For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிரிக்கெட் உலகில் அசத்திய இரட்டையர்கள்.. கிரிக்கெட் வரலாற்றில் இடம்பெற்ற இரட்டையர்கள் பட்டியல்

பெங்களூரு : சர்வதேச அளவில் பல இரட்டையர்கள் கிரிக்கெட் விளையாடி அசத்தியுள்ளார்கள். அவர்களில் ஆடவர் மற்றும் மகளிர் இரட்டையர் ஜோடிகளும் அடக்கம்.

சில புகழ்பெற்ற இரட்டை கிரிக்கெட் ஆட்டக் காரர்களை பற்றி காண்போம்.

cricket titbits - List of Twins Who Played in cricket matches

இரட்டையர் கிரிக்கெட் வீரர்களில் மிக முக்கியமானவர்களாக கருதப் படுபவர்கள், இங்கிலாந்து இரட்டையர் பெட்சர் சகோதரர்கள்.(Bedser Twins).

இருவரும் ஒரே மாதிரி தோற்றம் கொண்டவர்கள்.( Identical Twins). ஒரேமாதிரி உடைகள் அணிந்துக் கொண்டு பிறரைக் குழப்புவார்கள்.

இவர்களது தந்தையார் முதல் உலக யுத்தத்தில் பங்கு பெற்றவர். அவர் இரட்டை சகோதரர்களை சிறு வயதிலேயே கிரிக்கெட் விளையாட ஊக்குவித்தார். இரண்டு சகோதரர்களும் ஒன்றாக பிற்காலத்தில் சர்ரே கிரிக்கெட் டீமிற்காக (Surrey County Cricket Team) தங்கள் முதல் தர கிரிக்கெட் மேட்சில் 1939 ம் வருடம் களம் இறங்கினர்.

ஜூலை 4, 1918 ம் வருடம் பிறந்த இந்த இரட்டைச் சகோதரர்கள் வாழ் நாள் முழுவதும் திருமணம் செய்துக் கொள்ளாமல் தந்தை கட்டிய வீட்டில் ஓன்றாக வசித்தனர்.

இவர்கள் பெயர்கள் எரிக் மற்றும் அலெக். ( Eric and Alec) எரிக் பிறந்து பத்து நிமிடங்கள் கழித்து அலெக் பிறந்தார். எரிக் பெட்சர் 2006 ஆம் ஆண்டும் அலெக் பெட்சர் 2010 ம் ஆண்டும் மறைந்தனர்.

1939 ம் வருடம் இருவரு ம் ராயல் விமான படையில் ( Royal Air Force) பிரான்ஸ் நாட்டில் பணி புரிந்தனர்.

தங்கள் முதல் தர கிரிக்கெட் விளையாட்டை சர்ரே கவுண்டி டீமிற்காக ஒரே மேட்சில் களம் இறங்கி அசத்தினர்.

இருவரில் எரிக் பெட்சர் கிரிக்கெட் சரித்திரம் முதல் தர கிரிக்கெட்டுடன் முடிந்து விட்டது. (First Class Cricket).

ஒரே ஒரு முறை இங்கிலாந்து குழுவுடன் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் செய்த பொழுது டாஸ்மானியா ( Tasmaniaa) குழுவிற்கு எதிராக விளையாடியுள்ளார்.

இவர் ஆல் ரவுண்டராக திகழ்ந்தார். வலது கை பேட்ஸ்மன் மற்றும் சூழல் பந்து வீசுபவராக விளையாடியவர். 1952 முதல் 1958 வரை தொடர்சியாக ஏழு வருடங்கள் கவுண்டி சாம்பியன்ஷிப் வென்ற சர்ரே குழுவில் இடம் பெற்று அசத்தியவர்.

டெஸ்ட் மேட்சுகளில் விளையாடத பொழுதும் அயல் நாட்டு சுற்றுப் பயணங்களில் தனது இரட்டைச்சகோதரர் அலெக் பெட்சருடன் தவறாமல் பயணம் சென்றவர்.

23 வருடங்கள் சர்ரே டீமிற்காக 457 மேட்ச்கள் ஆடி 14700 ரன்களுக்கு மேலும் 830 விக்கெட்டுகளுக்கு அதிகமாகவும் எடுத்துள்ளார்.

அலெக் பெட்சர் டெஸ்ட் மேட்சுகளில் 236 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்.

இங்கிலாந்து டீமின் மிக முக்கிய வேக பந்து வீச்சாளராக திகழ்ந்தவர்.

