கொல்கத்தா : அன்று கல்கத்தா (இன்றைய கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைப் பெற்ற இரண்டு டெஸ்டுக்கள் பற்றி.1984 ல் டிசம்பர் முடிவில் துவங்கிய இந்த டெஸ்டில், இந்திய அணியின் கேப்டன் சுனில் கவாஸ்கர். மேட்ச் இங்கிலாந்து அணிக்கு எதிராக.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 7
விக்கெட்டுக்கள் இழுப்பிற்கு 437 ரன்கள் குவித்து, முதல் இன்னிங்சை டிக்ளர் செய்தனர்.இங்கிலாந்து அணி எடுத்தது 276 ரன்கள்.

இந்திய அணி இரண்டாவது இனிங்சில்
ஒரு விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்தனர்.மேட்ச் வெற்றி, தோல்வி இன்றி முடிந்தது.இந்திய அணியில் இருவர் சதம் எடுத்தனர்.
மொஹம்மத்
அசாரூதின் (110 ரன்கள்)
ரவி சாஸ்திரி (111 ரன்கள் )
பந்து வீச்சில் இந்திய அணியின் சேத்தன் சர்மாவும், ஷிவ்லால் யாதவும் தலா 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.
1987 ல் பிப்ரவரி மாதத்தில் விளையாடப் பட்டது இந்த டெஸ்ட் மேட்ச், பாகிஸ்தான் அணிக்கு எதிராக.கபில் தேவ் கேப்டன் ஆக இருந்தார்.இந்திய அணி இந்த டெஸ்டிலும் முதலில் பேட்டிங் செய்தது. ஸ்கோர் 403.
மொஹம்மத் அசாரூதின்
இந்த டெஸ்டிலும் சதம் எடுத்தார் (141 ரன்கள் )
பாகிஸ்தானின் முதல் இன்னிங்சின் ஸ்கோர் 229.
இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோர் 3 விக்கெடுக்கள் இழப்பிற்கு181 ரன்களுக்கு டிக்ளர் செய்தனர்.
பாகிஸ்தான் அணியினர் 5 விக்கெட்டு கள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்து இருந்த தருணத்தில் மேட்ச் முடிவுற்றது.இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரோஜர் பின்னி பேட்டிங்கில் விளையாடிய ஒரே இன்னிங்சில் 52* (நாட் அவுட்).
பவுலிங்கில் முதல் இன்னிங்க்சில் 56 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுக்களும் , இரண்டாவது அணியில் 45 ரன்கள் விட்டு கொடுத்து 2 பாகிஸ்தான் விக்கெட்டு களை வீழ்த்தினார்.இவரின் பங்களிப்பிற்கு ஆட்ட நாயகன் விருது பெற்றார். ( Player of the match )
இந்த இரண்டு
மேட்சுகளிலும் மிகவும் முக்கியமான இரண்டு ஆட்டக்காரர்கள் இடம் பெறாதது , ( each one test ) அந்த கால கட்டத்தில் மிகவும் பெரிதாக அலசப்பட்டது, பேசப் பட்டது.
1984 ஆம் ஆண்டு நடைப் பெற்ற மேட்சில் இங்கிலந்து அணிக்கு எதிராக கபில்தேவ் இடம் பெறவில்லை. சந்து போர்டே தலைமையில் ஆன தேர்வு குழு, கபில் தேவை இந்த டெஸ்ட் மேச்சுக்கு விளையாட தேர்வு செய்யவில்லை.
அதற்கு கேப்டன் கவாஸ்கர் தான் காரணம் என்ற சர்ச்சையும் எழுந்தது.
கவாஸ்கர் குழுவை தேர்வு செய்யும் ஓட்டிங் ரைட்ஸ் ( Voting Rights ) தனக்கு இல்லை எனவும், சிறந்த விளையாட்டு வீரரை தான் ஏன் தேர்வு செய்வதை தடுக்க போகிறேன் என்றும் விளக்கம் கூறி சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
1986 - 87 டெஸ்டில், முன்பே கூறி இருந்த படி கவாஸ்கர் குறிப்பாக
கல்கத்தா டெஸ்டில் விளையாட மறுத்து, விளையாடாமல் விலகி கொண்டார்.
இவருக்கு பதிலாக அருண்லால் , கிருஷ்ணம்மாச்சாரி ஸ்ரீ காந்துடன் பேட்டிங்கை ஒப்பனிங் செய்தார், இரண்டு இன்னிங் சிலும்.
