For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு ஓவருக்கு 8 பந்துகள்.. கிரிக்கெட் பிதாமகன் பிராட்மேன் அடித்த சிக்சர்கள் மொத்தம் எத்தனை?

ரசிகர்கள் அனைவரும் இன்று சிஎஸ்கே, ஆர்சிபி போட்டியில் மழை பெய்யுமா, பெய்யாதா என்று டென்ஷனில் இருப்பீர்கள். உங்களை கூல் செய்யவே இந்த செய்தி. கிரிக்கெட்டில் உங்களுக்கு தெரியாத சில தகவல்களை கூறுகிறது இந்த செய்தி தொகுப்பு. ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடப்பட்ட டெஸ்ட் மேட்ச்சுகள், முதல் தர ஆட்டங்களில் 1936-37 முதல் 1978-79 சீஸன் வரையில் ஒரு ஓவருக்கு 8 பந்துகள் வீசப்பட்டு வந்தன.

புகழ் பெற்ற இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் 1934 ஆம் ஆண்டுக்கு பிறகு விளையாடிய எந்த டெஸ்ட் மேட்சிலும் தொடர்ந்து 75 வருடங்கள் ஆஸ்திரேலிய அணிகள்,. ஒரு டெஸ்டிலும் தோல்வி அடையவில்லை. அந்த கால கட்டத்தில், ஆஸ்திரேலிய அணிகள் விளையாடிய 18 டெஸ்ட்டுகளில் 9 ல் வெற்றி பெற்றனர்.
2009 ல் தான் தோல்வியை தழுவினர்.

Cricket titbits - How Many sixers Don bradman hit in his whole international carrier

சர் டான் பிராட்மன் விளையாடிய 52 டெஸ்ட்டுகளில் 618 பவுண்டரிகள் அடித்துள்ளார். பந்துகள் தரையை ஒட்டி செல்வதையே அவர் விரும்பினார். அடித்த சிக்ஸர்கள் 6. மட்டுமே. அதில் 5 இங்கிலாந்து அணிகளுக்கு எதிராகவும், 1 இந்திய அணிக்கு எதிராக. ஆனால் ஆஸ்திரேலிய மண்ணில், முதல் தர ஆட்டங்களில் இவர் அடித்த சிக்ஸர்கள் 45.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இங்கிலாந்து,
ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஆஷஸ் தொடர் எப்பொழுதும் தனி பிரபலம் அடையும்.

1961 ல் நடைபெற்ற முதல் டெஸ்ட் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் மைதானத்தில் ஜூன் மாதம் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் 3 சதங்கள் பதிவாகின. நீல் ஹார்வே 114, ராமன் சுப்பா ரோவ் 112 , டெட் டெக்ஸ்ட்டர் 180.

மொத்த ஆட்டத்திலும் ஒரே 1 சிக்ஸர். அடித்தது இங்கிலாந்து பவுலர், ட்ருமன்.

சதங்கள் எடுத்தவர்கள் அடித்த பவுண்டரிகள்

நீல் ஹார்வே 15
ராமன் சுப்பா ரோவ் 14 டெட் டெக்ஸ்ட்டர் 31

பவுலிங்கில் அசத்தியவர்கள்

கென் மெக்காய் 4 / 57
ரிச்சி பெனோட் 3 / 15

ட்ருமன் 2 / 136
ஸ்டாதம் 3 / 147

ஸ்கோர்
இங்கிலாந்து
195 & 401 / 4
ஆஸ்திரேலியா
516 / 9 டிக்ளர்

டெஸ்ட் டிராவில் முடிந்தது.

இரண்டாவது டெஸ்ட் ( லார்ட்ஸ்) ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றனர்.
பில் லாரி 130

ட்ருமன் 6, பிரைன் ஸ்டாதம் 5 , ஆலன் டேவிட்சன் 7, கிரஹம் மெக்கின்சி 6 விக்கெட்டுகள் எடுத்தனர்.

மூன்றாவது டெஸ்ட் லீட்ஸ். ஜூலை.

இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றனர்.

நீல் ஹார்வே
73 & 53

காலின் கௌட்ரே
93 & 22

ஜியோப் புல்லர்
53 & 26

பவுலிங்
ட்ருமன் 11
5 / 58 & 6 / 30
டேவிட்சன் 6
5 / 63 & 1 / 17

ஸ்கோர்
ஆஸ்திரேலியா 237 & 120
இங்கிலாந்து 299 & 62 /2

4 வது டெஸ்ட்
மன்செஸ்டர்

ஸ்கோர்
ஆஸ்திரேலியா 190 & 432
இங்கிலாந்து 367 & 201

பில் லாரி 74 & 102
ஆலன் டேவிட்சன் 77*
பவுலிங்
ஸ்டாதம் 6, டெட் டெக்ஸ்ட்டர் 6,
டேவிட்சன் 5, ரிச்சி பெனாட் 6
ஆஸ்திரேலியா வெற்றி ரன்கள் வித்தியாசம் 54.

5 வது டெஸ்ட் ஓவல். ஆகஸ்ட்.

ஸ்கோர்
இங்கிலாந்து 256 & 370 / 8
ஆஸ்திரேலியா 494
டெஸ்ட் டிராவில் முடிந்தது.
பீட்டர் மே 71 & 33
பாரிங்டன் 53 & 83

ஒனில் 117 ( 14 x 4 )
பர்ஜ் 181 ( 22 x 4 )

பவுலிங்
டேவிட் ஆலன் 4,
கென் மெக்காய் 7, பெனாட் 4, டேவிட்சன் 4

ஆஸ்திரேலிய அணி அஷஸ் தொடரை வென்றனர்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சிதாத் வெட்டிமுனி, ஸ்ரீலங்கா அணிக்காக ஒப்பனிங் பேட்ஸ்மன் ஆக இருந்தவர். இவர்தான் முதல் ஸ்ரீலங்கன் கிரிக்கெட் வீரர் இன்னிங்சை ஓபன் செய்து கடைசி வரையில் அவுட் ஆகாமல் இருந்து, காரிட் தி பேட் ( Carried the bat ) சாதனை புரிந்தவர். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் ஸ்ரீலங்கா அணியின் ஸ்கோர் 144. இவரது ஸ்கோர் 63* ( நாட் அவுட் )

இவரது சகோதரர் மித்ரவுடன், இரண்டு டெஸ்ட்டுகளில் ஓபன் செய்துள்ளார்.
23 டெஸ்ட்டுகள். 1221 ரன்கள் சதங்கள் 2. (157 & 190) அரை சதங்கள் 6.

1982 பிப்ரவரியில் அறிமுக டெஸ்ட், இங்கிலாந்து அணிக்கு எதிராக.
1987 ஜனவரியில் இந்திய அணிக்கு எதிராக, கடைசி டெஸ்ட்.

இவர் 3 கேப்டன்கள் தலைமையில் விளையாடியுள்ளார்.

35 ஒரு நாள் ஆட்டங்களில் 786 ரன்கள் குவித்துள்ளார்.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Saturday, May 18, 2024, 13:45 [IST]
Other articles published on May 18, 2024
English summary
Cricket titbits - How Many sixers Don bradman hit in his whole international carrier ஒரு ஓவருக்கு 8 பந்துகள்.. கிரிக்கெட் பிதாமகன் பிராட்மேன் அடித்த சிக்சர்கள் மொத்தம் எத்தனை?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+