சர் டான் ப்ராட்மேன் ( Sir Don Bradman) ஒரு முறை இவரது பவுலிங்கில் தனது விக்கெட்டை இழந்தார். அப்பொழுது அலெக் பெட்சரின் அந்த குறிப்பிட்ட பந்து தான் ( டான் ப்ராட்மேன் ) அவுட் ஆன பந்துகளிலேயே மிக சிறந்த பந்து வீச்சு என்று மனதார பாராட்டி எழுதியுள்ளார்.

1950 முதல் 1958 வரை எட்டு முறை சர்ரே கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் பெற உதவியுள்ளார், தனது அபார திறமையால். டெஸ்ட் மேட்சுகளில் 14 ஜோடிகளுடன் இங்கிலாந்து அணிக்கு வேக பந்து வீச்சாளராக துவக்கியுள்ளார் பவுலிங்கை.

485 முதல் தர மேட்சுகள் விளையாடியுள்ளார்.

1960 ல் கிரிக்கெட்டிலிரு ந்து ஒய்வு பெற்று தேர்வு குழு தலைவராக திகழ்ந்தார். சர்ரே கவுண்டி கிரிக்கெட் கிளப்பின் தலைவரகவும் இருந்தார்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இவர்களை போல் தென் ஆப்ரிக்காவில் கிழக்கு லண்டன் ( East London) பகுதியில் 1948 ல் இரட்டைச்சகோதரர்களுக்கு அலெக் மற்றும் எரிக் பெட்சர்ஸ் என்று பெயரிடப் பட்டனர். அவர்கள் இருவரும் கூட சிறந்த கிரிக்கெட் வீரர்களாக திகழ்ந்தனர்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

எஸ்ஸிஏ ஷெவில்ழ்,( Essie Shevills) ரெநே ஷெவில்ழ் (Irene Shevills) மற்றும் ஃபார்னி ஷெவில்ழ் (Fernie Shevills) மூன்று சகோதிரிகளும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் டீம்இல் விளையாடியவர்கள். இதில் ரெநே மற்றும் ஃபார்னி இரட்டையர்கள்.ஃபார்னி வலது கை வேக பந்து வீசியவர். ரெநே விக்கெட் கீப்பராக விளையாடியவர். எஸ்ஸிஏ மூன்று டெஸ்டுகளிலும் விளையாடியவர்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மார்க் ஜோங்க்மண் ( Mark Jonkman) மற்றும் மௌரிட்ஸ் ஜோங்க்மண்( Maurits
Jonkman) இருவரும் இரட்டை சகோதரர்கள். குறிப்பாக ஒரே மாதிரி தோற்றம் கொண்ட இரட்டையர்கள். இவர்கள் நேதர் லாண்ட்ஸ் டீமில் இடம் பெற்றவர்கள். (IDENTICAL TWINS)

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஹாமிஷ் மார்ஷல் ( Hamish Marshall) மற்றும் ஜேம்ஸ் மார்ஷல் ( James Marshall) இருவரும் ஒரே மாதிரி தோற்றம் கொண்ட இரட்டையர்கள். நியூஜிலாந்த் கிரிக்கெட் டீமில் இடம் பெற்றவர்கள். (IDENTICAL ட்வின்ஸ்) 2005ம் வருடம் ஏடன் பார்க்கில் ( Edan Park) டெஸ்ட். மேட்ச் விளையாடினார்கள்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ரோஸ் சிக்னல் ( Rose Signal) மற்றும் லிஸ் சிக்னல் ( Liz Signal) இரட்டை சகோதரிகள் நியூஜிலாந்த் டீமிற்காக விளையாடியவர்கள். இந்த இரட்டையர்கள் தான், கிரிக்கெட் விளையாடிய முதல் ஜோடி இரட்டையர்கள். வருடம் 1984.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இரட்டையர்களின் அதிக முறை டெஸ்ட் மேட்சுகள் ஒரு நாள் பந்தயங்கள் முதல்தர கிரிக்கெட் ஆட்டங்கள் ஆடிய ஜோடி என்றதும் கண்கள் முன் வருபவர்கள் ஆஸ்திரே லிய கிரிக்கெட் வீரர்கள் வாக் சகோதரர்களே. (Waugh Twins).

ஸ்டீவ் வாக் (Steve Waugh) மற்றும் மார்க் வாக் (Mark Waugh) இரட்டை சகோதரர்கள் ஜூன் 2, 1965 ம் வருடம் பிறந்தனர்.

முதலில் ஸ்டீவ் பிறந்தார். நான்கு நிமிட இடைவெளிக்கு பிறகு பிறந்தவர் மார்க்.

