cricket Titbits.. வலது கையில் வேகப்பந்துவீச்சு.. இடது கையில் சுழற்பந்துவீச்சு.. கலக்கிய இந்திய வீரர்
பெங்பளூரு : கிரிக்கெட் ஆட துவங்கிய பொழுது வலது கையால் வேக பந்தும், இடது கையால் சுழல் பந்தும் வீசினார்.இதைப் பார்த்த பிரபல கிரிக்கெட் வீரர், இவருக்கு சுழல் பந்து வீசுவது எதிர்காலத்தில் உதவும் என்று கணித்து இவரை சுழல் பந்து வீச வழி நடத்தினார்.
இவரது வலது கையை முதுகோடு கட்டி, இடது கையினால் சுழல் பந்து வீச பழக்கினார். பிற்காலத்தில் இந்திய கிரிக்கெட் டீமில் டெஸ்ட் மேட்சுகளில் விளையாடி அசத்தியவர்.சரியான நேரத்தில், சரியாக வழி நடத்தியவர் வினு மன்காட். ( Vinoo Mankad) பலன் பெற்ற கிரிக்கெட் வீரர் சலீம் துரானி. .!(Salim Durani)

வெங்கடராகவன், ( Venkatragavan) தனது 19 வது வயதில் நியூசிலாந்து அணியின் 11 ஆட்டக்காரர்களுடைய விக்கெட்டுக்களை யும் வீழ்த்தி சாதித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தின் இரண்டாவது வீரர் ஆவார்.
இது நிகழ்ந்தது டெல்லி டெஸ்டில் 1965. முதல் இன்னிங்சில் 8, 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதன் முதலில் இங்கிலந்தின் ஜிம் லேக்கர் ( Jim Laker) 1956 டெஸ்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வேக பந்து வீச்சாளர் ஜகவல் ஸ்ரீநாத் ( Jagaval Srinath) தனது முதல் ரஞ்சி கோப்பை மேட்சில் ஹைத்திரபாத்திற்கு எதிராக ஹாட்ட்ரிக் எடுத்தார்.
ஒரு டெஸ்ட் மேட்சில் அபாரமாக பந்து வீசி இந்திய அணி வெற்றி பெற உதவினார்.
மொத்தம் 8 விக்கெட்டுகள் எடுத்தார் . குறிப்பாக இரண்டாவது இன்னிங்சில் 21 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
அதே இன்னிங்சில் மூன்று முறை அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகள் எடுத்தும், அவரால் ஹாட்ட்ரிக் சாதனை நிகழ்த்த முடியவில்லை.
1960 /70 களில் இந்திய டெஸ்ட் அணியில் 11 நபர்களில் அதிக பட்சமாக பாம்பாய் ( இன்றைய மும்பை) ஆட்டக்காரர்களே இடம் பெற்றனர்.
ஆனால் இந்த குறிப்பிட்ட டெஸ்டில், 5 கர்நாடகா ஆட்டக்காரர்கள் விளையாடினர்.அவர்கள் ராகுல் டிராவிட் அணில் கும்ளே , ஜகவல் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத் , சுனில் ஜோஷி.இந்த டெஸ்ட் மேட்ச் தான் வி வி எஸ் லட்சுமணனுக்கு அறிமுக டெஸ்ட் .இரண்டு அணியிலும் ஒருவர் கூட சதம் அடிக்கவில்லை.அணில் கும்ளே மற்றும். நரேந்திர ஹிர்வாணி ஆகிய இரண்டு வலது கை லெக் ஸ்பின் பவுலர்கள் சேர்ந்து களம் இறங்கினர்.நவம்பர் 1996 அகமதாபாத்தில் நடைப் பெற்றது.
வாசுதேவன் பெங்களூரு
Story first published: Tuesday, December 26, 2023, 20:31 [IST]
Other articles published on Dec 26, 2023


Click it and Unblock the Notifications