cricket titbits - 5 நாளும் களத்தில் நின்ற வீரர்..ஆஸியை கதிகலங்க வைத்த பாக் வீரர்.. அரிய தகவல்கள்
சென்னை : ஜனவரி 1959 அன்றைய கல்கத்தாவின் ( இன்றைய கொல்கொத்தா ) ஈடன் கார்டன் மைதானம்.மேற்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹன் கன்ஹாய் (Rohan Kanhai) அவுட். கேட்ச் பிடித்தவர் பாலி உம்ரிகர் ( Poly Umrigar). பந்து வீசியவர் சுரேந்திரநாத்.(Surendra Nath) ஸ்டேடியத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கன்ஹாயின் மிக சிறந்த பேட்டிங்கிற்காக.எழுந்து நின்று கை தட்டினர்,
மேற்கு இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 5 விக்கெட் இழப்பிற்கு 614 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தனர்.அந்த அணியில் பாசில் புட்சர்(Basil Butcher) மற்றும் காரி சோபர்ஸ்( Gary Sobers) சதங்கள் எடுத்தனர். அவர்கள் ரன்கள் முறையே 103 மற்றும் 106.

ரோஹன் கன்ஹாய் 256 ரன்கள் எடுத்தார். அதில் 42 பவுண்டரிகள் அடித்தார். முதல் 3 1/2 நாட்கள் அவர் பேட்டிங் செய்தார்.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 124 ரன்கள் எடுத்தனர். பாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்சில் 154 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியை தழுவினர்.
ரோஹன் கன்ஹாய் இந்தியா பேட்டிங் செய்த இரண்டு இன்னிங்சிலும், பீல்ட் செய்தார்.
இதன் மூலம் அவர் அந்த மேட்சின் 5 நாட்களிலும் மைதானத்தில் ஆடி பங்கு பெற்றார்.
•••••••••••••••••••••••••••••••••••••••••
பாகிஸ்தான் அணி ஆஸ் திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது 1979 ல்.
மெல்போர்ன் டெஸ்டில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற பெரிதும் உதவியர் இந்த வேக பந்து வீச்சாளர்.
இம்ரான்கானுடன் ஜோடி சேர்ந்து , தன் தனிப்பட்ட பந்து வீசும் சாதனையால் குறிப்பாக ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் ஆடும் பொழுது அவர்களுடைய விக்கெட்டுகளை அள்ளி அசத்தினார்.
முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட்டுகளையும் எடுத்தார்.
இவர் இந்த இன்னிங்சின் கடைசி 7 விக்கெட்டுகளை 1 ரன் கொடுத்து 33 பந்துகள் வீசி, எடுத்தார்.
இவர் பெயர் சப்ராஸ் நவாஸ் .( Safraz Nawaz )
55 டெஸ்டுகளில் 177 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 1045 ரன்கள் பேட்டி ங்கில் அடித்துள்ளார்.
45 ஒரு நாள் ஆட்டங்களில் 63 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
••••••••••••••••••••••••••••••••••••••••••
1959 ம் வருடம் டெல்லி டெஸ்ட்டில் மேற்கு இந்திய அணிக்கு எதிராக இந்திய வீரர் சந்து போர்டே ( Chandu Borde) இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து இருக்க வேண்டும்.
முதல் இன்னிங்ஸில் 109 ரன்கள் எடுத்த இவர், இரண்டாவது இன்னிங்சில்ல 96 ரன்கள் எடுத்த பொழுது வேகப் பந்து வீச்சாளர் கில்கிறிஸ்ட் ( Gilchrist ) பந்தை அடிக்க முற்பட்டும் பொழுது இவர் பேட் ஸ்டும்ப்பில் பட்டு ஹிட் விக்கெட் ( hit wicket) முறையில் அவுட் ஆனார்.
இவர் சதம் அடித்ததும் சில இளைஞர்கள் இவரை அலேக்காக தூக்கி, தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். அப்படி தூக்கியவர்களில் ஒருவர் இந்திப்பட நடிகர் அமிதாப் பச்சன். இந்த செய்தியை இவரிடமே தெரிவித்தார் அமிதாப் பச்சன் ஒரு டிவி நிகழ்ச்சியில்.
அந்த குறிப்பிட்ட டெல்லி டெஸ்ட் ட்ராவில் முடிந்தது.
சந்து போர்டே 55 டெஸ்டுகளில் 3061 ரன்கள் எடுத்துள்ளார்.. 52 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஒரு டெஸ்டில் கேப்டனாக திகழ்ந்துள்ளார். 1967- 68 ஆஸ்திரேலிய சுற்று பயணத்தில் அடிலெய்டு( Adelaide test) டெஸ்டில். போர்டே மொத்தம் 5 டெஸ்ட் சதங்கள் எடுத்துள்ளார்.
•••••••••••••••••••••••••••••••••••••••••
1901-02 மற்றும் 1903-04 ல் ஆஸ்திரேலிய ஆப் ஸ்பின் பவுலர் ஹக்
ட்ரமப்லே ( Hugh Trumble) என்பவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டு முறை டெஸ்ட் மேட்ச்களில் ஹாட் ட்ரிக் எடுத்து சாதித்தவர்.
வாசுதேவன், பெங்களூரு
Story first published: Sunday, December 24, 2023, 20:17 [IST]
Other articles published on Dec 24, 2023


Click it and Unblock the Notifications