கிறிஸ்ட்சர்ச் : கீத் ரேமாண்ட் ஸ்டாக்போல் ,ஆஸ்திரேலிய அணிக்கு 43 டெஸ்டுக்கள், 6 ஒரு நாள் ஆட்டங்கள் ஆடியவர்.இவரது அறிமுக ஆட்டங்கள் இரண்டுவகை கிரிக்கெட்டிலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக (1966 ல்
அடிலெய்ட், 1971 ல் மெல்போர்ன் )
அதே மாதிரி இறுதி ஆட்டங்கள் நியூசிலாந்து அணிக்கு எதிராக (1974 ல்
ஆக்லாந்து, 1974 ல் கிரைஸ்ட்சர்ச்)டெஸ்ட் பவுலிங்கில் 15 விக்கெடுக்கள் வீழ்த்தியுள்ள இவரது சாதனை இந்திய அணிக்கு எதிராக அன்றைய பாம்பாய் டெஸ்டில். இரண்டாவது இன்னிங்க்சில்

1.2 ஓவர்
1.0. மெய்டன்
0 ரன்
1 விக்கெட்
இவர் டெஸ்டுகளில் எடுத்த சதங்கள் 7, அதிக பட்ச ரன்கள் 207,
இங்கிலாந்து அணிக்கு எதிராக பிரிஸ்பேன் டெஸ்டில்.இந்த டெஸ்டில் இவர் கேப்டன் பில் லாரியுடன் துவக்க வீரராக களம் கண்டார். இவர் 18 ரன்கள் எடுத்த போது பாய்காட் தடுத்து வீசிய பந்து மூலம் ரன் அவுட் ஆகியும், அம்பயர் அவுட் கொடுக்கவில்லை என்ற சர்ச்சை எழுந்தது,
அப்பொழுது. இவர் அந்த இன்னிங்சில் இரட்டை சதம் எடுத்தார். டக் வால்டர்ஸ் 112. இங்கிலாந்து வேக பந்து வீரர் ஜான்
ஸ்நோ 8, கென் ஷட்டில்ஒர்த் 5, இந்த டெஸ்டில் விக்கெட்டுக்கள் எடுத்தனர். ஆட்டம் டிராவில் முடிந்தது.
இவரது அறிமுக அடிலெய்ட் ஆட்டம், டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தின் 600வ்து டெஸ்ட். இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் 9 ரன்கள் வித்தியாசத்தில்.வெற்றி பெற்றது. க்ரகாம்
மெக்கின்சி 7, நீல் ஹவ்கே 6, செப் ஜோன்ஸ் 6
விக்கெட்டுக்கள் எடுத்தனர்.
இந்த டெஸ்டில் மூன்று சதங்கள் கேப்டன் பாப் சிம்ப்சன் 225, பில் லாரி 119, கென் பாரிங்டன் 102.கீத் ஸ்டாக்போல், டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தின் 700 வது டெஸ்டிலும் பங்கு பெற்றார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக நோட்டிங்காம்மில், 1972 ல்.
இதில் ஸ்டாக்போல் சதம் எடுத்தார். ரன்கள் 114. ரோச் எட்வர்ட்ஸ் 170. பிரைன் லக்ஹர்ஸ்ட் 96.
விக்கெட்டுக்கள் ஜான்
ஸ்நோ 8. டென்னிஸ் லில்லீ 6, பாப் மெஸ்ஸி 5
கீத் ஸ்டாக்போல் டெஸ்ட் ரன்கள் 2807.
முதல் தர கிரிக்கெட் விளையாடியது விக்டோரியா அணிக்கு.
oooooooooooooooooooooooooooooooooooooooooooo
ரோஷன் மஹானாமா ஸ்ரீலங்கா அணிக்கு 52 டெஸ்ட்டுக்கள் 2576 ரன்கள் 4 சதங்கள், 11அரை சதங்கள் 56 கேட்சுக்கள். அதிக பட்ச ரன்கள் 225
213 ஒரு நாள் ஆட்டங்கள். 5162 ரன்கள். 4 சதங்கள், 35
அரை சதங்கள் 109 கேட்சுக்கள். அதிக பட்ச ரன்கள் 119.
1997 ல் இந்திய அணிக்கு எதிரான டெஸ்டில் சனத் ஜெயசூர்யாவுடன் ஜோடி சேர்ந்து இரண்டாவது விக்கெடுக்கு பார்ட்னர் ஷிப்பில் சேர்த்த ரன்கள் 576. அப்பொழுதுதான் இவர் இரட்டை சதம் பதிவு செய்தார்.
இவர் மொத்தம் 318 ஆட்டங்களில் (டெஸ்டுக்கள், ஒரு நாள் ஆட்டங்கள், டி 20 ஆட்டங்கள் ) மேட்ச் ரெபரீயாக பணி புரிந்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு.எதிராக அடுத்து அடுத்த டெஸ்டுகளில் இவர் எடுத்த ரன்கள் 153, 109.இந்திய அணிக்கு எதிராக ஒரு டெஸ்டில் எடுத்த ரன்கள் 151.
இவர் உலக கோப்பை ஒரு நாள் பந்தயங்களில் சிறப்பான ஆட்டங்களை வெளிப் படுத்தியுள்ளார்.
வாசுதேவன், பெங்களூரு