For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மருமகனுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து சாதனை படைத்த மாமனார்.. குடும்பமே இங்கிலாந்தில் சாதித்த கதை

லண்டன் : கிரிக்கெட் விளையாட்டு பல குடும்ப நபர்கள் விளையாடிய ஆட்டங்களைக் கண்டுள்ளது. அதில் ஒரு குடும்பததைச் சார்ந்த குன் (Gunn brothers ) சகோதரர்கள் பற்றி.ஜான் குன், பில்லி குன், ஜார்ஜ் குன்.

ஜான் குன்: இவர் விளையாடிய 6 டெஸ்ட்டுக்களில் இவரது பேட்டிங் அவ்வளவாக சொல்லிக் கொள்ளும் படி இல்லை. ஆனால் இந்த இடது கை வீரர் அந்த 6 டெஸ்டுக்களில் வீழ்த்தியது 18 விக்கெட்டுக்கள். ஒரு டெஸ்டில் எடுத்த மொத்த விக்கெட்டுகள் 8, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக.

cricket history sports news

நோட்டிங்ஹாம்ஷய்யர் அணிக்காக முதல் தர கிரிக்கெட் விளையாடிய இவர் பல சாதனைகள் புரிந்துள்ளார்.535 முதல் தர ஆட்டங்களில் எடுத்த ரன்கள் 24557. 40 சதங்கள். 294 அதிக பட்ச ரன்கள். 247 கேட்சுக்கள்.

இவரது மருமகன் வில்லியம் குன் உடன் ஜோடி சேர்ந்து ஏற்படுத்திய ரிகார்டு 369 ரன்கள் மூன்றாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில், லெய்ஸ்ஸஸ்டர்ஷய்யர் ஆட்டத்தில்.

எஸ்ஸக்ஸ் அணிக்கு எதிராக நான்காவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் ஏ ஓ ஜோன்ஸ் உடன் ஜோடி சேர்ந்து செய்த ரிகார்டு 361 ரன்கள்.

நான்கு சீசன்களில் தொடர்ச்சியாக பேட்டிங்கில் 1200 ரன்களுக்கு அதிகமாகவும், பவுலிங்கில் 100 விக்கெட்டுக்களுக்கு மேலும் எடுத்து அசத்தியவர் ஜான் குன்.

இவர் முதல் தர ஆட்டங்களில் எடுத்த விக்கெட்டுக்கள் எண்ணிக்கை 1242. ஒரு முறை ஒரே வாரத்தில் இவரது பவுலிங்கில் இரண்டு ஆட்டங்களில் தலா 14 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார், சர்ரே மற்றும் எஸ்ஸக்ஸ் அணிக்களுக்கு எதிரான ஆட்டங்களில்.

சில முதல் தர ஆட்டங்கள் லண்டன் கவுண்ட்டி அணிக்கும் விளையாடியவர்.ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இவரது அறிமுக டெஸ்ட் சிட்னியில் 1901 டிசம்பரில்.
கடைசி டெஸ்ட் நோட்டிங்ஹாம் 1905 மே மாதத்தில்.

பில்லி குன்: இவரும் நோட்டிங்ஹாம்ஷய்யர் அணிக்கு முதல் தர ஆட்டங்கள் ஆடினார். 521 மேட்சுக்கள். ரன்கள் 25691. அதிக பட்சம் 273. சதங்கள் 48. அரை சதங்கள் 117. பிடித்த கேட்சுக்கள் 333.இங்கிலாந்து அணிக்கு டெஸ்டுக்கள் 11. ஒரு சதம். அறிமுக டெஸ்ட் சிட்னி மைதானத்தில் 1887 ஜனவரியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக.

கடைசி டெஸ்ட் 1899 ஜுன். இங்கிலாந்தின் நோட்டிங் ஹாம் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக.ஜார்ஜ் குன்.1907 ம் ஆண்டு சிட்னி மைதானத்தில் அறிமுக டெஸ்ட். 1930 ம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகளின் கிங்ஸ்டன் மைதானத்தில் கடைசி டெஸ்ட் ஆடினார்.

