Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுட்டு கொல்லப்பட்ட WI கிரிக்கெட் வீரர்.. ஜாம்பவான் வீரருக்கு நேர்ந்த கதி.. வரலாற்று சுவடுகள்

பார்படாஸ் : பெர்னார்ட் ஜூலியன். மேற்கு இந்திய தீவுக்கள் அணிக்கு விளையாடிய ஆல் ரவுண்டர். பேட்டிங் வலது கை. பவுலிங் இடது கை வீரர். சிறந்த பீல்டர். முதல் தர கிரிக்கெட் ட்ரினிடாட், கெண்ட் அணிகள். 24 டெஸ்டுக்கள் 34 இன்னிங்ஸ்களில் பங்கு பெற்ற இவர் ஒரு முறை கூட பூஜ்ஜியத்தில் ( 0 ) அவுட் ஆனது இல்லை.

1973 ல் ஓவல் டெஸ்டில் அறிமுகம். இங்கு மேற்கு இந்திய தீவுக்கள் அணி வெற்றி 158 ரன்கள் வித்தியாசத்தில்.

cricket cricket history sports news

பெர்னார்ட் ஜூலியன்
பேட்டிங்
11 & 23
பவுலிங்
2 / 49 & 0 / 35

இந்த டெஸ்டில் மற்ற வீரர்களின் குறிப்பிடும் படியான பங்களிப்பு.

பேட்டிங்
கிளைவ் லாயிட் 132 ஆல்வின் களிச்சரேன் 80
கீத் பாயிஸ் 72

ஜியோப் பாய் காட் 97
ஆல்வின் களிச்சரேன் 80
காரி சோபர்ஸ் 51
பிரேங்க் ஹய்ஸ் 106* நாட் அவுட்

பவுலிங் (விக்கெட்டுக்கள்)

கீத் பாயிஸ் 11
ஜியோப் ஆர்னால்ட் 8
ஜான் ஸ்னோ , ரே இல்லிங்ஒர்த், காரி சோபர்ஸ், லான்ஸ் கிப்ஸ் ( தலா ) 3

1977 ல் ஜியார்ஜ்டவுன். இவரது கடைசி டெஸ்ட் பாகிஸ்தான் அணிக்கு எதிராக.ஆட்டம் டிராவில் முடிவு பெற்றது.

பெர்னார்ட் ஜூலியன்
பேட்டிங்
5
பவுலிங்
1 / 25 & 0 / 63

இந்த டெஸ்டில் மற்ற வீரர்களின் குறிப்பிடும் படியான பங்களிப்பு.

பேட்டிங்
கார்டன் கிரீனிட்ஜ் 91
விவ் ரிச்சர்ட்ஸ் 50
ஆல்வின் களிச்சரேன் 72
இர்வின் ஷில்லிங்க்போர்ட் 120
மஜித் கான் 167
சாஹீர் அப்பாஸ் 80
ஹாரூன் ரஷீத் 60
ரோய் பிரெட்ரிக்ஸ் 52*
கார்டன் கிரீனிட்ஜ் 96

பவுலிங் விக்கெட்டுக்கள்

ஆண்டி ராபர்ட்ஸ் 5
காலின் கிராப்ட் 5
ஜோயல் கார்னர் 8
மஜித் கான் 4

பெர்னார்ட் ஜூலியன் 24 டெஸ்டுக்களில் ரன்கள் 866. சராசரி 30.92 சதங்கள் 2 அரை சதங்கள் 3 கேட்சுக்கள் 14. விக்கெடுக்கள் 50. 1973 ல் லார்ட்ஸ் மைதானத்தில் காரி சோபர்ஸ் உடன் ஜோடியாக குவித்த ரன்கள் 231.
பெர்னார்ட் ஜூலியன் 121, காரி சோபர்ஸ் 150*, கேப்டன் ரோஹான் கன்ஹாய் 157,
கீத் பிளேட்சர் 86*

பவுலிங் விக்கெட்டுக்கள்
கீத்பாயிஸ் 8
லான்ஸ் கிப்ஸ் 5
வான்பர்ன் ஹோல்டர் 4
பாப் வில்லீஸ் 4
மேற்கு இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் 226 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்தது, இங்கிலாந்து அணிக்கு எதிராக.

oooooooooooooooooooooooooooooooooooooooooooo

32 டெஸ்ட் ஆட்டங்கள் விளையாடிய மேற்கு இந்திய அணியின் வீரர் ஜெப்ரெய் ஸ்டோல்மெயர் எடுத்த ரன்கள் 2159.சதங்கள் 4. அரை சதங்கள் 12.கேட்சுக்கள் 20. அதிக பட்ச ரன்கள் 160.முதல் தர கிரிக்கெட் அணி ட்ரினிடாட்.