இவர்களின் குடும்பத்தில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இருவரையும் விளையாட்டில் கவனம் செலுத்த ஊக்குவித்தனர், இவரது பெற்றோர்கள்.

சிறு வயதிலேயே கால்பந்து ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இருவரும் பல மேட்சுகள் வெற்றி பெற உதவியதுடன் பல பரிசுகளை வாங்கி குவித்தனர்.

உடன் கிரிக்கெட் விளையாட்டிலும் ஈடுபட்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இருவரில் மார்க் வாக் சிறப்பாக விளையாடி கேப்டனாக தேர்வு ஆனார். அவரது தலைமையின் கீழ் ஸ்டீவ் வாக் கிரிக்கெட் விளையாடினார்.

படிப்படியாக கால்பந்து மற்றும் கிரிக்கெட் இரண்டு விளையாட்டுகளிலும் இன்றியமையாதவர்களாக இருந்தனர் இருவரும். ஒரு கட்டத்திற்கு மேல் கிரிக்கெட் விளையாடுவதற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டியிருந்ததால், கால்பந்து ஆட்டத்தை துறந்தனர்.
முழு நேர கிரிக்கெட் வீரர்களாக மாறினர்.

கஷ்டப் பட்டு ஒரு மாதிரி உயர் நிலை கிரிக்கெட்டில் இடம் பிடித்தாலும், தக்க வைத்துக் கொள்ள பெரிதும் போராட வேண்டியிருந்தது.

முதலில் டெஸ்ட் விளையாடும் வாய்ப்பு மூத்த இரட்டையர் ஸ்டீவ் வாகிற்கு கிடைத்தது.

இவர் 1985 லிருந்து 2004 வரையில் விளையாடினார். 26 டிசம்பர் 1985 அன்று தனது முதல் டெஸ்ட் இந்தியாவிற்கு எதிராக களம் இறங்கினார். கடைசி டெஸ்டும் இந்தியாவிற்கு எதிராக ( 2 ஜனவரி 2004) 167 டெஸ்டுகளில் 10927 ரன்கள் எடுத்தார். 32 சதங்கள் குவித்தார். 92 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

325 ஒரு நாள் பந்தயங்களில் 7569 ரன்களும் 195 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

டெஸ்டுகளில் 112 , ஒரு நாள் பந்தயங்களில் 111 கேட்சுகளும் பிடித்தவர்.

இவர் தனது முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 13 ரன்களும் , இரண்டாவது இன்னிங்ஸ்சில் 5 ரன்களும் எடுத்தார்.

மார்க் வாகின் முதல் டெஸ்ட் அறிமுகம் உணர்ச்சிபூர்வமானது. ஸ்டீவ் வாக் சரிவர விளையாடாததால் அவருடைய இடத்தில் மார்க் வாக் தேர்வு செய்யப் பட்டார். 25 வயதில் அடிலெய்ட் மைதானத்தில் இவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை துவங்கியது. ( 1990 - 91 )

தனது முதல் டெஸ்டில் இங்கிலாந்திற்கு எதிராக விளையாடிய மார்க் வாக் சதம் எடுத்து அசத்தினார்.

இவர் 128 டெஸ்ட மேட்சுக்களில் 8029 ரன்களும் 59 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

244 ஒரு நாள் பந்தயங்களில் 8500 ரன்களும் 85 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

டெஸ்ட் மேட்சுகளில் 181 கேட்சுகளை பிடித்துள்ளார். சிறந்த ஸ்லிப் பீல்டராக திகழ்ந்தவர்.

டெஸ்டுகளில் 20 மற்றும் ஒரு நாள் ஆட்டங்களில் 18 சதங்களை எடுத்தவர்.

இந்த இருவரின் சகோதரர் டீன் ( Dean Waugh) வாகும் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் முதல் தர கிரிக்கெட் விளையாடியவர்.

இந்த இரட்டைச்சகோதரர்கள் நியூ சவுத் வேல்ஸ் டீமிற்கு விளையாடியவர்கள். மேலும் அயல் நாட்டு உள்ளூர் டீம்களிலும் விளையாடியவர்கள்.

ஸ்டீவ் வாகின் மகன் ஆஸ்டின் வாக் ( Austin Waugh) ஆஸ்திரேலிய 19 வயதுக்குட் பட்டவர்கள் டீமில் இடம் பெற்றவர்.

சிறு வயது முதல் இரட்டைச் சகோதரர்கள் ஸ்டீவ் மற்றும் மார்க் வாக் இருவரும் சேர்ந்தும், எதிராகவும் கிரிக்கெட் விளையாடி அனுபவம் பெற்றவர்கள்.

