட முடியவில்லை.
இவர் கால் பந்து ஆட்டங்களிலும் தேர்ச்சி பெற்றவர்.
இவர் வர்ணனையாளராக பணி புரிந்தவர். 68 வயது முடிந்த சில தினங்களில் மறைந்தார்.இவர் ஒரு சிறந்த எழுத் தாளராகவும் இருந்தார். 14 புத்தகங்கள் எழுதியுள்ளார்.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Thursday, September 12, 2024, 19:05 [IST]
Other articles published on Sep 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+