அறிமுக ஆட்டம் இங்கிலாந்து அணிக்கு எதிராக லார்ட்ஸ் டெஸ்ட் 1939.
ரன்கள்
59 & 0
கடைசி டெஸ்ட்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஜியார்ஜ் டவுன் 1955.

இந்த டெஸ்டில் ஜெப்ரெய் ஸ்டோல்மெயர் கேப்டன்.
ரன்கள்
16 & 17

இவரது சகோதரர் விக்டரும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியவர்.

ஜெப்ரெய் ஸ்டோல்மெயர் , ரே என்ற வீரருடன் துவக்க வீரராக இறங்கி சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்தயவர்.1948-49 அன்றைய மெட்ராஸ் டெஸ்டில் இருவரும் சேர்ந்து கலக்கினர். முதல் விக்கெட்டுக்கு 239 ரன்கள் சேர்த்தனர். அதில் முதலில் அவுட் ஆன அல்லன் ரேயின் ஸ்கோர் ரன்கள் 109. ஜெப்ரெய் ஸ்டோல்மெயர் எடுத்த ரன்கள் 160.
இந்த டெஸ்டில் எவேர்ட்டன் வீக்ஸ் 90.

மேற்கு இந்திய அணியின் ஸ்கோர் 582.
இந்திய அணி போல்லோவ் ஆன் பெற்று விளையாடி தோல்வி தழுவினர், ஒரு இன்னிங்ஸ் 193 ரன்கள் வித்தியாசத்தில்.
ஸ்கோர்
245 & 144
இந்திய அணி வீரர் டாட்டு பட்கர் வீழ்த்திய விக்கெடுக்கள் ஒரு இன்னிங்சில் விக்கெட்டுக்கள் 7.

ஜெப்ரெய் ஸ்டோல்மெயர், அல்லன் ரே ஜோடி 1950ல் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் சஸ்ஸக்ஸ் அணிக்கு எதிரான முதல் தர ஆட்டத்தில் முதல் விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப்பில் சேர்த்த ரன்கள் 355. ஸ்டோல்மெயர் 198
அல்லன் ரே 179

68 வயதான ஜெப்ரெய் ஸ்டோல்மெயரின் முடிவு பரிதாபமானது. இவரது போர்ட் ஆப் ஸ்பெயின், ட்ரினிடாட் வீட்டில் இருக்கும் பொழுது இவர் வீட்டில் புகுந்த மர்ம நபர்களால் 5 முறை சுடப்பட்டார்
துப்பாக்கியால். பிளோரிடா மருத்துவமனையில் செப்டம்பர் 10, 1989 ல் இவர் உயிர் பிரிந்தது.

ஜே டி சி கோடார்ட், ஆர் எஸ் கிராண்ட், ஜி ஏ ஹெட்லே ஆகியோர் தலைமையில் விளையாடிய ஜெப்ரெய் ஸ்டோல்மெயர் கேப்டனாக வழி நடத்திய டெஸ்ட் ஆட்டங்கள் 13.

இவரது சகோதரர் விக்டர் ஸ்டோல்மெயர் விளையாடியது ஒரே ஒரு டெஸ்ட். அதிலும் ஒரே ஒரு இன்னிங்ஸ் மட்டும் தான் விளையாடினார். அவர் எடுத்த ஸ்கோர் 96. சராசரி ரன்கள் 96.
இந்த விக்டர் ஆடியது தான் கடைசி டெஸ்டாக அமைந்தது .

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Tuesday, July 9, 2024, 17:16 [IST]
Other articles published on Jul 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+