ஏப்ரல் 5, 1991 இரட்டை சகோதரர்கள் கிரிக்கெட் வாழ்க்கையில் மிக முக்கியமான நாள் ஆகும்.

அன்று தான் இந்த வாக் இரட்டை சகோதரர்கள் ஒன்றாக ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட். மேட்சில் சேர்ந்து முதன் முதலாக களம் இறங்கிய நாள் ஆகும்.

மேற்கு இந்திய தீவு அணிக்கு எதிராக ட்ரினிடாட் (Trinidad) மைதானத்தில். அந்த ஆட்டம் ட்ராவில் முடிந்தது. அந்த டெஸ்டில் ஸ்டீவ் வாக் 26 ரன்களும், மார்க் வாக் 64 ரன்களும் குவித்தனர்.

இந்த இரட்டைச் சகோதரர்கள் 108 டெஸ்டுகளில் சேர்ந்து விளையாடி உள்ளனர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் டீமிற்காக.

மார்க் வாக் ஒரு நாள் பந்தயங்களில் ஓப்பனிங் பேட்ஸ்மானாக முத்திரைப் பதித்தவர்.

ஸ்டீவ் வாக் ஆஸ்திரேலிய கிரிக்கெட் டீமை டெஸ்ட் மற்றும் ஒரு நாள் மேட்சுகளில் கேப்டனாக வழி நடத்தியவர்.

ஸ்டீவ் வாக் ஒரு சிறந்த புகைப்பட கலைஞர். வெளி தேசங்களுக்கு செல்லும் பொழுது பல அறிய புகைப் படங்களை எடுத்து அசத்துவார். பத்திரிகைளில் தானே கட்டுரைகள் எழுதுவார்.இவரது சுயசரிதை அவுட் அப் மை கம்போர்ட் ஜோன்( Out of My Comfort Zone) 2005 ல் வெளி வந்தது.

இவர் மனிதாப அடிப்படையில் பல சமூக சேவைகள் செய்து வருகிறார். பல பதக்கங்கள், உயரிய விருதுகளை பெற்றுள்ளவர்.

இரண்டு சகோதரர்களும் 1990ம் வருடம் ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து உலக ரிக்கார்டு ஏற்படுத்தினார்கள். மார்க் வாக் 216 ரன்களும் , ஸ்டீவ் வாக் 229 ரன்களும் எடுத்தனர். 407 நிமிடங்களில் 464 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் எடுத்தனர். வாஹா மைதானத்தில் ( WACA ground) மேற்கு ஆஸ்திரே லிய டீமிற்கு எதிராக நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக விளையாடி. இருவரும் நாட் அவுட்டுகளாக திகழ்ந்தனர்.

மார்க் வாகின் பொழுது போக்கு குதிரை பந்தயங்களில் கலந்துக் கொள்வது. குதிரைகள் வளர்ப்பது.

கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெற்றதும் மார்க் வாக்,.தற்பொழுது கிரிக்கெட் மேட்சுகளில் வர்ணனையாளராக பணி புரிகின்றார்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இந்திய இரட்டையர்கள், ரஞ்சி கோப்பையில் சேர்ந்து இருவரும் தலா சதங்கள் எடுத்து அசத்திய தமிழக வீரர்கள் பாபா அபரஜித் மற்றும் பாபா இந்திரஜித்.

2022 ரஞ்சி கோப்பை மேட்சில் சத்தீஸ்கர் டீமிற்கு
எதிராக கவுகாத்தியில் இந்த நிகழ்வு நடைப் பெற்றது.

இதற்கு முன்னால் ஒரு முதல் தர மேட்சில் இருவரும் சதங்கள் எடுத்தனர், எதிர் எதிர் டீம்களுக்கு ஆடிய பொழுது. துலீப் கோப்பை போட்டியில் இந்திரஜித் இந்திய க்ரீன் ( India Green) டீமிற்கும் அபரஜித் இந்தியா ரெட் ( India Red)டீமிற்காக விளையாடிய தருணம் அது.

வாசுதேவன் பெங்களூரு

Story first published: Thursday, January 4, 2024, 6:01 [IST]
Other articles published on Jan 4, 2024
English summary
cricket titbits - List of Twins Who Played in cricket matches கிரிக்கெட் உலகில் அசத்திய இரட்டையர்கள்.. கிரிக்கெட் வரலாற்றில் இடம்பெற்ற இரட்டையர்கள் பட்டியல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+