கவாஸ்கருக்கு பதிலாக விளையாடிய அருண் லால் சிறப்பான பேட்டிங்கை வெளிப் படுத்தினார்.
முதல் இன்னிங்ஸ் 52
ரன்கள்.
இரண்டாவது இன்னிங்ஸ் 70 ரன்கள்.
இந்த இரண்டு டெஸ்டுகளும் டிராவில் முடிவு பெற்றன.
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைப் பெற்ற டெஸ்டில் தான் (1984 ) அசாரூதின் டெஸ்ட் விளையாட துவங்கினார்.
இந்த அறிமுக டெஸ்ட் ஆட்டத்திலேயே சதம் எடுத்து அசத்தினார்.
அது மட்டும் அல்லாமல் அடுத்த இரண்டு டெஸ்டுகளிலும் சதங்கள் குவித்து உலக ரிகார்டு ஏற்படுத்தினார்.
மெட்ராஸ் டெஸ்ட் 105 ரன்கள்
காண்பூர் டெஸ்ட் 122 ரன்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
1969-70 ல் இந்தியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்ட பில் லாரி தலைமையினால் ஆன ஆஸ்திரேலிய கிரிக்கெட் குழு விளையாடிய 5 டெஸ்டுகளில் , 3 - 1 வித்தியாசத்தில் தொடரை வென்றது.
பிறகு தென் ஆப்பிரிக்காாவிற்கு சென்ற ஆஸ்திரேலிய குழு அங்கு 4 டெஸ்டுகள் விளையாடினார்கள்.இந்த நான்கு டெஸ்டுகளிலும் தென் ஆப்பிரிக்க அணி வென்றது.
இந்த தொடரின் கடைசி டெஸ்ட், 1970 மார்ச் மாதம் நடைப் பெற்றது.
தென் ஆப்பிரிக்கா
முதல் இன்னிங்ஸ் 311
இரண்டாவது இன்னிங்ஸ் 470/ 8
( டிக்ளர்)
ஆஸ்திரேலியா
முதல் இன்னிங்ஸ் 212
இரண்டாவது இன்னிங்ஸ் 246
முக்கிய பங்களிப்பு
தென் ஆப்பிரிக்கா
பேட்டிங்
பார்ரி ரிச்சர்ட்ஸ் 81 , 126
ரன்கள்
எட்டி பார்லோ 73 27
அலி பேச்சர் 17 73
லீ இர்வின் 25 102
பவுலிங்
பீட்டர் போல்லோக்
3 - 46
0 - 2
மைக் ப்ரோக்டர்
3 - 30
6 - 73
ஆஸ்திரேலியா
பேட்டிங்
இயன் ரெட்பாத் 55 37
பால் ஷீயஹன் 67 46
பவுலிங்
ஆலன் கனாலி
6 - 47
1 - 130
அந்த கால கட்டத்தில் சிக்ஸர்கள் அபூர்வம், டெஸ்ட் மேட்சுகளில்.
இந்த மேட்ச்சில் இரண்டு அணிகளிலும் சேர்த்து மொத்தமாக அடிக்கப் பட்ட சிக்ஸர்களின் எண்ணிக்கை 11.
தென் ஆப்பிரிக்கா 9
பார்ரி ரிச்சர்ட்ஸ் 3
பார்லோ 1
இர்வின் 3
லிண்ட்சே 1
ப்ரோக்டர் 1
ஆஸ்திரேலியா 2
ஷீயஹன் 1
பில் லாரி 1
தென் ஆப்பிரிக்கா
விக்கெட் கீப்பர் லிண்ட்சே 7 கேட்சுகள்
(3 , 4 )
ஆஸ்திரேலியா
விக்கெட் கீப்பர்
டபேர் 5 கேட்சுகள் ஒரே இன்னிங்சில்.
தென் ஆப்பிரிக்கா அணி 323 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, இந்த டெஸ்டில்.
இந்த கிரிக்கெட் டெஸ்டுதான் தென் ஆப்பிரிக்கா விளையாடிய கடைசி டெஸ்ட் தடை செய்வதற்கு முன்பு.
தடை நீங்கியதும் அவர்கள் விளையாடிய முதல் சர்வ தேச மேட்ச் கல்கத்தாவில் 1991 நவம்பர், ஈடன் கார்டான்ஸ் மைதானத்தில் ஒரு நாள் பந்தயமாக நடைப்பெற்றது.
வாசுதேவன், பெங்களூரு