இந்த இடைப்பட்ட காலங்களில் இவர் ஆடியது 15 டெஸ்டுக்கள்.
1120 ரன்கள். 2 சதங்கள்.அதில் அறிமுக டெஸ்டில் ஒரு சதம். (119 & 74)
கிரிக்கெட் டெஸ்ட் சரித்திரத்தின் 100 வது டெஸ்டில் இவர் பங்கு பெற்றார். இந்த டெஸ்ட் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில். 1908 பிப்ரவரியில் சிட்னி மைதானத்தில் நடைப் பெற்றது.

இந்த சரித்திர புகழ் பெற்ற 100 வது டெஸ்டில், ஜார்ஜ் குன் முதல் இன்னிங்சில்122 * மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 0 ரன்கள் எடுத்தார், 643 முதல் தர ஆட்டங்களில் குவித்த ரன்கள் 35208, அதிக பட்சம் 220 ரன்கள், 62 சதங்கள். 194 அரை சதங்கள், கேட்சுக்கள் 477, பவுலிங்கில் எடுத்த விக்கெட்டுக்கள் 66.

இவர் கடைசி டெஸ்ட் விளையாட மிக நீண்ட காலம் இடைவெளி ஏற்பட்டது. 17 வருடங்கள் 316 தினங்கள் ஜார்ஜ் குன் டெஸ்ட் கள் எதுவும் விளையாடவில்ல.இவர் நீண்ட நேரம் நின்று விளையாடக் கூடியவர்.
மூன்று முறை இவர் முதல் தர கிரிக்கெட்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் எடுத்தவர்.

1913ல் 132 & 109* யார்க்க்ஷய்யர் அணிக்கு எதிராக.
1919ல் 169 & 185* சர்ரே அணிக்கு எதிராக.
1927ல் 100 & 110 வார்விக்க்ஷய்யர் அணிக்கு எதிராக.
1927 ல் இந்த ஆட்டம் ஆடும் பொழுது அவரது வயது 48.

50 வது பிறந்த நாளை அட்டகாசமாக கொண்டாடினார் ஒர்சஸ்டர்க்க்ஷய்யர் அணிக்கு எதிராக சதம் அடித்து எடுத்த ரன்கள் 164*.

இவரது முதல் தர ஆட்டங்களுக்கு மகிடம் சூட்டியது போல் அமைந்தது இந்த ஆட்டம். 1931 ல் இவரது மகனுடன் ஒரே
அணியில், வார்விக்க்ஷய்யர் அணிக்கு எதிராக ஆடினார். இந்த ஆட்டத்தில் ஜார்ஜ் குன் ( தந்தை ) ஜி வி குன் ( தனயன்) இருவரும் சதங்கள் எடுத்தனர்.

தந்தை 183 ரன்கள், தனயன் 100 நாட் அவுட்.

இருவரும் இந்த சாதனை புரிந்தது ஒரே இன்னிங்சில்.

oooooooooooooooooooooooooooooooooooooooooo

இந்திய கிரிக்கெட் அணிக்காக பல விக்கெட் கீப்பர்கள் டெஸ்ட் மேட்ச் விளையாடியுள்ளார்கள்.சிலர் குறைந்த பட்ச டெஸ்டுக்களே விளையாடியவர்கள்.அவர்களில் ஒருவர் அன்றைய கால கட்டத்தின் பம்பாய், மகாராஷ்டிரா அணிகளுக்கு முதல் தர கிரிக்கெட் ஆடிய சந்திரகாந்த் பட்டங்கர்.

26 முதல் தர ஆட்டங்களில் 1 சதம் (100 ரன்கள் ) 37 கேட்சுக்கள் 20 ஸ்டம்பிங்குகள்.சந்திரகாந்த் பட்டங்கர் விளையாடியது ஒரே ஒரு டெஸ்ட் மட்டும் தான். 1955 ல் அன்றைய கல்கத்தாவின் ஈடன் மைதானத்தில்
நியூஜிலாந்து அணிக்கு எதிராக.

இந்த டெஸ்டில் பேட்டிங்கில் எடுத்த
ரன்கள் 13 & 1.

3 கேட்சுக்கள் பிடித்து 1 ஸ்டம்பிங் செய்தார்.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Monday, September 9, 2024, 16:21 [IST]
Other articles published on Sep 9, 2024
English summary
Cricket titbits - Gunn Brothers Family record in England county cricket மருமகனுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து சாதனை படைத்த மாமனார்.. குடும்பமே இங்கிலாந்தில் சாதித்த கதை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+